Published:Updated:

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

ந்த வாரம் நாம் டிராக்கிங் செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ஆர்.பி.ஜி குழுமத்தின்  ஓர் அங்கமான கே.இ.சி இன்டர்நேஷனல் லிமிடெட்.

ஆர்.பி.ஜி குழுமம்  இன்ஃப்ராஸ்ட்ரக்சர், டயர், ஐ.டி, ஹெல்த்கேர், எனர்ஜி மற்றும் பிளான்டேஷன் என பதினைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. கே.இ.சி இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் உலகளாவிய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் & கன்ஸ்ட்ரக்‌ஷன் (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் -     இ.பி.சி) நிறுவனமாகும். 1945-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், 1982-ம் ஆண்டில் ஆர்.பி.ஜி குழுமத்தினால் கையகப்படுத்தப்பட்டது.

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

தொழில் பிரிவுகள்

இந்த நிறுவனம் செயல்படும் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், மின்சாரத்தைக் கடத்துதல் (பவர் டிரான்ஸ்மிஷன்), மின்சார விநியோகம், மின்சாரம் மற்றும் டெலிபோன் துறையில் உபயோகிக்கப்படும் கேபிள்கள் உற்பத்தி, ரயில்வே துறையில் மின்மயமாக்கு தல், இருப்புப்பாதை மற்றும் பாலங்கள் கட்டுதல், சோலார் மின்சார உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சோலார் உற்பத்தி நிலையங்கள் கட்டுமானம், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டுமானம் (இ.பி.சி) போன்றவற்றில் ஈடுபட்டு

2017-18-ம் நிதியாண்டின் இறுதியில் ரூ.10,096 கோடி (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிலான வர்த்தகத்தைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், அதே கால கட்டத்தில் தன்னுடைய மொத்த வருவாயில் 45% அளவிலான வருமானத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருந்தது குறிப்பிடத் தக்க விஷயமாகும்.

இன்றைய தேதியில் இந்த நிறுவனம் உலகளாவிய அளவில்  இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில் இ.பி.சி கான்ட்ராக்ட் முறையில் நடைமுறைப்படுத்தும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. உலக அளவில் இந்தியா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோவில் மொத்தம் ஏழு இடங்களில் உற்பத்திவசதிகளைக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

நிறுவனத்தின் வளர்ச்சி

கிட்டத்தட்ட நூறு நாடுகளில் வியாபார ரீதியாகக் கால்பதித்திருக்கும் இந்த நிறுவனம்,   (இ.பி.சி: 64 நாடுகள் மின்சார/டெலிபோன் கோபுரங்கள்: 57 நாடுகள், கேபிள் ஏற்றுமதி: 72 நாடுகள்) தங்களுடைய வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்த நிறுவனம் செய்யும் தொழிலில் துறை ரீதியான விரிவாக்கங்கள் என்று பார்த்தால், 2009-ம் ஆண்டில் ரயில்வே துறைக்கான வேலை களையும், 2010-ம் ஆண்டில் கேபிள் உற்பத்தியிலும், 2011-ம் ஆண்டில் தண்ணீர் சம்பந்தப்பட்ட கட்டுமானப் பணிகளிலும், 2013-ம் ஆண்டு மின்சார விநியோகத்திற்கான துணை மின் நிலையங்களை அமைப்பதிலும், 2016-ம் ஆண்டில் ஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமானத்திலும் கால்பதித்தது இந்த நிறுவனம்.

கே.இ.சி நிறுவனத்தைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்ரீதியான திறமையும் எழுநூறுக்கும் மேற்பட்ட புராஜெக்ட்களை முடித்துக்கொடுத்த அனுபவமும் தன்னுடைய வியாபாரத்தை விருத்தி செய்ய பெரிய அளவில் கைகொடுக்கிறது.  மேலும், ஒரு துறையையோ அல்லது ஒரு நாட்டையோ சார்ந்திராமல் பல்வேறு துறைகளில் (இ.பி.சி) கால்பதித்து பல்வேறு நாடுகளில் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தியுள்ளது.  தற்சமயம், இந்த நிறுவனம் 29 நாடுகளில் இ.பி.சி புராஜெக்டுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. வர்த்தகத்தைப் பொறுத்தவரை, பவர்கிரிட் கார்ப்பரேஷன், மாநில அளவிலான மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் எனப் பல்வேறு பிரிவினருக்கும் தன்னுடைய சேவையை வழங்கிவருகிறது. 

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

எதிர்கால வளர்ச்சி

இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் துறையான மின்சார டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் துறையில் ஆப்பிரிக்கா (மொசம்பிக், கென்யா, உகாண்டா), மத்திய கிழக்கு (சவுதி அரேபியா, யுஏஇ, ஓமன்), வடஅமெரிக்கா (யுனைடெட் ஸ்டேட்ஸ், கனடா), தென் அமெரிக்கா (பிரேசில்), மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான அளவிலான மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான விரிவாக்கங்களின் தேவை இருக்கிறது என்கிறது.

மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தேவை அதிகரிக்கும்போது புதிய திட்டங் களுக்கான முதலீடுகளும், ஏற்கெனவே இருக்கும் பழைய நெட்வொர்க்குகளை மாற்றுவதற்கான முதலீடுகளும் இந்த நாடுகளில் தொடர்ந்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கும் வேளையில் இந்தத் துறையில் வியாபாரத்திற்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இந்த நிறுவனம் இயங்கிவரும் மற்றொரு துறையான கேபிள்கள் உற்பத்தியில் இந்தியாவின் ஆண்டொன்றுக்கான கேபிள்களின் தேவை தற்சமயம் சுமார் 24,000 கோடி அளவிலானதாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி கணிசமான அளவில் இருப்பதால், மின்சாரத் துறை, ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மேலும், இந்த அரசாங்கமும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.  டெலிகாம் மற்றும் மின்சாரத் துறையில் நிலையான மற்றும் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க்கின் தேவை அதிகரித்து வருவதாலும் கேபிள்கள் வர்த்தகத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ரயில்வே துறைக்கான இ.பி.சி கான்ட்ராக்ட்களில் நூறு சதவிகித இருப்புப்பாதை மின்மயமாக்கல் என்ற இலக்கு அடுத்த நான்கு வருடங்களில் எட்டப்படும் என்ற திட்டங்கள் இருப்பதால், இந்தத் துறையிலும் வியாபாரத்திற் கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

நகரங்களின் விரிவாக்கம், இருக்கிற சாலைகளில் இருக்கும் அதிக டிராபிக் போன்றவை மாஸ் ராபிட் டிரான்ஸிட் சிஸ்டம் மற்றும் மெட்ரோ ரயில்களின் தேவையை அதிகரிக்கவே செய்யும். மேலும், துறைமுகங்களை இருப்புப்பாதையுடன் இணைக்கும் திட்டம், புல்லட் ட்ரெயின் அறிமுகம் போன்றவையும் இந்தத் துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான வியாபார வாய்ப்பை சற்று அதிகரிக்கும்.

சிவில் கட்டுமானப் பிரிவில் ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா’ திட்டத்தின்கீழ் குறைந்த விலை வீடுகள் கட்டுமானம் என்பது வீடுகள் கட்டுமானத்தில் கணிசமானதொரு வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், ஸ்மார்ட் சிட்டிகள், தொழில் நகரங்கள் (இண்டஸ்ட்ரியல் காரிடர்கள்) மற்றும் வீடுகள் அதிகரிப்பதனால் தேவைப்படும் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் தேவைகள் போன்றவையும் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கான வியாபார வாய்ப்பாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 

இந்த நிறுவனம் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷனில் ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளுக்கான சேவையையும் இந்த நிறுவனத்தினால் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க  விஷயமாகும்.  டர்ன்கி முறையில் 1,200 மெகாவாட் வரையிலான டிரான்ஸ்மிஷன் வசதிகளை இந்த நிறுவனத்தினால் செய்துதர முடியும் என்பது தனிச்சிறப்பாகும்.

ரிஸ்க் ஏதும் உண்டா?

இதுபோன்ற கட்டுமானம் மற்றும் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அவை செயல்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒட்டியே வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தினால் உலகப் பொருளாதாரம் மந்த நிலையைச் சந்தித்தாலோ அல்லது எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ச்சியைச் சந்திக்காமல் போனாலோ அது இந்த நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பாதிக்கவே செய்யும். மேலும், அயல்நாடுகளில் வர்த்தகம் செய்வதால், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதலும், மூலப்பொருள்களின் விலை மாறுதலும் இந்த நிறுவனத்தின் லாபத்தைப் பதம் பார்க்கவே செய்யும் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் நீண்ட நெடிய தொழில் அனுபவத்தையும் வாடிக்கை யாளர்கள் மத்தியில் நன்மதிப்பையும் கொண்டிருக்கும் இந்த  நிறுவனத்தின் பங்குகளை சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் சந்திக்கும் கடுமையான வீழ்ச்சியின்போது வரும் விலை இறக்கத்தில், மிகவும் சிறிய எண்ணிக்கையில் வாங்கி, தங்களுடைய 3 - 5 ஆண்டுகால போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ள வாசகர்கள் தொடர்ந்து ட்ராக் செய்துவரலாம்.

ஏற்கெனவே இதே துறையில் செயல்பட்டுவரும் நிறுவனங்களின் பங்குகளைக் கொண்டிருக்கும் போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பவர்களும், பங்கை வாங்கியபின் தாங்களாகவே இந்த நிறுவனத்தின் மற்றும் துறையின் செயல்பாட்டை ட்ராக் செய்ய முடியாதவர்களும் இந்தப் பங்கைத் தவிர்ப்பதே நல்லது.

- டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol (KEC)/name of company/time duration)
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism