Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

பங்குகளின் விலைகள் சற்று சரிந்ததால், இந்த வாரம் சந்தை சற்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதலீட்டாளர்களால் சந்தை கைவிடப்பட்டு, `பிரேக் அவுட்’ முயற்சியும் தோல்வியடைந்துவிட்டதாகவே காணப் பட்டதால், வாரத்தின் தொடக்கப் பகுதியில் அனைத்துப் பங்குகளுமே வீழ்ச்சியடைந்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கரடிகள், தங்களுக்கான வாய்ப்பை எதிர் நோக்கியபடி விற்பனையை அழுத்தியதுடன், நிஃப்டியை 10600 என்ற ஒரு புதிய சரிவு நிலைக்குக் கொண்டு சென்றன. அனைவரை யும் கவரக்கூடிய வகையில் ஜனரஞ்சகமான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இதன் காரணமாக, இந்தச் சரிவுநிலை மேலும் கீழே செல்லக்கூடும் என்ற தோற்றம் காணப்பட்டதால், திடீரென வாங்குபவர்கள் தோன்றினர். இதனால், வியாழக்கிழமை பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்றத்தைக் கொண்டிருந்தோம். வெள்ளிக் கிழமையன்று பட்ஜெட்டுக்குமுன் சந்தை நம்பிக்கையற்றுக் காணப்பட்ட நிலையில், பட்ஜெட் தாக்கலான பிறகு அச்சம் விலகியதால், சந்தை மீண்டும் ஒருமுறை நிஃப்டி 11000 புள்ளிகளைத் தாண்டிய ஏற்றத்தைப் பதிவுசெய்யும் அளவுக்கு நல்ல நிலைக்குச் சென்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிராமப்புற மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகிய இரண்டு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில், சமநிலையானதொரு பட்ஜெட் வெளியானதால், சந்தை ஏற்றத்தின் போக்கில் காணப்பட்டது. இது ஒரு தெளிவான தேர்தல் பட்ஜெட் என்பதை அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிக யதார்த்தமாக உணர்த்துகின்றன. சந்தையின் சாதகமான நகர்வுக்கு இதுவும் ஓர் ஆதாரமாக இருக்கலாம்.

விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம்  மத்திய அரசு தாராளம் காட்டியுள்ளது (வாக்குகளைக் கவர்வதற்காக). ஆனால், திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதிக்கான அழுத்தம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவரங்கள் நமக்கு உணர்த்தும். அதுவே, அடுத்து வரும் நாளில் சந்தையின் எதிர்காலப் போக்குகளை உண்மையில் தீர்மானிக்கும்.

விலைவாரியாக பார்த்தால், நாம் தற்போது இரண்டு மாத உச்சத்தில் இருப்பதுடன்,  தொடர்ந்து ஒரு `பிரேக் அவுட்’க்காகவும் காத்திருக்கிறோம். தற்போது ஒரு `பிரேக் அவுட்’க்கான வாய்ப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளன. எதிர் அலைகளை உருவாக்காத, அரசுக்கு ஆதரவாக ஏராளமான புதிய ஆதரவாளர்களையும் பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகளைக்கொண்ட பட்ஜெட்டால், சந்தை மீண்டும் ஓர் ஏற்றமான போக்கைக் காண்பிக்கத் தொடங்கலாம்.

வந்துகொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் கலவையாகவே உள்ளன. மோசமான அல்லது நல்ல முடிவுகளைக் கொடுத்தவர்களை சந்தை எப்படித் தண்டிக்கப் போகிறது அல்லது அவர்களுக்குப் பரிசளிக்கப் போகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மேலும், மனநிலை எப்படி மாறியுள்ளது என்பதையும் அது நமக்குக் காட்டும். புல்லிஷாக இருந்தால், தண்டனைகளைக் காட்டிலும் பரிசுகள் பெரிதாக இருக்கும். சில (ஜீ, வேதாந்தா, டி.ஹெச்.எஃப்.எல் போன்ற) அவலமான நிர்வாகத்தைக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர்த்துவிடலாம்.

எனவே, சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதைச் சூசகமாக உணர்ந்துகொள்ள, தொடர்ந்துவரும் சென்டிமென்டுகளைக் கண்காணிக்க வேண்டும். இண்டெக்ஸ் மீண்டும் ஒருமுறை இறங்கினால், நாம் மீண்டும் பங்குகளை வாங்கலாம்.

கிராபைட் இந்தியா (GRAPHITE)

தற்போதைய விலை: ரூ.556.85

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிராபைட் இந்தியா நிறுவனப் பங்குகள் எதிர்பாராதவகையில் ரூ.460 அருகே சரிவைச் சந்தித்துள்ள சூழலில், சில அசாதாரண அளவில் பங்கு விற்பனை அதிகமாக நடந்ததால் கடந்த சில நாள்களாக விலை மீண்டெழுந்துள்ளது. சில பெரிய முதலீட்டாளர்கள் வெளியேறி இருப்பதையும், சிலர் புதிதாக வந்திருப்பதையுமே அது காட்டுகிறது.

இதனால் ஏற்பட்ட இறக்கமானது, பங்கு விலையைக் குறைய வைத்து, அடிமட்டத்தில் சில ஃபைபனோசி ரீட்ரேஸ்மென்ட் சப்போர்ட்டைப் பெற வைத்துள்ளது. உடனடியாக மேலெழும் விலை முதலீட்டாளர்களை வாங்கத் தூண்டுகிறது. இந்தப் பங்கு விலை ஏறி, வரும் வாரங்களில் ரூ.670-700 என்ற அளவுக்கு வரக்கூடும். தற்போதைய விலையில் வாங்கலாம்.

இன்டர்நேஷனல் பேப்பர் ஏபிபிஎம் (IPAPPM)

தற்போதைய விலை: ரூ.473.60

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பேப்பர் நிறுவனப் பங்குகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கும் சூழலில், சமீபத்தில் சில சரிவுகளுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் ஐ.பி.ஏ.பி.பி.எம் நிறுவனம் நல்ல காலாண்டு முடிவுகளைக் கொடுத்துள்ளதால், ஏற்றமான போக்கு தெளிவாகத் தெரிகிறது. இந்த நிறுவனப் பங்குகள் தெளிவாகச் சரிசெய்துகொள்ளும் பேட்டர்னை சார்ட்டில் உருவாக்கியிருப்பதை நாம் காணலாம். தற்போது அதிகமான அளவு பங்கு விற்பனை நடந்துள்ளது தெரிகிறது.

மிகப் பெரிய அளவில் மீண்டு வந்துள்ளதால், சரிவு நிலை, முடிவுக்கு வந்துள்ளதைக் காட்டுகிறது. குறுகிய கால இலக்காக ரூ.520 வைத்து வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.460.

விப்ரோ (WIPRO)

தற்போதைய விலை: ரூ.371.55

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.டி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு  இருக்கிறது. சமீப காலங்களில் ஐ.டி நிறுவனப் பங்குகளின் இண்டெக்ஸ், மற்ற துறை  இண்டெக்ஸைவிட மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது.

தற்போது விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், சந்தையின் எதிர்பார்ப்பை விட சிறப்பாக வந்துள்ளது. இது, விப்ரோ நிறுவனத்தின் செயல்திறனை இந்த வாரத்தில் மற்ற ஐ.டி. நிறுவனங்களைவிட நல்ல நிலையில் நிறைவு செய்ய உதவியுள்ளது.

இந்த நிறுவனம் இதே நிலையில் தொடர்ந்தால், பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.390 என்ற அளவை எட்டக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.360 வைத்து வாங்கவும். 

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism