Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

டுத்த பத்து ஆண்டுகளில் இந்திய குடும்பங்களின் சேமிப்பானது அமெரிக்க டாலர் அளவீட்டில் 500 பில்லியன் டாலர் என்ற அளவினை எட்டும். இந்த மொத்தச் சேமிப்பில் 100 பில்லியன் டாலர் அளவிலான பணமானது நிலம், தங்கம் போன்ற முதலீடுகளிலிருந்து மாறி, நிதிச்  சந்தைக்கு முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களில் நாங்கள் சென்ற இந்திய சிறு நகரங்களில் இருக்கும் நிலைமையை ஆராய்ந்தால், அடுத்த பத்து வருடங்களில் நமது நிதிச் சந்தையை நோக்கிவரும் சேமிப்புகள் மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு

இந்தியக் குடும்பங்களின் சேமிப்பில் பெரும் பகுதி ரியல் அஸெட்களிலேயே (தங்கம், நிலம் போன்றவை) இருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய வித்தியாசமே. உலக அளவில் இதனை ஒப்பிட்டால், இந்தியா இந்த விஷயத்தில் பெரிய அளவில் மாறுபட்டிருக்கிறது. அதிலும் வயது குறைவான அங்கத்தினர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்களில் இது இன்னமுமே அதிகமாக இருக்கிறது.

மேலும், மொத்தச் சேமிப்பில் கடைசி 40  சதவிகிதத்தில் இருக்கும் குடும்பங்களின் சொத்துகள் பெரும்பாலும் ரியல் அஸெட் களாகவே இருக்கிறது. அடுத்த 15 வருடங்களில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இருக்கும் எண்ணிக்கையைவிட 75% அதிகரிக்கப் போகிறது. இந்த நபர்களில் மிக மிகக் குறைவான வர்களே தங்களுடைய வயது முதிர்வின்போது தேவைப்படும் பணத்திற்காகத் தனியார் ஓய்வூதியத் திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

மேலும், அனைத்து வயதிலும் இருக்கும் பணியாளர்கள் பலரும் தங்களுடைய ஓய்வூதியத் திற்கான திடமான திட்டங்கள் எதையும் தீட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு குறித்து மிகவும் அசிரத்தையாகப் பலரும் இருந்து வருவதும், காப்பீட்டுத் திட்டங்கள் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பதும் மிகப்பெரிய அதிர்வலை களை எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புள்ளது என குடும்பங்களின் நிதிநிலை குறித்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறிப்பிட்டுச் சொல்கிறது.

ஓய்வூதியக் கணக்கு

நடுத்தர வசதிவாய்ந்தவர்களுக்கான ஓய்வூதியக் கணக்கு என்ன என்று பார்ப்போம். செபியிடம் பதிவுபெற்ற ஒரு முதலீட்டு ஆலோசகராக ஒருவர் இரண்டு தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும். அதில் இரண்டாவது தேர்வுக்கான பாடத் திட்டத்தில் ‘ஓய்வூதியத்திற்கான நிதித் திட்டங்கள்’ குறித்த விஷயங்கள் தரப்பட்டுள்ளது. அதில் ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்திற்குத் தேவையான ஓய்வூதியம் குறித்த கணக்குத் தரப்பட்டுள்ளது. அந்தக் கணக்குகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்

இந்திய மத்திய தரக் குடும்பம் ஆண்டொன்றுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் (வரிகளுக்குப் பின்னால்) வருமானத்தைக் கொண்டிருக்கிறது என்று கொள்வோம். இந்தக் குடும்பத்தின் அங்கத்தினர் களுக்கு இன்னமும் 20 வருடகாலம் வேலைவாய்ப்பு இருக்கிறது என்றும், அதற்குப்பின்னரே அவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படி ஓய்வுபெறும்போது, இன்றைக்கு வாழ்வதைப் போன்ற வசதியுடன் வாழ விரும்பினால், அவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் தேவைப்படும். இந்த அளவிற்கான ஆண்டு வருவாயைப் பெற அந்தக் குடும்பம் இன்றைய பணமதிப்பீட்டில் ரூ.15 கோடியைச் சேமிக்க வேண்டியிருக்கும். இது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்

நாங்கள் அகில இந்தியரீதியாக எங்களுடைய பணி நிமித்தமாகப் பயணித்தபோது சிறு மற்றும் குறுதொழில்களை நடத்தும் தொழில் அதிபர்கள் மேலே சொன்ன ஓய்வூதியக் கணக்கைப் புரிந்துகொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது ஆச்சர்யமே. அவர்களுக்கு அவர்களிடம் இருக்கும் நிலம், தங்கம் போன்றவை அவர்களுடைய ஓய்வுக்காலத்தில் தேவைப்படும் வருமானத்திற்கு வழிசெய்யாது என்பது புரிந்திருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையோ 95%  இந்தியக் குடும்பங்கள் வீடு, நிலம் மற்றும் ஒட்டுமொத்த முதலீடுகளையும் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில், இந்த ரியல் அஸெட்கள் (தங்கம், நிலம் போன்றவை) பணவீக்கத்திற்குத் தேவையான அளவு வருமானத்தைக்கூட தராது என்று அனைத்து இந்தியர்களும் உணர்ந்துகொண்டுள்ளனர். 

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

துரதிர்ஷ்டவசமாக, மேலே சொன்ன சிறு மற்றும் குறுந் தொழில் அதிபர்களோ, ஏனைய மத்திய வர்க்கக் குடும்பங்களோ தங்களுடைய ஓய்வுக்காலத்திற்குத் தேவையான (ஓய்வு பெற்றபின்  25 ஆண்டுக் காலம் வரை தற்போது வாழும் உயர் நடுத்தர வாழ்க்கைத் தரத்தில் வாழத் தேவையான) ரூ.15 கோடி என்ற சேமிப்பு இலக்குகளை அடைவது கொஞ்சம் கடினமான விஷயமேயாகும்.

சிறு நகரங்களில்...

இதை உணர்ந்து கொண்டதனாலேயே இந்த வகைத் தொழிலதிபர்கள் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு குறித்து அவர்களுக்கு விளக்கும்போது ஆர்வமாக அதனைக் கேட்க ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக, தமிழகத்தை எடுத்துக்கொண்டால், சென்னையில் பங்குச் சந்தை முதலீடு குறித்து ஈடுபாடு ஒரு தொழிலதிபருக்கு வருவதற்கு ஒரு மணிநேரமும், கோயம்புத்தூரில் 45 நிமிடமும், திருப்பூரில் 40 நிமிடமும், ஈரோட்டில் 35  நிமிடமும் பேசினாலே போதுமானதாக இருக்கிறது.   மஹாராஷ்டிராவிலும் கிட்டத்தட்ட இதே கால அளவுதான் தேவை. இந்தக் கால அளவீட்டை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால்,  பின்வரும் விஷயங்கள் நமக்குப் புரியும்.

1. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் சேமிப்புச் சந்தை முதலீடாக மாறுதல் ஏற்கெனவே கணிசமான அளவு நடந்துவிட்டது. ஆனால், சிறு நகரங்களில் தொழில்முனைவோர்கள் ஆயுள்காப்பீடு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளைத் தாண்டி செல்லவில்லை.

2. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஓரளவுக்கு இன்றைக்கும் கைமாறுகின்றன. அதேசமயம், சிறுநகரங்களில் ரியல் எஸ்டேட் விற்பனை என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகிவிட்டது.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

3. பெரு நகரங்களில் நாங்கள் சந்தித்த பலரும் ‘ஒயிட் காலர்’ எனப்படும் அலுவலகப் பணியாளர்கள். அவர்கள் தங்களுக்கு நிலையான (சரியோ/தவறோ!) வருமானம் தொடரும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதேசமயம், சிறு நகரங்களில் நாங்கள் சந்தித்த பலரும் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் களாவார்கள். அவர்கள் அவர்களுடைய திறமை யின் அடிப்படையிலேயே வாழ்க்கையை நடத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்கள் செய்யும் தொழிலில் அன்றாடம் பல்வேறு ஏற்ற, இறக்கச் சூழல்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். அதனாலேயே பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்து உடனடிப் புரிந்து கொள்ளலும், முறையாகச் செய்யப்படும் முதலீடு களில் இருக்கும் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் சுலபத்தில் புரிந்துகொள்கிறார்கள்.

முதலீட்டில் பாதிப்புகள்

இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் என்பது ஆண்டொன்றுக்கு 2,000 அமெரிக்க டாலர் அளவீட்டில் தற்போது இருக்கிறது. இது சராசரியாக 5% ஆண்டொன்றுக்கு  (கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற வளர்ச்சியையே இது கண்டுள்ளது) அடுத்தப் பத்து ஆண்டுக்காலம் வளர்ச்சியடைந்தால், அடுத்த பத்து ஆண்டு களுக்குப் பிறகு தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் 3,300 டாலர் என்ற அளவினை எட்டும். நாட்டின் மக்கள் தொகை 1.5 பில்லியன் என்று மதிப்பிட்டு இவர்கள் அனைவரும் சேர்ந்து அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஐந்து டிரில்லியன் டாலர் அளவிலான ஜி.டி.பி அளவை இந்தியா எட்டிப்பிடிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தற்சமயம் ஒட்டுமொத்த இந்தியக் குடும்பச் சேமிப்பில் பாதியே நிதி மற்றும் நிதிசார்ந்த முதலீடாக இருக்கிறது. மீதமுள்ள 50% நிலம், தங்கம் போன்ற முதலீடுகளாகவே இருக்கிறது. இந்த நிலை தொடரும் என்று எடுத்துக் கொண்டால்கூட அடுத்தப் பத்து ஆண்டுகளில் இந்தியக் குடும்பங்களின் மொத்தச் சேமிப்பானது, அமெரிக்க டாலர் அளவீட்டில் 500 பில்லியனைத் தொட்டுவிடும்.

இந்தச் சேமிப்பு ஒருபுறம் இருக்க, ஓய்வூதியத் தேவைகள் பற்றி புரிந்துகொண்ட சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள் தங்களுடைய ரியல் எஸ்டேட் முதலீடுகளை மாற்றி அமைத்து பங்குச் சந்தை முதலீடுகளின் திசையில் பயணிப்பார்கள்.

இதில் முக்கியமான கேள்வி,  எந்த அளவிற்கு இந்த மாறுதல் என்பது நடக்கும் என்பதுதான். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, 95 சதவிகித அளவிலான முதலீடு இந்த ரியல் அஸெட் களில் இருக்கிறது என்று தெரிய வருகிறது. இதில் 1% முதலீடு ஆண்டொன்றுக்குக் குறைந்து, பங்குச் சந்தையை நோக்கி நகர்ந்தால் (கிரெடிட் சூஸியின் உலக வெல்த் ரிப்போர்ட் இதை உலகளாவிய நிகழ்வு என்று குறிப்பிடுகிறது) கூட ஆண்டொன்றுக்கு 100 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளாக மாற வாய்ப்புள்ளது என்கிறது.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

இப்படிப் புதிதாக 500 பில்லியன் டாலர் சேமிப்பும், பழைய முதலீடுகளிலிருந்து 100 பில்லியன் டாலர் அளவிலான சேமிப்பு மாறுதலும் சந்தை சார்ந்த முதலீட்டை நோக்கி வரும்போது இன்றைக்கு சந்தையில் இருக்கும் 200 பில்லியன் டாலர் முதலீடு என்பது 600 பில்லியன் டாலர் அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதே காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானில் வயதானவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதனால் அங்கே நிதி நிலைமைகள் கொஞ்சம் கணிசமாக மாறும் என்பதால், அந்த நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் முதலீடுகள் கணிசமாகத் திரும்பப் பெறப்படுவதற்கான (ஓய்வூதியத்திற்கு வழிவகை செய்வதற்காக) வாய்ப்புகளே அதிகம். 

இன்றைக்கு இந்தியக் கடன் சந்தை பெரிய அளவிலான வர்த்தகத்திற்கு வாய்ப்பு இல்லாததாக இருப்பதைப் போன்றே எதிர்காலத்திலும் தொடரும் என்று வைத்துக் கொண்டால், கடன் சந்தையும், பங்குச் சந்தையும் இதுபோன்று அதிகரிக்கும் வரலாறு காணாத முதலீட்டைத் தாங்கமுடியாது போகும். அந்த சூழ்நிலையில், இந்தியாவிலிருந்து முதலீடுகள் அயல்நாடுகளை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த தலைமுறை வெளிநாட்டு முதலீட்டாளர் களாக இந்திய நிதி மேலாண்மை நிர்வாகிகள் மாற வாய்ப்புள்ளது.

இந்த நிலை உருவானால், இந்த இந்திய ஃபண்ட் மேனேஜர்கள் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு இருக்கும் சூழலான மேற்கத்திய முதலீட்டாளர்கள் மும்பையில் பங்குத் தரகர்கள் நடத்தும் முதலீட்டு மாநாடுகளில் கலந்துகொள்வது மாறி, நம்முடைய முதலீட்டு நிர்வாகிகள் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டு வாய்ப்பு களைத் தேடும் காலத்தை என்னால் இன்றே யூகிக்க முடிகிறது!

- செளரப் முகர்ஜி , நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)