Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

ரே விஷயத்தை ஒரே மாதிரியாய் திரும்பத் திரும்ப செய்துவிட்டு, வேறுவிதமான பலாபலன்களை எதிர்பார்ப்பதன் பெயர்தான் பைத்தியக்காரத்தனம். - அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 
வங்கிகளைப் பாதித்த விஷயங்கள் பலவும் ஒரு வைரஸைப்போல,  நிதி மற்றும் பாண்ட் சந்தைகளுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய ஒட்டுமொத்த தொகுப்பான அறுபது ஆண்டுகால அனுபவத்தில் நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் 80% அளவு உண்மையை வெளிப்படுத்தும் பலனைத் தருபவயாக இல்லை. இதனாலேயே முதலீட்டாளர்கள் தங்களுடைய தீர்க்கமான தடயவியல் அறிவுடன்கூடிய நிறுவனம் வெளியிடும் கணக்குவழக்குகளைப் புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனத்துக்கான இயக்குநர்களை பங்குதாரர் களிடமிருந்து (பங்கு முதலீட்டாளர்கள்) பெரிதாகவோ,  சிறிதாகவோ எந்தவித யோசனையையும் கேட்காமலேயே நிறுவனங்களின் நிர்வாகிகள் பெரும்பாலான சமயம் நியமிக்கிறார்கள். இது நிர்வாகிகளையும், பல முக்கிய முடிவுகளை எடுக்கும் பலம் பொருந்திய உள்ளாட்களையும் (இன்சைடர்ஸ்) அதிக பலம்கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. இதனால் இவர்கள் பங்குதாரர்களை மதிக்காத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

மேலும், இன்றைய நடைமுறையில் நிறுவனங் களை நிர்வகிக்கும் முறையில் முதலீட்டாளர்களின் பலமிழப்பை ஈடுசெய்வதற்கான நபர்கள் வேறு சிலர் இருக்கவே செய்கின்றனர். இவர்களை வாயிற் காப்பாளர்கள் (Gatekeepers) என்று சொல்லலாம். நிறுவனம் குறித்த சரியான தகவல்கள், வெளியுலகை முக்கியமாக முதலீட்டாளர்களைச் சென்றடைவதை இவர்களே உறுதிசெய்யவேண்டியவர்கள்.

நிறுவனங்கள் வாங்கும் கடனின் பாதுகாப்புத் தன்மையை (திருப்பித்தர இயலும் நிலை மற்றும் திருப்பித்தரும் மனநிலை போன்றவை) அளவீடு செய்து சொல்லும் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள், நிறுவனத்தின் கணக்குவழக்குகள் சரியான முறையிலேயே கணக்கீடு செய்து தரப் பட்டுள்ளது என்பதைச் சொல்லும் ஆடிட்டர்கள், பங்குகளை ஆராய்ச்சி செய்யும் அனலிஸ்ட்கள் போன்ற மூன்று பேரையுமே நாம் வாயிற் காப்பாளர்கள் என்று அழைக்கலாம்.

இந்த வாயிற்காப்பாளர்களே ஐ.எல்&எஃப்.எஸ்-நிறுவனத்தில் தங்கள் கடமையைச் செய்யாமல் கோட்டைவிட்டவர்கள் ஆவார்கள். 2017-18-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் செயல் லாபம் (ஆபரேட்டிங் பிராஃபிட்) ரூ.7,267.30 கோடியாக இருந்தது.

அதேசமயம், அந்த நிறுவனத்தின் கடனின் அளவு ரூ.91,091.30 கோடியாக  இருந்தது. 2018-ம் ஆண்டில் அந்த நிறுவனம் வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்தும் அளவுக்குக்கூட லாபத்தை ஈட்டவில்லை. அதனால் அந்த நிறுவனம் தன்னுடைய கடன்களைத் திருப்பி அளிக்கத் தவறியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தை வழிநடத்துவதில் தோல்வியுற்றார்கள் என்று சொல்லலாம். அதேபோல, கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள், ஆடிட்டர்கள், அனலிஸ்ட்கள் போன்றவர்களும் அவரவர்களின் வேலையைச் சரிவர செய்யாமல் கோட்டைவிட்டனர் என்றே நாம் சொல்ல வேண்டும். (இது தொடர்பாக எக்னாமிக் டைம்ஸ் நாளிதழில் வந்த கட்டுரை: https://economictimes.indiatimes.com/markets/stocks/news/ilfs-mess-how-gatekeeper-rating-agencies-auditors-analysts-let-you-down/articleshow/66457372.cms)

 வங்கிகளிலிருந்து நிதிச்சந்தைக்கு... 

2013-2017-ம் ஆண்டுகளுக்கு இடையே வங்கி களின் வாராக் கடன் சுமை என்பது அதிகரிக்க ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்திலிருந்து மொத்தக் கடன் தொகையில் 15% அளவிலான கடன் தொகை வாராக் கடனாக மாற ஆரம்பித்துள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இந்தப் பிரச்னை ஏனைய நிதிச் சந்தைகளுக்கும் பரவுவதற்கு எவ்வளவு ஆண்டுக் காலம் ஆகும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தோம். அமைப்பு ரீதியாக மிகவும் சிக்கலான சந்தைகள் கண்ணுக்கு தெரியும் மற்றும் கையில் இருக்கும் சில சாதாரண விஷயங்களைக்கூட கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படுவதில்லை. அதனாலேயே 2017-ம் ஆண்டில் நம்முடைய அனைத்துச் சந்தைகளிலும் மிகப்பெரிய ஏற்றத்தையும் சிறப்பான செயல் பாட்டையும் சந்திக்க முடிந்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின்னால்,  வங்கிகளில் செலுத்தப்பட்டுக் கணக்கில் இருந்த தொகை மிகவும் அதிக அளவில் லிக்விட்டியை உருவாக்கியது.  அதனால் பங்குச் சந்தை உயர்ந்தது  (நிஃப்டி அந்த வருடம் 29% அதிகரித்தது). மேலும், மூன்று மாதத்திற்கான 2017-ம் ஆண்டு ஜூலை மாத கமர்ஷியல் பேப்பர்களின் வட்டி ஆறு சதவிகிதமாகக் குறைந்தது (அதற்கு முந்தைய அதிக வட்டி செப்டம்பர் 2013-ம் ஆண்டில் 12 சதவிகிதமாக இருந்தது).

2017-ல் நாம் கண்ட ஏற்றம் என்பது வங்கிகளின் பிரச்னை ஏதோ அவர்களின் தனிப்பட்ட பிரச்னையாகத் தோன்றும் அளவுக்கு நம்மைக் கண்டுகொள்ள விடாமல் செய்தது. மேலும், முக்கியமாக இந்த ஏற்றம் என்பது 2014-2017 காலகட்டத்தில் ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் என ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் இந்த வாராக் கடன்களை உருவாக்கிய புரமோட்டர்களின் மீது கணிசமான நடவடிக்கையை எடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளின் பணத்தைத் தவறாக உபயோகிக்க வாய்ப்பிருக்கும் புரமோட்டர் களுக்கு நல்லதொரு கடிவாளத்தைப் போட்டது.

2017-ம் ஆண்டில் இந்த புரமோட்டர்கள் பணத்தைத் திரட்ட நிதிச் சந்தையை நோக்கிச் சென்றனர். மேலும், அவர்கள் என்.சி.டி எனும் நான்-கன்வர்டிபிள் டிபெஞ்சர்கள் வாயிலாக (இதுபோன்ற பேர்வழிகளைக் கையாளத் தெரியாமல் இருந்த) மியூச்சுவல் ஃபண்டுகளிடம் இருந்தும் கடனாகப் பெற ஆரம்பித்தனர்.

பின்னர், கடந்த 18 மாத காலகட்டத்தில் (இதற்குமுன் எக்கச்சக்கமாக இருந்தது) லிக்விடிட்டி நிலைமை சாதாரணமாக ஆரம்பித்தது. இந்த சாதாரணமான நிலை என்பது புரமோட்டர்களுக்குப் பணம் கிடைக்க வழிவகை செய்யாமல் போனது. இந்த புரமோட்டர்கள் அரசாங்கத்திடம் ரிசர்வ் வங்கி அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளுக்குப் போட்ட கடுமை யான கட்டுப்பாடுகள் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்றும், அதனை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டனர்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

ரிசர்வ் வங்கியில் நடந்த விஷயங்களைத் தாண்டி நாம் இப்போது பார்த்தால், இந்திய நிதிச் சந்தை தற்போது சந்திக்கும் சவால்களே பெரிய விஷயமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. வங்கி களைப் பாதித்த விஷயங்களே இன்றைக்கு கமர்ஷியல் பேப்பர் மற்றும் நான்-கன்வர்டிபிள் டிபெஞ்சர் (என்.சி.டி) சந்தையையும் பாதித்திருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளாக இந்தத் துறையில் செயல்பட்டு வருபவர்களிடம் நாங்கள் பேசிய திலிருந்து தெரிந்துகொண்டது என்னவென்றால், வங்கிகள் இந்த வகை புரமோட்டர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்குக்கூட, இவர்கள் அதைத் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதே ஆகும். இது எதைக் காட்டுகிறது என்றால், கமர்ஷியல் பேப்பர் மற்றும் என்.சி.டி சந்தைகளும் வங்கிகள் சந்தித்ததைப் போன்ற சூழ்நிலையே சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்பதைத்தான்.

 இனி என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது?

இந்திய சந்தைகளில் என்ன நடக்கிறது எனக் கண்டுபிடிப்பது பெரிய கடினமான காரியமாக இல்லை. அமெரிக்காவில் 10 முதல் 20 வருடங் களுக்குமுன் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளும் ஆடிட்டர்களும் செய்யத் தவறியதையே இன்றைக்கு இந்தியாவிலும் செய்யத் தவறி யுள்ளனர். எந்தவொரு நியாயமான மனிதரும் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியும், ஆடிட்டரும் தங்களுடைய கட்டணத்தைச் செலுத்தும் நிறுவனங்களுக்கு எதிரான கருத்தை பெரும்பாலும் சொல்லாது போவார்கள் என்றே யூகிப்பார்.

இந்தியாவில் இந்த நிலை இன்னமும் உக்கிரமாக காரணம் என்ன என்று பார்த்தால், இங்கு இருக்கும் சட்டரீதியான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே நகரும் என்பதுதான். நிறுவனத்தி லிருந்து கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு (conflict of interest) அவர்கள் குறித்த அறிக்கைகளைத் தரும் கிரெடிட் ரேட்டிங் மற்றும் ஆடிட்டர்கள் செயலாற்றும் முறை இருக்கும் வரை என்னதான் என்.சி.எல்.டி எனும் தீர்ப்பாயம் தீவிரமாகச் செயல்பட்டாலும் பெரிய அளவில் புரமோட்டர்களின் நடவடிக்கைகளை மாற்றாது என்றே கொள்ளவேண்டும். 

அமெரிக்காவின் புகழ்பெற்ற திவால் (Bankruptcy) சட்டத்தின் உதவியினாலேயும்கூட  பாண்ட் முதலீட்டாளர்களுக்கு முழுவது மாக உதவ முடியவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
 முதலீட்டாளர்களாக நாம் என்ன செய்யவேண்டும்?

ஒரு முதலீட்டாளராக ஆடிட்டிங் மற்றும் ரேட்டிங் என்பது முழுக்க முழுக்க மாற்றியமைக்கப்படவேண்டிய ஒரு நடைமுறை என்பதை நாம் முழுவதுமாகப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

நிதி திரட்டுபவர்கள் ஆடிட்டர்களுக்கும், ரேட்டிங் நிறுவனங்களுக்கும் கட்டணம் செலுத்தும் அதேவேளையில், அவர்கள் செயல்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத வண்ணம் நடைமுறைகள் அமல்படுத்தப் படவேண்டும். 

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

ரெகுலேட்டர்கள் நாங்களே ஆடிட்டர்கள் மற்றும் ரேட்டிங் ஏஜென்சிகளை அமர்த்துவோம் என்று சொன்னாலுமே அந்த வகை நடைமுறை ஆன்லைன் லாட்டரி முறையிலேயே   நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தவகை மாற்றங்களெல்லாம் நாளடைவில் வர வாய்ப்புள்ளது என்றாலும், இன்றைக்கு முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களுடைய தீர்க்கமான தடயவியல் அறிவுடன்கூடிய நிறுவனம் வெளியிடும் கணக்குவழக்குகளைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

பிரச்னைகளின் தீவிரம் அதிகமாகத் தென்படுவதால், பலவித முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்படவேண்டிய கட்டாயமானதொரு காலகட்டம் நமக்கு அருகே நெருங்கிக் கொண்டிருக்கிறது.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

ரெகுலேட்டரி நடவடிக்கைகள் மூலம் சுலபத்தில் இந்த நிறுவனங் களையும்/சிஸ்டத்தையும் சரிசெய்துவிட முடியும். அப்படிப்பட்ட மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது நிறுவனங்களின் இடையே இருக்கும் உதவாக்கரை நிறுவனங்கள் பலவும் சிஸ்டத்தைவிட்டே வெளியேற்றப்படும் நிலையே உருவாகும்.

அந்தச்சூழ்நிலையில் இந்தியாவில் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கங் களும், வேலைவாய்ப்புகளும்  சிலகாலம் ஸ்தம்பித்துப்போக வாய்ப்புள்ளது. 

இதுபோன்ற நடவடிக்கைகள் அத்தியாவசியமான ஒன்றாக மாறிக்கொண்டு இருக்கும் சூழலில் நாம் இருப்பதாலேயே, வருகிற தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள் என்பது நம்முடைய நாட்டின் ஃபைனான்ஷியல் சிஸ்டத்திற்கும், பொருளாதாரத்திற்கும் முக்கியமான விஷயமாக இல்லாமல் போய்விட்டது என்று நான் சொல்கிறேன்.

(முதலீடு தொடரும்)

- செளரப் முகர்ஜி , நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)