பி .எஸ்.சி 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள 500 நிறுவனப் பங்குகளில் சுமார் 60 பங்கு கள் கடந்த வாரத்தில், அவற்றின் 52 வார விலை இறக்கத்தில் வர்த்தகம் ஆனது. இந்தப் பங்குகள் இப்படி விலை குறைந்து வர்த்தகமாக என்ன காரணம், இந்தப் பங்குகளை ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தால் அதை விற்கலாமா அல்லது புதிதாக வாங்கி முதலீடு செய்யலாமா என்பது போன்ற பல கேள்விகள் முதலீட்டாளர்கள் இடையே எழுந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களில் 437 நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாகி யுள்ளன. இதில், 193 நிறுவனங்களின் (44.2% நிறுவனங்கள்) நிதி நிலை முடிவுகள் சாதகமாக இருக்கின்றன. 105 நிறுவனங்களின் (24%) முடிவுகள் பாதகமாக வந்துள்ளன. 139 நிறுவனங்களின் (31.8%) முடிவுகள் பெரிய லாபமோ இழப்போ இல்லாத நடுத்தரமான முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன.

காலாண்டு முடிவுகள் இப்படிக் கலவையாக இருந்தாலும்கூட சுமார் 12% நிறுவனப் பங்குகள், 52 வார குறைவான விலையில் வர்த்தகமாகி வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் சாதகமான காலாண்டு முடிவுகளை அறிவித்த போதும், பங்கு விலை குறைந்திருப்பது கவனிக்கத் தக்கது. இது, காலாண்டு முடிவுகளை வைத்து ஒரு நிறுவனப் பங்கு விலையின் போக்கைத் தீர்மானிப்பதில் இருக்கும் முரண்பாட்டைக் காட்டுகிறது. இந்த முரண்பாட்டிற்கான முக்கியக் காரணங்கள் சிலவற்றைக் காண்போம்.

1. மதிப்பீடு

நிறுவனங்களின் முந்தைய காலாண்டு முடிவு மற்றும் அதுசார்ந்த துறைகளின் வளர்ச்சி எதிர்பார்ப்பால் பங்குகளின் மதிப்பீடு உயர்வதால் முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஒருவேளை, இந்த நிலை நீடிக்காவிட்டால், பங்குகள் பெருமளவு விற்கப்படும் சூழல் உருவாகி அதன் காரணமாக பங்கு விலை சரியக்கூடும். அப்போது அந்தப் பங்கின் சரியான விலையை சந்தையே தீர்மானிக்கும்.

இந்தியப் பங்குகள், எம்.எஸ்.சி.ஐ வேர்ல்டு இண்டெக்ஸோடு ஒப்பிடுகையில் 18% பிரீமியத்தில் விற்பனையாகின்றன. காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதகமான முடிவுகள் வந்திருப்பது பங்குகளின் விலையில் எதிரொலிக்கிறது.

2. பாதகமான காலாண்டு முடிவுகள்

மோசமான செயல்பாடு காரணமாகத் துறை களின் மீதான மதிப்பு மாறும்போது, அது பங்குகளின் விலையில் சரிவை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, இரண்டாவது காலாண்டில் ஆட்டோமொபைல் துறை நல்ல முடிவுகளைத் தந்தது. ஆனால், மூன்றாவது காலாண்டில் இந்தத் துறை, மோசமான முடிவுகளைத் தந்தது. எனவே, துறைசார்ந்த மதிப்பு மாற்றத்தால், அந்தத் துறையில் மோசமாகச் செயல்பட்ட நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைகிறது.

3. பங்குகள் அடமானம் அதிகரித்தல்

நிறுவனத்தின் வளர்ச்சி தொய்வடையும்போது அதன் முதலீட்டுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, நிறுவனங்கள் அவற்றின் பங்குகளில் ஒரு பகுதியை வங்கியில் அடமானம் வைத்து தேவையைப் பூர்த்திசெய்வது அதிகரித்து வருகிறது. இதுபோல அடமானம் வைக்கும் பங்குகளின் விகிதம் அதிகரிக்கும்போது முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் (ROI) எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்காது.

அதேபோல வணிகத்தை விரிவாக்கம் செய்யும்போதும் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வருவதில்லை. இதுபோன்ற சூழல் களில் ரிஸ்க் அதிகம் இருப்பதால் பங்கு விலைச் சரிவில் முடிகிறது.

செயல்பாட்டு திட்டம்

52 வார விலையைவிடக் குறைந்த விலையில் விற்பனையாகும் 11.8% பங்குகள், மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவுகளில் ஏதேனுமொன்றில் இருக்கக் கூடும். முதலீட்டாளரின் செயல்பாடு பின்வருவன வற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

1. பங்குகளை நாம் வைத்திருக்கும் கால அளவீடு

2. காலாண்டு முடிவுகளின் தாக்கம் குறித்த மதிப்பீடு: ஒரேயொரு காலாண்டில் மட்டும் முடிவுகள் மாறியுள்ளனவா அல்லது தொடர்ந்து நீண்ட காலமாக காலாண்டு முடிவுகள் சரிவில் உள்ளனவா எனப் பார்க்க வேண்டும்.

3. நாட்டின் பொருளாதார நிலை: அரசாங்கம், உலக அரசியல் சூழல்களின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

4. நிர்வாகத்தின் கொள்கைத் திட்டமிடல்

பங்கு முதலீட்டாளராக, மேற்கூறியவற்றுக்குச் சாதகமான பதில்களைப் பெற முடிந்தால் முதலீட்டைத் தைரியமாகத் தொடரலாம்.

திருப்தியளிப்பதாக இல்லையென்றால் பங்கு களை விற்றுவிட்டு வெளியேறலாம். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காமல், ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் முடிவெடுத்தால் வெற்றிகரமான முதலீட்டாளராக இருக்கலாம்.

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

தொகுப்பு: தெ.சு.கவுதமன்