சில்லறை முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்வது பங்கு சார்ந்த திட்டங்களில் தான் என்பதால், இந்த வாரம் மல்டிகேப் ஃபண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளோம். செபி விதிமுறை களின்படி, இந்தவகை ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் குறைந்தபட்சமாக 65% பங்குகள் மற்றும் அவற்றைச் சார்ந்த முதலீடுகளில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம், சந்தையின் போக்கையொட்டி ஃபண்ட் மேனேஜர், லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் எந்தவித விகிதா சாரத்திலும் வைத்துக்கொள்ளலாம்.

காளைச் சந்தையில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் நல்ல வருமானத்தைத் தரும். அதே சமயம், கரடிச் சந்தையில் ஸ்மால்/மிட்கேப் பங்குகளை ஒப்பிடும்போது, லார்ஜ்கேப் பங்குகள் நல்ல வருமானத்தைத் தரும். இந்தவித சுழற்சியைத் தனிமனிதன் முடிவு செய்வது கடினம். மேலும், ஃபண்ட் மேனேஜர்களுக்கு, மல்டிகேப் ஃபண்டை நிர்வகிப்பதில் லாவகமாகச் செயல்பட்டு, அவர்களின் திறமையைக் காண்பிக்க முடியும்.

பங்கு சார்ந்த ஃபண்டுகளில் ஐந்து வருடங்களுக்கு மேலான முதலீட்டை மேற்கொள்ளும்போது லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் எனப் பிரித்து முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஓரிரு மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

இந்த வகை ஃபண்டுகளின் வருமானம் லார்ஜ் கேப் ஃபண்டுகளுக்கும், மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகளுக்கும் மத்தியில் இருக்கும். ரிஸ்க் அளவும் இந்த இரண்டிற்கும் மத்தியில் இருக்கும். கையில் குறைவான தொகை உள்ளவர்கள் மற்றும் குறைவான தொகைக்கு எஸ்.ஐ.பி துவங்க நினைப்பவர்கள், மல்டிகேப் ஃபண்டுகள் ஓரிரண்டைத் தேர்வுசெய்து, அவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

மேலும், அதிக எண்ணிக்கையில் ஃபண்டுகளை விரும்பாதவர்களுக்கும் இந்தவித ஃபண்டுகள் உகந்ததாக அமையும்.

மல்டிகேப் ஃபண்டுகளின் மேனேஜர்கள் போர்ட்ஃபோலியோவை அமைக்கும்போது பொதுவாக, எல்லாக் காலத்திற்கும் ஏற்றதாகவே அமைக்கிறார்கள். லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் போன்றவற்றில் ஒதுக்கீட்டை மாற்றி அமைப்பதற்கு முழுச் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தாலும், ஒதுக்கீட்டைக் கிட்டத்தட்ட நிரந்தரமாகவே பெரும்பாலான ஃபண்ட் மேனேஜர்கள் வைத்துக்கொள்கிறார்கள். அந்த நிரந்தர ஒதுக்கீட்டிலிருந்து சில சதவிகிதங்கள் இங்கங்கு மாற்றுவார்களே தவிர, 100% லார்ஜ்கேப் அல்லது 100% மிட் & ஸ்மால்கேப் என்ற அளவிற்கு யாரும் மாற்றுவதில்லை. -

பெரும்பாலான ஃபண்டுகள் 15 – 25% அளவிற்கு போர்ட்ஃபோலியோவில் மிட் & ஸ்மால்கேப் ஃபங்குகளையும், எஞ்சியதை லார்ஜ்கேப் பங்குகளிலும் வைத்துக்கொள்கின்றன. இன்னும் சில அக்ரஸிவ் மல்டிகேப் ஃபண்டுகள் போர்ட் ஃபோலியோவில் 25 – 50 சதவிகிதத்தை மிட் & ஸ்மால்கேப் பங்குகளிலும், எஞ்சியதை லார்ஜ்கேப் பங்குகளிலும் வைத்துக்கொள்கின்றன. குறைந்த பட்சமாக ஐந்து வருடங்களுக்குமேல் உள்ள உங்களின் தேவைகளான ஓய்வூதியம், குழந்தைகள் நலன், வெல்த் கிரியேஷன் போன்ற நோக்கங் களுக்காக மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீட்டை நீங்கள் நாடலாம்.

இந்த வகையில், முதலீட்டிற்கு உகந்த சில ஃபண்டுகளையும், அவற்றைப் பற்றிய சிறு குறிப்பையும் இங்கே கொடுத்துள்ளோம்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட்: ஆகஸ்ட் 1998-ல் ஆரம்பித்த இந்த ஃபண்டை தற்போது நிர்வகித்து வருபவர் அனில் ஷா ஆவார். இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை உன்னதமான வருவாயை ஈட்டித் தந்துள்ளது. தனது போர்ட் ஃபோலியோவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியை லார்ஜ்கேப்பிலும், மீதியை ஸ்மால் & மிட்கேப் பங்குகளிலும் வைத்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஐ.டி.சி, உள்ளிட்ட பங்குகள் டாப் ஹோல்டிங் ஸாகவும், கேஸ்ட்ரால் இந்தியா, பி.வி.ஆர், ஆர்.பி.எல் பேங்க், டாடா கெமிக்கல்ஸ் போன்ற ஸ்மால் அண்டு மிட்கேப் பங்குகளும் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ளன. 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஃபைனான்ஸ் துறையில் வெயிட்டேஜ் வைத்துள்ளது. இதில் மினிமம் ஒருமுறை மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.100 ஆகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டிகேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட், முன்பு ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. டாப் 200 ஃபண்ட் என அழைக்கப்பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அதுல் படேல் மற்றும் சங்கரன் நரேன் ஆவார்கள். இந்த ஃபண்ட், தனது போர்ட் ஃபோலியோவில் கிட்டத்தட்ட 77% லார்ஜ்கேப் பங்குகளையும் எஞ்சியதை ஸ்மால் & மிட்கேப் பங்குகளிலும் வைத்துள்ளது. ஐ.டி.சி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க் உள்ளிட்ட பங்குகளை டாப் ஹோல்டிங்ஸாகவும், டி.வி.எஸ் மோட்டார்ஸ், இன்ஜினீயர்ஸ் இந்தியா உள்ளிட்ட மிட் & ஸ்மால் கேப் பங்குகளையும் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. அதிக வெயிட்டேஜ், எனர்ஜி மற்றும் ஃபைனான்ஸ் துறையைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல்ஸ் மற்றும் மெட்டல்ஸ் துறைகளில் உள்ளது. இதில் மினிமம் ஒருமுறை முதலீடு ரூ.5,000 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.100.

கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட்: மல்டிகேப் ஃபண்டுகள் வகையில் மிகவும் அதிகமான நிர்வகிக்கும் தொகையை (ரூ.21,000 கோடிக்கும்மேல்) கொண்டுள்ள ஃபண்ட் இதுதான். இந்த ஃபண்டின் மேனேஜர் ஹர்ஷா உபாதியாயா ஆவார். இவர் இந்த ஃபண்டைத் தொடர்ச்சியாக திறம்பட நிர்வகித்து வருகிறார். இவரே இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவராகவும் உள்ளார். ஃபைனான்ஸ், எனர்ஜி, கன்ஸ்ட்ரக் ஷன் மற்றும் டெக்னாலஜி இதன் டாப் துறைசார்ந்த முதலீடு களாக உள்ளன. ரிலையன்ஸ், எல்&டி உள்ளிட்ட பங்குகள் டாப் ஹோல்டிங்ஸாக இருப்பதுடன், ராம்கோ சிமென்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட போன்ற மிட் & ஸ்மால்கேப் பங்குகளும் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ளன. இதில் மினிமம் ஒருமுறை முதலீடு ரூ.5,000 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000 ஆகும்.

மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட்: தொடர்ச்சியாக நன்கு செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. நாம் இங்கு தந்திருக்கும் ஃபண்டுகளிலேயே, தொடர்ச்சியாக நல்ல வருமானம் தரும் ஃபண்ட் இதுதான். நாம் இங்கு பரிந்துரை செய்திருக்கும் ஃபண்டுகளில் அதிக சதவிகிதத்தில் (87%) லார்ஜ்கேப் பங்குகளைக் கொண்டுள்ளது. ஃபைனான்ஸ் டாப் துறை சார்ந்த முதலீடாகவும், அதைத் தொடர்ந்து எனர்ஜி, டெக்னாலஜி, எஃப்.எம்.சி.ஜி போன்ற துறைகள் முன்னணி வகுக்கின்றன. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் நீலேஷ் சுரானா, ஹர்ஷத் போரவாகே மற்றும் கௌரவ் மிஸ்ரா ஆவார்கள். இந்த ஃபண்டில் மினிமம் ஒருமுறை முதலீடு ரூ.5,000 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000 ஆகும்.

பிரின்சிபல் மல்டிகேப் குரோத் ஃபண்ட்: நாம் இங்கு பரிந்துரை செய்திருக்கும் ஃபண்டுகளிலேயே மிகவும் குறைவான நிர்வகிக்கும் தொகையை (ரூ. 819 கோடி) கொண்டுள்ள ஃபண்ட் இதுதான். இந்த ஃபண்டின் மேனேஜர்கள் பி.வி.கே மோகன் மற்றும் சித்தார்த் மொஹ்தா ஆவார்கள். நாம் இங்கு பரிந்துரை செய்திருக்கும் ஃபண்டுகளிலேயே மிகவும் அதிகமான சதவிகிதத்தை (35.04%) மிட் & ஸ்மால்கேப் பங்குகளில் வைத்திருப்பதும் இந்த ஃபண்டுதான். ஃபைனான்ஸ், எஃப்.எம்.சி.ஜி, கன்ஸ்ட்ரக் ஷன், எனர்ஜி போன்ற துறைகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

அதிகமான எண்ணிக்கையில் (74) பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது இந்த ஃபண்ட். ஒரு பங்கைத் (ஹெச்.டி.எஃப்.சி பேங்க் – 5.11%) தவிர, பெரும்பாலான பங்குகளில் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் வெயிட் உள்ளது. இந்த ஃபண்டின் பீட்டா அதிகமாக இருப்பதால், காளைச் சந்தையில் இந்த ஃபண்டின் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கும்.

யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட்: ரூ.8,500 கோடிக்கும் மேலான மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வரும் இந்த ஃபண்டின் மேனேஜர் அஜய் தியாகி ஆவார். இந்த ஃபண்டின் மிட் & ஸ்மால்கேப் ஒதுக்கீடு சற்று அதிகமாக (34.80%) உள்ளது. ஃபைனான்ஸைத் தொடர்ந்து ஹெல்த்கேர், டெக்னாலஜி, ஆட்டோ போன்ற துறைகளில் வெயிட் அதிகமாக உள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் உள்ளிட்ட பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் போர்ட்ஃபோலியோவின் சராசரி சந்தை மதிப்பும் இங்கு தந்திருக்கும் ஃபண்டுகளிலேயே குறைவானது (ரூ.54,257 கோடி) ஆகும்.

(பார்வை தொடரும்)

- சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)