நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

நூற்றி நாற்பது ஆண்டுகளுக்குமுன்... 1880-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு வீட்டில்கூட மின்சார இணைப்பு என்பது இல்லை என்றபோதிலும், 1940-ம் ஆண்டில் நகர்ப்புற வீடுகளில் நூறு சதவிகித அளவிலான மின் இணைப்பு என்ற எல்லையை அவர்கள் தொட்டுவிட்டார்கள்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

மேலும், அதே காலகட்டத்தில் நகர்ப்புற வீடுகளில் 94% அளவிலான வீடுகளில் குடிதண்ணீர் குழாய் இணைப்பு, கழிவுநீர் வடிகால் குழாய் இணைப்பு போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுவிட்டது. 1940-களிலேயே கிட்டத்தட்ட 40% வீடுகளில் ஃப்ளஷ் பொருத்தப்பட்ட டாய்லெட்களும், 73% வீடுகளில் எரிவாயுவைப் பயன்படுத்தி   சமையல் செய்யும் வசதியும் கிடைத்திருந்தது.

சுருங்கச்சொன்னால், 1870-ம் ஆண்டில் வீடுகள் எல்லாம் தனித்தனியாக எந்தவித இணைப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால், 1940-ம் ஆண்டில் வீடுகள் அனைத்துமே நெட்வொர்க் செய்யப்பட்டு மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, தண்ணீர் மற்றும் கழிவுநீர் என்ற ஐந்து இணைப்புகள் இருந்தது.

இந்தவித நெட்வொர்க் இணைப்பு என்பது அனைவரும் சமம் என்பதையே காட்டுவதாக இருந்தது. ஏழையோ, பணக்காரரோ அனைவருமே மின்சாரம், தண்ணீர், கழிவுநீர், எரிவாயு மற்றும் தொலைபேசி என்ற இணைப்பைக் கொண்டி ருந்தனர். ஏழைகள் இந்த நெட்வொர்க்கிற்குள் வருவதற்குப் பணக்கார்கள் இணைந்த காலத்தைவிடக் கொஞ்சம் தாமதமானாலும் எல்லோருக்கும் நெட்வொர்க் இணைப்பு என்பது கிடைக்க வாய்ப்பிருந்தது.”

‘த ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் அமெரிக்கன் குரோத்’ என்னும் புத்தகத்தில் ராபர்ட் கோர்டன் என்பவர் எழுதி 2016-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து.

இந்தியாவிலும் பஜார்களில் மாறுதல்கள்

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் லண்டனில் நான் நியூஸ்பேப்பர் டெலிவரி செய்துகொண்டிருந்த போது கடைத்தெருவில் அப்போது நடந்த மாறுதல்களைக் கண்கூடாகப் பார்த்தேன். முதலில் டிராவல் ஏஜென்ட்டுகள் தங்கள் தொழிலை விட்டுப் போனார்கள்  - ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வேகமாக வளர்ந்த காலகட்டம் அது.

அதன் பின்னர் 1990-களின் ஆரம்பத்தில்  சாக்லேட்கள், பிஸ்கட்டுகள், பஸ் பாஸ்கள், ஸ்டாம்ப்கள், நியூஸ் பேப்பர்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் சிறுகடைகள் மூடப்பட்டன. ஏனென்றால், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் சூப்பர் மார்க்கெட்டுகள் தொடங்கப்பட்டன. மேலும், இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் தெருமுனைக் கடைகளைப் போன்று அனைத்து விஷயங்களையுமே வழங்க ஆரம்பித்தன என்பதும் ஒரு காரணமாக இருந்தது.

இதற்கு மற்றுமொரு காரணம், பெரும்பாலும் இந்தக் கடைகளை நடத்திய உகாண்டாவில் இருந்து குடிபெயர்ந்து வந்த இந்திய குஜராத்திகள், அவர்களுடைய வாரிசுகள் லண்டனில் பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பாத்தியத்தைத் தரும் வேலைகளுக்குப் போனதால் குடும்பத் தொழிலில் அவர்களின் நாட்டம் கணிசமாகக் குறைந்தது.

அதன் பின்னால் ஒவ்வொரு ஏரியாக்களிலும் இருக்கும் சின்னச் சின்ன உணவகங்கள் மூடப்பட்டு கே.எஃப்சி, பாப்பா ஜான்ஸ் போன்ற உணவகங்கள் திறக்கப்பட்டன.

என்னுடைய முப்பது ஆண்டுக் காலத்திற்கு முந்தையை பேப்பர் போடும் வேலையில் நான் பார்த்த தொழில்களில் இன்றைக்கும் நிலைத்திருப்பது முடி திருத்தும் நிலையங்கள்/அழகு நிலையங்கள், காய்கறிக்கடை, கறிக்கடை மற்றும் மலர்கள் விற்பனையகங்கள் போன்றவையேயாகும். இன்றைக்கும் லண்டன் வாழ்மக்கள் இவற்றை லோக்கல் கடைகளில் வாங்குவதையே விரும்புகின்றனர். மளிகைக் கடைகள் இருந்த இடத்தில் மொபைல் கடைகளும், காபி ஷாப்புகளும், தொண்டு நிறுவனங்களும் (உபயோகித்த துணிமணிகளைக் குறைந்த விலைக்கு ஏழைகளுக்கு விற்கும் நிறுவனங்கள் போன்றவை) தோன்றிவிட்டன.

இன்றைக்கு மும்பையில் நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கடைத்தெருவில் அதே போன்ற மாறுதல்கள் நடப்பதை நான் பார்க்கிறேன். அங்கே இருக்கும் டீமார்ட் (இந்தியா விலேயே முதன்முதலாகத் திறக்கப்பட்டது) அதிக அளவிலான வியாபாரத்தைச் செய்கிறது.

என்னுடைய இருப்பிடத்திற்கு அருகேயே எட்டு வருடத்திற்கு முன்னால் திறக்கப்பட்ட மற்றுமொரு டீமார்ட்டின் கிளையிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கிறது.  இதனால் பாதிக்கப்பட்ட து தெருவில் இருக்கும் மளிகைக் கடைகள்தான்.  போனமாதம் கூட ஒரு மளிகைக் கடை மூடப்பட்டது. ஒரு வருட த்திற்கு முன்னால் கூட ஒரு சிறிய மளிகைக் கடை அதே இடத்தில் மூடப்பட்டது. இப்போது எஞ்சி இருப்பது ‘சீப் & பெஸ்ட்’ என்னும் மாற்றியமைக்கப்பட்ட 7/11 டைப் மளிகைக் கடை மட்டுமே. 

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

இந்தக் கடையின் உரிமையாளர் பக்கத்தில் இருக்கும் கடையையும் வாங்கி, கடைகளைப் பிரிக்கும் சுவர்களை இடித்து  விரிவாக்கம் செய்து டீ-மார்ட்டுக்குப் போட்டியாக நடத்திவருகிறார்.

அதேபோல், நான் வசிக்கும் இடத்தில் இருக்கும் சிறு உணவகங்களும்கூட போட்டியினால் நசிந்துபோக ஆரம்பித்துள்ளன. இந்தப் போட்டிகளில் யார் ஜெயிப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஏற்கெனவே இருந்த அறுபது கடைகளில் இன்றைக்குக் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கடைகளே செயல்படுகின்றன. 

மளிகைக் கடைகளின் பிரச்னை

இரண்டு வருடங்களுக்குமுன் ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாபர் நிறுவனங்களின் டிஸ்ட்ரிபியூட்டர் ஒருவரைச் சந்தித்தேன்.  அவர் அப்போதே இதுமாதிரியான பிரச்னைகள் வரும் என்பதை கணித்துச் சொன்னார். மளிகைக் கடைகள் மூடப்படுவதால், தன்னைப்போன்ற டிஸ்ட்ரிபியூட்டர்களும் காணாமல் போய் விடுவோம் என்றார் அவர்.

டீமார்ட் நிறுவனத்தைப் போன்ற பெரிய நிறுவனங்கள் மளிகைக் கடைகள் கொள்முதல் செய்வதைவிட மிகவும் குறைந்த விலையிலேயே நேரடியாக எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் கொள்முதல் செய்கின்றன. மேலும், ஆன்லைன் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்றவை வீட்டுக்குத் தேவையான (கட்லெரி, க்ராக்கரி, ஸ்டேஷனரி, பொம்மைகள் போன்றவை – சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை) பல பொருள்களை மிகக் குறைந்த விலையில்  விற்பனை செய்கின்றன. மூன்றாவதாக, ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின் வரிகள் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

நான் சந்தித்த டிஸ்ட்ரிபியூட்டர் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தார். வெளிநாட்டு மூலதனமோ (FDI) அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களோ  மளிகைக் கடைகளை மூடவைக்கப் போவதில்லை. பெரியதொரு பொருளாதாரத்தில் உருவாகும்  நெட்வொர்க்கினால் ஏற்படும்  பாதிப்பே சிறு வணிகர்களைப் பெருமளவில் பாதிக்கிறது என்பதுதான் அது. இதுகுறித்து நான் விரிவாக எழுதிய கட்டுரையைப் படிக்க நினைக் கிறவர்கள் இந்த லிங்கிற்குள் செல்லவும் [http://marcellus.in/blogs/the-rise-of-indian-smes/].

அமெரிக்கா வழியில் இந்தியா

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

சிறிய மற்றும் வரைமுறை செய்யப்படாத (Informal) தொழில்கள் வளர்ச்சியடையாத பொருளாதாரத்தில் மட்டுமே செழித்துவளரும் குணத்தைக் கொண்டவையாகும். மின்சாரம், நல்ல சாலைகள், தொலைத்தொடர்பு நெட்வொர்க், குறைந்த வட்டியில் கடன் போன்றவை இல்லாத சூழல் வளர்ச்சியடையாத பொருளாதாரத்தின் சூழலாகும். இதனாலேயே சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இதுபோன்ற பொருளாதாரத்தில் செழித்துவளர்கின்றன. 

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப் பட்டுள்ள ராபர்ட் கோர்டனின் கருத்தின்படி பார்த்தால், இந்தவித நெட்வொர்க்குகள் ஏற்படுத்தப்படும்போது பொருளாதாரம் வேகமாக வரைமுறை செய்யப்பட்டுவிடுகிறபடியால் (Formalised) கன்ஸ்யூமரிஸமும் அதிவேகமாக வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது (அமெரிக்கா 1840-லிருந்து 1920 வரை கண்ட  வளர்ச்சி இதற்கு ஓர் உதாரணம்.)

இந்தியா, அமெரிக்கா சிவில் போருக்கு பிந்தைய ஐம்பது ஆண்டு காலகட்டத்தில்  எந்தவித வளர்ச்சியைச் சந்தித்ததோ, அதேபோன்ற வளர்ச்சியைத் தற்போது சந்தித்துவருகிறது. பத்து வருடங்களுக்குமுன் ஐந்து கோடி இந்தியர்களே விமானப் பயணத்தினை மேற்கொண்டார்கள். இன்றைக்கு அதைவிட மூன்று மடங்கு அதிகமான இந்தியர்கள் விமானப் பயணத்தினை மேற்கொள் கின்றனர் (சி.ஏ.ஜி.ஆர் 12%).  இன்றைக்கு அனைத்து இந்தியக் குடும்பங்களுமே வங்கிக் கணக்கினை  வைத்துக்கொண்டிருக்கின்றன.

இந்தவித மாறுதல்களும் வளர்ச்சியுமே சிறிய நிறுவனங்கள்கூட அகில இந்தியரீதியான ஃப்ரான்சைஸிகளை உருவாக்கிக்கொள்ள காரணிகளாக அமைந்துள்ளது. லோக்கல் பிசினஸாக இருந்தவை ரீஜினல் பிசினஸ்களாகவும், ரீஜினல் பிசினஸ்களாக இருந்தவை நேஷனல் பிசினஸ்களாகவும் இதனாலேயே மாறின. 

என்னுடைய பயணங்களின்போது நான் கவனித்துப் புரிந்துகொண்டது, விலை குறைந்த விமான டிக்கெட்டுகளில் பயணித்து, ஒயோ ரூம்களின் மூலமாக மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்கி, தங்களுடைய தொழில்களை மற்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்ய முனைபவர்கள் இதுபோன்ற நிறுவனங்களின் முதலாளிகளாகவே இருக்கின்றனர்.

ஜி.எஸ்.டி குறுகிய காலத்தில் ஒரு பாதிப்பைத் தந்தபோதிலும், நீண்டகால அடிப்படையில்  ஓர் ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் இது பெரும்பங்கை வகிக்கவே செய்யும்.

முதலீட்டில் இவற்றின் தாக்கம்...

மளிகைக் கடைகள் மூடப்படும் காலம் என்பது புதிய ஆர்கனைஸ்டு சில்லறை நிறுவனங்கள் தங்களுடைய விரிவாக்கங்களைச் செய்து வெற்றிகளைப் பெற ஆரம்பிக்கும் காலமாகும். தெருமுனைகளில் இருக்கும் மளிகைக் கடைகள் குறைய ஆரம்பித்து சூப்பர் மார்க்கெட்டுகள் லாபகரமாக நடக்க ஆரம்பிக்கும் காலகட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாவதைப் போன்ற சூழல் ஆரம்பமாகியுள்ளது.

 உடனே எல்லா ஆர்கனைஸ்டு செக்டாரில் செயல்படும் ரீடெயில் நிறுவனங்களும் டைட்டன், டீமார்ட் மற்றும் ட்ரெண்ட் போன்று லாபத்துடன் இயங்க ஆரம்பித்துவிடும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளத் தேவையில்லை. லாபத்துடன் இயங்கக்கூடிய சில்லறை நிறுவனங்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடியும்.

குறிப்பாகச் சொன்னால், இந்திய அளவில் இயங்கும் பெரிய தொழில் குழுமங்கள் பலவும் (ரிலையன்ஸ், டாடா, பிர்லா போன்ற) இதுபோன்ற பெரிய மற்றும் அதிக செயல்திறன் கொண்ட ரீடெயில் செயின்களை (டீமார்ட், டைட்டன், ட்ரெண்ட் போன்ற) வளர்க்க நினைக்கும் காலம் இது. 

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்!

இதுபோன்ற விரிவாக்கங்கள் நடக்கும் காலம் என்பது ஆர்கனைஸ்டு ரீடெயில் துறையில் புதிய வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். இந்தவித வேலை வாய்ப்புகள் ஏற்கெனவே இந்தத் துறையில் பணியில் இருக்கும் 100-150 மில்லியன் நபர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கவும் செய்யும். இந்தவித விரிவாக்கங்கள் இந்த நிறுவனங் களுக்குப் பொருள்களை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் நிறுவனங்களின் பலத்தையும் மாற்றியமைப்பதாகவே இருக்கும்.
 
ஏனென்றால் உற்பத்தியாளர்களும் அவர் களுடைய பொருளை வாங்கி விநியோகிக்கும் நிறுவனங்களும் அளவில் மிகப் பெரிய முதலீடு கொண்டவையாக இருக்கும். இதுவரையில் உற்பத்தியாளர்கள் வைத்ததே சட்டமாக இருந்தது. ஏனென்றால், மளிகைக் கடைகளும் அவற்றிற்குப் பொருளைக்கொண்டு சேர்க்கும் டிஸ்ட்ரி பியூட்டர்களும் மிக மிகச் சிறிய அளவில் முதலீடு வைத்திருப்பவர்களாகவும், நாடு முழுக்கப் பரவலாகச் செயல்படுபவர்களாகவும் இருந்தனர்.

டீமார்ட், ரிலையன்ஸ் ரீடெயில் போன்ற நிறுவனங்கள் காலப்போக்கில் பெறப்போகும் வளர்ச்சி என்பது அவை  எஃப்.எம்.சி.ஜி நிறுவனங் களிடம் பேசப்போகும் பேரத்திற்கு வலுவைக் கூட்டுவதாக இருக்கும். இதனால், எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் லாபமானது குறைய வாய்ப்புள்ளது. 

மேலும், பெரும்பாலான எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் தாங்கள் தற்போது அனுபவித்துவரும் நெகட்டிவ் வொர்க்கிங் கேப்பிட்டல் சைக்கிள்களிலிருந்து (டிஸ்ட்ரிபியூட்டர் களிடமிருந்து பணத்தை முன்னதாகவே பெற்றுக்கொண்டு பொருளை அனுப்பும் நிலை மாறி) வெளியே வந்து வொர்க்கிங் கேப்பிட்டலை அதிகரிக்க வேண்டியிருக்கும். இதனால் வொர்க்கிங் கேப்பிட்டலுக்கான செலவை யும் இந்த நிறுவனங்கள் ஏற்க வேண்டியிருக்கும். அதனாலும் எதிர்வரும் வருடங்களில் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் லாபத்தின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

குறிப்பு: இது,  முதலீட்டுக்கான ஆராய்ச்சி கட்டுரையோ அல்லது முதலீட்டு ஆலோசனையோ அல்ல. மார்செல்லஸ் நிறுவனம் இந்தக் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணத்தையோ அல்லது வியாபாரத்திற்கான அழைப்பையோ விடுக்கவில்லை. மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் என்பது செபியினால் (செக்யூரிட்டிஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா) கட்டுப்படுத்தப்படும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகும்.

-செளரப் முகர்ஜி, நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)