Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 51

பிட்காயின் பித்தலாட்டம் - 51
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 51

பிட்காயின் பித்தலாட்டம் - 51

பிட்காயின் பித்தலாட்டம் - 51

பிட்காயின் பித்தலாட்டம் - 51

Published:Updated:
பிட்காயின் பித்தலாட்டம் - 51
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 51

முடிவுரை

தான்யா ஷேகல் மீதான வழக்கு நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எஃப்.பி.ஐ-யும், சி.பி.ஐ-யும் மிகவும் கவனமாக பிட்காயின், தான்யாவுக்கும் ஜில்லியன் டானுக்குமான தொடர்பு ஆகியவை குறித்த செய்திகளைத் தவிர்த்தன. இந்த வழக்கினால் ஜில்லியன் டானுக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இருந்த நெருக்கம் தெரியவந்தால், அமெரிக்க அரசுக்குக் குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடும் என்பது குறித்து அமெரிக்க அரசு கவலை கொண்டது. மாள்விகா ஷேகலின் பிட்காயின்களை திருடும் நோக்கத்திற்காக தான்யா அவரை கொலை செய்தாள் என்கிற ஒரு வழக்கு மட்டும்தான் தான்யாமீது பதிவு செய்யப்பட்டது.   

பிட்காயின் பித்தலாட்டம் - 51

மாள்விகா ஷேகலின் கொலைக்கும், இந்திய நிதி மந்திரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. மந்திரிக்கும் அவர் சம்பந்தப் பட்ட ரூ.500 கோடி பணமோசடியும் பொது வெளிக்கு வராமல் `பார்த்து’க் கொள்ளப்பட்டது.

* * * * 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிக்கி டானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு நன்கு நினைவு திரும்பியபின் அவர் காவல்துறையிடம், பிட்காயினின் பிதாமகனான சதோஷி நகாமோட்டோதான்  என்பதை ஜனாதிபதியிடம் சொல்வதற்குத் திட்டமிட்டிருந்தார். அவருடைய குழுவைச் சேர்ந்த இரண்டு பேரின் மரணம் அவரை உலுக்கி விட்டிருந்ததுடன், அடுத்த குறி அவராக இருக்குமோ என்று நினைத்துக் கவலைப்பட்டார். 

பிட்காயின் பித்தலாட்டம் - 51

பிட்காயின் திட்டம் மிகவும் பாதுகாப்பான ஒருவரின் கையில் இருக்கவேண்டுமென்றும், அதனால் ஏற்படக்கூடிய எண்ணற்ற வாய்ப்புகளை ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் நினைத்தார். ஏ.டி.எம் கொள்ளை நடத்தத் திட்டமிடப்பட்ட இடத்திலிருந்த சி.சி.டி.வி-யில் தான் இருப்பது தெரியவந்தது சம்பந்தமாக ஒரு விளக்கத்தை நிக்கி தயாராக வைத்திருந்தார். பழைய நண்பர் ஒருவரைச் சந்திக்க அந்த இடத்துக்குச் சென்றதாக ஒப்புக்கொண்டதுடன், உமர் ஃபாரூக் அவருடைய அனுதாபத்தைத் தெரிவிக்கத் தன்னருகில் வந்ததாகவும் கூறினார். நிக்கி மற்றும் க்ளோரியாவின் பின்னணி குறித்து ஏற்கெனவே தெரிந்திருந்ததால் எஃப்.பி.ஐ அதுகுறித்த விசாரணையைத் தொடரவில்லை.

ஜோஷ் கானெலி நிக்கியிடமிருந்து திருட நினைத்த மோதிரம் உண்மையிலேயே ஜில்லியன் டானுடையது. தன் சொத்தை இழந்துவிடுவமோ என்கிற காரணத்தால் அவர் தனது மோதிரத்தில் பிட்காயினின் பிரைவேட் கீ-யை பொறித்திருந்தார். இருந்தாலும் அதில் சில எழுத்துகள் `மிஸ்’ ஆகி இருந்தன. அனைத்து இலக்கங்களும் தெரிந்திருந் தால் நிக்கியோ அல்லது வேறு யாராவதுமோ தன் பிட்கா யினைத் திருடிவிடக் கூடும் என்று அவர் நினைத்திருந்தது தான் இதற்குக் காரணமாகும்.  

பிட்காயின் பித்தலாட்டம் - 51

ஜோஷ், ஜில்லியனுடைய ரகசியக் குழுவிலிருந்த மூன்றவது நபர். ஜிலியனின் பிரைவேட் கீ-யைத் திருடினால், ஏ.டி.எம் கொள்ளையில் காணாமல்போன மில்லியன் டாலரை கொள்ளை யடித்தவர்களிடம் திருப்பிக் கொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும், தனக்குத் தேவைப்படும் பணத்தையும் அதன்மூலம் எடுத்துக்கொள்ளல மென்றும் அவன் நினைத்தான். பிட்காயின் உருவாக்கத்தில் அவனும் ஒருவன் என்பதால், `மிஸ்’ ஆன எழுத்துகளை அவனால் மட்டுமே அணுகக் கூடியதாக இருந்த கோட் லாஜிக்கை உபயோகித்து அதை உருவாக்கக்கூடிய சாத்தியம் இருந்தது.

* * * *  

டொமினிக்கன் குடியரசில் இருக்கும் ஏ.டி.எம் கொள்ளையின் சூத்ரதாரிகளிடம் மில்லியன் டாலரைக் கொடுப்பதற்காக ஜோஷால் அனுப்பி வைக்கப்பட்டவன் அவனது அறை நண்பன் ஸ்டான். அவன் போலியான அமெரிக்க பாஸ்போர்ட்டின் மூலம் பாண்டிச்சேரிக்கு வந்து  அங்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது சி.பி.ஐ, உள்ளூர் காவல்துறை உதவியுடன் எஃப்.பி.ஐ அவனைக் கைது செய்தது.  

பிட்காயின் பித்தலாட்டம் - 51

ஸ்டான் செல்போனில் இருந்த தகவல்கள் மூலம் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர் களையும் எஃப்.பி.ஐ சுற்றி வளைத்துப் பிடித்தது. சாண்டோ டோமிங்கோவில் எங்குப் பொருளை யும், பணத்தையும் கொடுக்க வேண்டுமோ, அதன் முகவரியையும் கண்டுபிடித்தது. ஜோஷின் லேப்டாப்பிலிருந்து கிடைத்த முகவரியும், இதுவும் வேறுவேறாக இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக `ட்ராப்’ செய்யக்கூடிய இடத்தைக் கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றி யிருக்கலாம். அந்த இடத்தில் ஸ்வாட் (SWAT) குழு வினரும், எஃப்.பி.ஐ-யும், உள்ளூர் காவல்துறையும் சேர்ந்து நடத்திய ரெய்டில் இந்தக் கொள்ளையில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அதற்கு உதவியவர்களில் சிலர் பிடி பட்டனர். இண்டீஸ்கேப்பினால் டவுன்ஸ்விலே திரும்பப் பெறப் பட்டது. இதனால் கேமிங் உல கில் இண்டீஸ்கேப்பின் நிலை வெகுவாகப் பாதிக்கப் பட்டது. வருமானமும்,       எம்.எ.யு-ம் குறைய ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக சில மாதங்களில் நிறுவனம் மூடப்பட்டது.  

எடியாஸ் ஹேக்கிங் பிரச்னை யிலிருந்து வெற்றிகரமாக விடுபட்டது. ரெகுலேட்டர்களும், வாடிக்கையாளர்களில் சிலரையும் சேர்த்து அமைக்கப் பட்ட கமிட்டி, எடியாஸ் மீது தவறில்லை என அறிக்கை வெளியிட்டது. வாடிக்கையாளர் களுடன் ஆதித்யாவும், சந்தீப்பும் கொண்டிருந்த நல்லுறவு, நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் பெற உதவியது.

பொறுப்புகளிலிருந்து தான் விடுபட்டுக் கொள்ள இருப்பதாக ஆதித்யா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன், தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான சந்தீப்பிடம் நிறுவனத்தை ஒப்படைத்தார். சுவாமியின் மனைவி கல்பனாவும் அந்த நிறுவனத்தில் சேர்ந்துகொள்ள நிறுவனம் அடுத்த நிலையை நோக்கி இயங்க ஆரம்பித்தது.   

* * * *

சில நாள்களுக்குப்பின் தான்யா கைது செய்யப்பட்டாள். வருண், ஆதித்யா அருகில் சென்று, “டாட், நாம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றான்.

“யெஸ், வருண்...?” என்ற ஆதித்யா தன் மகனை ஏதொவொன்று கவலைக்குள்ளாக்குகிறது என நினைத்தார்.

“நான் இங்கு வந்து உங்களைச் சந்திந்தது, நீண்ட நாள்களாக மிஸ் செய்த குடும்பம் என்கிற உறவு திரும்பக் கிடைத்தது என எல்லாமே நன்றாக இருந்தது. இப்போது திரும்பிப் பார்த்தால், இதைவிட அமெரிக்காவில் நான் நன்றாக இருந்ததுபோல உணர்கிறேன். குறைந்த பட்சம், அங்கு யாரும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள நடிக்கவில்லை” என்றான்.

“யாரைப் பற்றிச் சொல்கிறாய் வருண்?”

ஆதித்யாவைப் பார்க்க வருணுக்கு சங்கடமாக இருந்தது. அவனுடைய அழுகையைக் கட்டுப் படுத்திக்கொண்டான். “தான்யா, டாட். அவள் எனக்கு ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? நான் அவளை மிகவும் நேசித்தேன். அவள் ஏன் இப்படி நடிக்க வேண்டும்? என்னுடைய உணர்ச்சிகளுடன் அவள் ஏன் விளையாடினாள்?”  

பிட்காயின் பித்தலாட்டம் - 51

தான்யா செய்த தவறுகளைவிட லக்‌ஷுடன் சேர்ந்து வருணை ஏமாற்றியதுதான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை அவர் உணர்ந்துகொண்டார். அந்த நினைவுகளிலிருந்து தப்பித்துச்செல்ல அவன் இப்போது முயற்சி செய்கிறான். 

இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்தபின் கண்டிப்பாக இந்தியாவுக்குத் திரும்பி வருவேன் என ஆதித்யாவுக்கு உறுதியளித்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் மேல்படிப்பைத் தொடரத் திட்டமிட்டான். அதற்கு ஆதித்யா நிதியுதவி அளிப்பதாகக் கூறினார். வருண் எந்தவொரு நிதியுதவியையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். அவனைப் போக வேண்டாமென்று சொல்வதற்கான மனநிலையில் ஆதித்யா இல்லை. அவரிடம் ஏற்பட்டிருந்த ஒரு மாற்றம், முன்னெப்போதும் இருந்ததைவிட மகன் வருணிடம் அதிக நெருக்கமாக இருக்க ஆரம்பித்ததுதான்.

* * * * 

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது மைக் ஹென்ரிக்ஸ் குடியரசுக் கட்சி வேட்பா ளாராக நியமிக்கப்படுவார் எனத் தெரியவந்தது. ஜில்லியன் டான் சம்பந்தப்பட்ட நிகழ்வையும், சதோஷி நகாமோட்டோவுக்கும் ஜனாதிபதிக்கும் இருந்த நெருக்கமான உறவுக்கு எந்தவொரு களங்கமும் வராமல் பொதுஜனத் தொடர்பைத் திறமையாக நிர்வகித்ததற்கான பரிசாகக்கூட இந்த நியமனம் இருக்கக்கூடும். மைக்கும், நிக்கியும் தொடர்ந்து தனித்தனியாகவே வசித்து வந்தனர். ஜில்லியன் கொலைக்குப்பிறகு க்ளோரியா முன்னெப்போதையும்விட மைக்குடன்  நெருக்கமானாள்.

* * * *  

ஒரு நாள் ஹட்சனில் உருத்தெரியாத ஒரு உடம்பு மிதந்துகொண்டிருந்தது. அது ஒரு பாறையுடன் கட்டப்பட்டு மூழ்கடிக்கப் பட்டிருந்தது. அது அங்கேயே ஏறக்குறைய ஒருவார காலம், கட்டப்பட்ட கயிறு அறுந்து போய் மேலே மிதக்கும் வரை இருந்திருக்கிறது. சன் பத்திரிகை இதை முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது. யார் என்று சொல்லாமல், பல விஷயங்களை அம்பலப்படுத்திவந்த ஹூக்கர் இப்போது உயிரோடு இல்லை.

* * * *
மும்பை காவல் துறையின் குற்றவியல் பிரிவினால் சுவாமியின் மரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வந்தது. எந்தவொரு பரபரப்பான நிகழ்வுபோல இதுவும் ஊடகங்களினால் சில வாரங்கள் பேசப்பட்டு, பிறகு ஆறாவது பக்கச் செய்தியாக இடம்பெற ஆரம்பித்தது. நிதி மந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், லாரியை ஓட்டிவந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்த நிலையில் இந்த வழக்கில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. லாரியை ஓட்டிய டிரைவர் பெயிலில் வெளியே வந்தான். இந்தியாவில் நிலவிவரும் மெதுவான சட்ட செயல்பாடு களினால் அவன் நீண்ட காலத் துக்கு சிறைக்குச் செல்லாமலே காலங்கடத்து வான் என எதிர்பார்க்கப்பட்டது.

சில மாதங்களுக்குப்பிறகு, ஹவாயில் இருந்த பீச்சில் உல்லாசமாக தனது ஓய்வுக் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார் டான். அப்போது அவருடைய போன் ஒலித்தது.  ஏட்ரியன் அழைத்தார்.

“ஹாய், ஏட்ரியன், நீ ஏன் இங்கே வந்து என்னைப்போல இருக்கக்கூடாது?” 

“டான், ஐஸ் ப்ரேக்கர்ஸ் என்கிற பெயரில் ஒரு லாக்-இன். மீண்டும் மிண்ட், தி மிண்ட் ஐஸ்ப்ரேக்கர்ஸ்...”

“வட்டமான பிளாஸ்டிக் டப்பாவா...?’’

“அது இல்லை, டான்.”

“அப்புறம் என்ன?”

‘‘யாரோ ஒருவர் இந்தப் பெயரில் லாக்இன் செய்து பதிவிட்டிருக்கிறார். அதில், `காட்டன் ட்ரையில் 2.0’ என்கிற இணையத்தளத்தை நான் பார்க்க நேர்ந்தது. இது மறைக்கப்பட்ட டார் (TOR) சேவையாகும்; இதில் யார் வேண்டு மானாலும் எதை வேண்டுமானாலும் விற்கவோ, வாங்கவோ முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அதை வாங்க நினைக்கிறேன். ஆனால், இங்கிருப்பவர்கள் யாராவது இதுபற்றிக் கேள்விப்பட்டு பரிந்துரைக்க முடியுமா? இது எனக்கு Cottontrail420.wordpress.com மூலம் தெரியவந்தது. உங்களிடம் டார் ப்ரெளஸர் இருந்தால் உண்மையான இணையதளத் துக்கு அது உங்களை இட்டுச் செல்லும் எனவும், இன்னும் சில விவரங்களும் இருந்தன. உங்களுக்குத் தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்களா?”

`’நான் பேசுவது அப்படியா இருக்கிறது?’’

“அப்படியென்றால் நாம் யாரை இதுவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தோம்? இதற்குப் பின்புலமாக இருக்கும் உண்மையான சூத்ரதாரி இன்னும் சுதந்திரமாக இருக்கிறானா?”

“இருக்கலாம்…”

“இப்ப என்ன சாய்ஸ் இருக்கிறது?”  டான் கேட்டார்.

“இந்த வழக்கைத் திரும்ப ஆரம்பிக்க நான் விரும்பவில்லை. அப்படி ஆரம்பித்தால் நாம் முட்டாள்களாகத் தோற்றம் அளிப்போம்.”

“நான் ஒப்புக்கொள்கிறேன். நாம் சரியானதைத் தான் கண்டுபிடித்தோம் என உலகம் நம்பட்டும்” என்றார்.

(அடுத்த இதழில் முடியும்)  

ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism