தங்கம் என்பது நம்மில் பலருக்குப் பிடித்தமான விஷயமாகும். குறிப்பாக, பெண்களில் தங்கத்தை விரும்பாதவர்கள் மிகக் குறைவே. தங்கம் என்பது ஒரு கடைசிக் கட்ட சொத்தாகும்.

உள்நாட்டு கலவரங்கள் நிகழும்போது, பெருவாரியான மக்கள் புலம்பெயர்கின்றனர். அதுபோன்ற சமயங்களில், நீங்கள் நிலத்தையோ, வீட்டையோ, ஃபிக்ஸட் டெபாசிட்டுகளையோ அல்லது பங்குகளையோ / மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளையோ தூக்கிக்கொண்டு செல்ல முடியாது. அதுபோன்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில், தங்கம் கைகொடுத்து உதவும்.

மேலும், உலகெங்கிலும் அமைதியின்மை அல்லது பொருளாதார நெருக்கடி நடக்கும்போது தங்கம் உயர்ந்து நிற்கும். ஆகவே, ஒவ்வொருவரின் முதலீட்டிலும் தங்கத்திற்கு தனியிடம் உண்டு.

இந்தியர்களைப் பொறுத்தவரையில், தங்கம் ஒரு கன்ஸர்வேட்டிவ் முதலீடாகும். ஆகவே, அதில் பெருத்த வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. நீண்ட காலத்தில் பணவீக்கத்தையொட்டிய வருமானத்தை ஈட்டித் தரும். கடந்த ஆறேழு வருடங்களாகத் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு விலை உயர்வு ஏதுமில்லை. கடந்த ஓராண்டில் சுமார் 10% விலை உயர்ந்துள்ளது. கடந்த பல வருடங்களாக விலையேற்றம் இல்லாததால், இனிவரும் வருடங்களில் பல்வேறு காரணங்களால் சிறுகச் சிறுக விலை ஏற்றத்தைக் காணலாம். ஆகவே, தங்கத்தை விரும்புகிறவர்கள், தங்கத்தில் முதலீட்டைச் செய்யலாம்.

பொதுவாக, 5 – 10% ஒவ்வொருவரும் தங்களது முதலீட்டில் தங்கத்திற்கு இடம் கொடுக்கலாம். இதை ஆபரணமாகவோ, பிஸ்கட்டுகளாகவோ, பாண்டுகளாகவோ அல்லது ஃபண்டுகளாகவோ வைத்துக்கொள்ளலாம்.

தங்கத்திலான உங்களின் முதலீட்டிற்குக் கீழ்க்கண்ட வரிசைப்படி முக்கியத்துவம் தரலாம்.

* ஆபரணங்கள்

* மத்திய அரசாங்க கோல்டு பாண்டுகள்

* பிஸ்கட்டுகள்

* இ.டி.எஃப்

* கோல்டு ஃபண்டுகள்

ஆபரணங்கள்: ஆபரணங்களுக்கு ஏன் முதல் முக்கியத்துவம், அதில் சேதாரம், செய்கூலி எல்லாம் உள்ளதே என்று நீங்கள் நினைக்கலாம். அது அணிபவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சிக்கு நீங்கள் கொடுக்கும் பணம்தான் செய்கூலி, சேதாரம். சொத்துக்குச் சொத்து, மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி! மேலும், பலருக்கு இந்த ஆபரணங்கள் அடகு வைத்து உடனடியாகப் பணம் திரட்டுவதற்கு உதவியாக உள்ளது.

சாவரின் கோல்டு பாண்டுகள்: உங்களுக்கு நகை அணிவதற்குத் தேவை இல்லை என்றால், மத்திய அரசாங்கம் அளிக்கும் கோல்டு பாண்டுகளைத் தாராளமாக நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அதில் அரசாங்க உத்தரவாதம் கிடைப்பதுடன், வருடத்திற்கு 2.50% வட்டியும் கிடைக்கும். இந்தவித பாண்டுகள் 8 வருட மெச்சூரிட்டியுடன் வருகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் பலமுறை அரசாங்கம் இந்த பாண்டுகளை வெளியிடுகிறது.

பிஸ்கட்டுகள்: மேற்கண்ட பாண்டுகளைச் சில காரணங்களுக்காக வாங்க விரும்பாதவர்கள், அடுத்தகட்டமாக தங்க பிஸ்கட்டுகளில் முதலீடு செய்யலாம். உங்களுக்குப் பணம் தேவைப்படும் போது, சந்தையில் அதை விற்று உடனடியாக விற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே லாக்கர் இருக்கும்பட்சத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். கூடுதல் பராமரிப்புச் செலவு இல்லை.

இ.டி.எஃப்: மேற்கண்ட மூன்று வழிமுறைகளும் எனக்கு வேண்டாம். வேண்டும் என்கிறபோது எளிதாக வாங்க / விற்க விரும்புகிறவர்கள் கோல்டு இ.டி.எஃப்-ல் (ETF – Exchange Traded Fund) முதலீடு செய்யலாம். இ.டி.எஃப்-கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் நிர்வகிக்கப் பட்டு, பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. எப்போது வேண்டுமானாலும், தங்க இ.டி.எஃப் யூனிட்டுகளை பங்குச் சந்தை மூலமாக வாங்கலாம் / விற்கலாம். உங்களது டீமேட் கணக்கில் யூனிட்டுகள் வரவாகிவிடும்.

பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த இ.டி.எஃப்-ஐ நடத்தினாலும், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் ரிலையன்ஸ் இ.டி.எஃப் கோல்டு பீஸ் (BeES) தான் மிகவும் பிரபலம். இந்த இ.டி.எஃப் யூனிட்டுகளை வாங்க டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்ட் தேவை. இ.டி.எஃப் யூனிட்டுகள் தற்போது பங்குச் சந்தையில் சுமார் ரூ.3,000 என்கிற அளவில் வர்த்தகமாகின்றன.

கோல்டு ஃபண்டுகள்: என்னிடம் டீமேட் கணக்கு இல்லை, அவ்வப் போது விலையைப் பார்த்து வாங்க முடியாது அல்லது ஒவ்வொரு முறை வாங்கும் போதும் குறைந்தபட்சம் ரூ.3,000-த்தை என்னால் முதலீடு செய்ய முடியாது என நினைப்பவர்கள் கோல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பல கோல்டு ஃபண்டுகளில் குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடாக ரூ.500-ஐ வைத்துள்ளன. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதுடன், அவ்வப்போது சிறு தொகைகளையும் முதலீடு செய்துகொள்ளலாம்.

சிறிய முதலீட்டாளர்களுக்கு கோல்டு ஃபண்டுகள் வசதியாக இருக்கும். ஒரு ஆண்டுக்குள் வெளியேறுகையில், பொதுவாக 1% வெளியேற்றுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஃபண்டுகள் மக்களிடமிருந்து திரட்டும் நிதியை, நேரடியாகத் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. சில சமயங்களில் அதே ஃபண்ட் நிறுவனம் தங்க இ.டி.எஃப்-களில் முதலீடு செய்கின்றன. கோல்டு இ.டி.எஃப்-கள் தங்க கட்டிகளை வாங்கி தங்களது கண்காணிப்பில் வைத்துக்கொள்கின்றன.

கோல்டு ஃபண்டுகளில் கிடைக்கும் லாபத்திற்கு, கடன் சார்ந்த திட்டங்களுக்கு உள்ள வரி உரித்தாகும். மூன்று வருடங்களுக்குமேல் வைத்தி ருக்கையில், பணவீக்கத்திற்கு அட்ஜஸ்ட் செய்த பிறகு குறைவான வரியையே கட்டவேண்டி வரும். மூன்று வருடங்களுக்குள் விற்று வெளிவரும் போது, வரும் லாபத்திற்கு நீங்கள் இருக்கும் டாக்ஸ் வரம்பில் வரி கட்ட வேண்டும்.

முதலீட்டிற்கு உகந்த சில கோல்டு ஃபண்டுகளையும், அவற்றைப் பற்றிய வருமான விவரங்களையும் மேலே தந்துள்ளோம். வேண்டும் என்கிற வர்கள் பார்த்துக்கொள்ளலாம்!

(பார்வை தொடரும்)

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)