நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் QUIZ

நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.  

நாணயம் QUIZ

சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...

1. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்சர்கள்

அ. எஸ்.பி.ஐ, பி.என்.பி, பேங்க் ஆஃப் பரோடா, எல்.ஐ.சி. 

ஆ. யூ.டி.ஐ. டெக்னாலஜிஸ் சர்வீசஸ்,  ஐ.டி.பி.ஐ பேங்க் 
 
இ.  ஐ.ஓ.பி, இந்தியன் பேங்க்


2.  கூட்டு நிறுவனம் உருவாக்கப்படுவது?


அ. அரசின் வழிகாட்டல் மூலம்

ஆ. கூட்டாளிகள் இடையேயான உறவு

இ. ஒப்பந்தம் மூலம்


3. ஒரு நிறுவனத்தின் வாழ்வுக்காலம் எப்போது முடிவுக்கு வரும்?

அ.அதனைத் தொடங்கியவர்கள்  இறந்தவுடன்

ஆ. இயக்குநர் அனைவரும் மறைந்தவுடன்

இ.பங்குகளை மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுத்தவுடன்

ஈ. மேற்கண்ட எந்தச் சூழ்நிலையிலும் முடிவுக்கு வராது 

4.  கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்படுவது

அ. நகரங்கள்

ஆ. கிராமங்கள்

இ. இரண்டிலும்


5.  பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடுவது

அ.  கட்டாயம்

ஆ. கட்டாயமில்லை


6. காப்பீடு என்பது எதை அடிப்படையாகக் கொண்டுள்ளது? 

அ. நிதியியல்

ஆ. வங்கியியல்

இ. கூட்டுறவு


7.  நுகர்வோர் தினம்


அ. நவம்பர் 15

ஆ. மே 5

இ. மார்ச் 15


8.  நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்.பி.ஐ) மூலமான வருமானம்

அ. பங்குச் சந்தையின் செயல்பாட்டைச் சார்ந்துள்ளது

ஆ. நிலையான வருமானம் கிடைக்கும்


9. டீமேட் கணக்கு மூலம்

அ. பங்குகளில் மட்டும் முதலீடு செய்யலாம்

ஆ. மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்யலாம்

இ.  பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் 

10.  ஒருவருக்கு எப்போது வீட்டு வாடகை படிக்கு (HRA) வரி விலக்கு கிடைக்கும்?

அ.வீட்டு வாடகை கொடுக்கும் அனைவருக்கும்

ஆ. சம்பளத்தில் வீட்டு வாடகை படி வழங்கப்படும் நிலையில் வாடகை வீட்டில் குடிருக்கும் பட்சத்தில்


சி.சரவணன்

விடைகள்

1. அ. எஸ்.பி.ஐ, பி.என்.பி, பேங்க் ஆஃப் பரோடா, எல்.ஐ.சி.

2. இ. ஒப்பந்தம் மூலம்

3. ஈ. மேற்கண்ட எந்தச் சூழ்நிலையிலும் முடிவுக்கு வராது

4. இ. இரண்டிலும்

5. அ. கட்டாயம்

6. இ. கூட்டுறவு

7. இ. மார்ச் 15

8. அ. பங்குச் சந்தையின் செயல்பாட்டைச் சார்ந்துள்ளது

9. இ. பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்

10. ஆ. சம்பளத்தில் வீட்டு வாடகை் படி வழங்கப்படும் நிலையில் வாடகை வீட்டில் குடிருக்கும்பட்சத்தில்