நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த மூன்று மாதங்கள் குறிப்பிடத் தக்க மாதங்களாக அமைந்துவிட்டன. இது வழக்கமான ஒன்றல்ல என்றாலும், நிஃப்டி புள்ளிகள்  நீட்டிக்கப்பட்ட கால வரம்புக்குள் இருந்துள்ளது. இதை        2015-ல் ( செப்டம்பர் - டிசம்பர்), 2014       (நவம்பர் - பிப்ரவரி), 2013 (மார்ச் - ஜூலை) மற்றும் 2008 - 09 ( நவம்பர் - பிப்ரவரி) ஆண்டுகளில் பார்த்துள்ளோம். அவை ஒவ்வொன்றுமே நான்கு மாதங்களாகவே இருக்கின்றன. ஆகவே, வேறு எதை நோக்கியும் செல்லாமல் நம்மால் இதேபோன்று இன்னும் ஒரு மாதத்தைக் கழிப்பது இன்னும் சாத்தியமான ஒன்றுதான்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், சற்று முயன்றால் சந்தேகமே இல்லாமல் ஏதோ ஒன்றை நம்மால் சகித்துக் கொள்ள முடியும், அவ்வளவுதான். சந்தை  ஒரு வரம்புக்குள் இருக்கும் அதுமாதிரியான ஒவ்வொரு சமயத்திலும், சந்தேகமே இல்லாமல் அதற்கான காரணங்கள் இருக்கும்.

நிச்சயமற்ற தேர்தல் முடிவுகளும் அதில் ஒன்றுதான். ஆனால், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காணப் பட்ட போர் மேகம் சூழல் நிலையையும் சந்தை எதிர்த்து நின்றது ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது.

சந்தை கீழே இறங்க விரும்பவில்லை என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. நிஃப்டி  10800 நிலையைத் தாங்கி பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, வருகிற நாள்களில் அது ஓர் ஆதரவு நிலையாக உருவாகும் என்றே தெரிகிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிரேடர்கள் தற்போது பங்குகளின் விலை ஏற்ற இறக்க கால வரம்பைக் கூட சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.  நிஃப்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீக்லி ஆப்ஷன்கள் அநேகமாக அவர் களுக்குச் சுலபமானதாக இருக்கக்கூடும்.  கடந்த இரண்டு வர்த்தக தினங்களின் ஏற்ற இறக்கத்தில் பங்குகளை விற்பது அல்லது வாங்குவது சற்று சுலபாக இருக்கிறது.

எனவே, வரவிருக்கும் வாரத்தில் புதிய பொஷிசன்கள் உருவாவதைப் பார்க்கலாம். அத்துடன் அங்கு உருவாகும் ஆப்ஷன்  சங்கிலியே, அது எப்படித் தன்னை அமைத்துக் கொள்ளும் என்பதைத் தெரிவிக்கும் அறிகுறியாக இருக்கும்.

உணர்வுகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், உணர்வுகள் அதிகமாக ஆட்கொள்ளும் போது மக்கள் தவறான முடிவுகளை எடுக்கும் போக்கு காணப்படுகிறது. ஆகவே, தற்போதைக்கு சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியாக இருக்கிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில்,  பங்குகளின் விலை நகர்வுகளுக்கு ஏற்ப முடிவெடுப்பது நல்லது என்று கூறியிருந்தோம். நிஃப்டி 10700-11200-க்கு இடைப்பட்ட ஒரு போக்கைக் கொண்டிருக்கிறது.

தற்போது 150 புள்ளிகள் அங்கும் இங்கும் இழுத்துக்கொண்டிருக்கிறன. அந்த நிலை மீதே நாம் வியாபாரத்தைத் தொடங்கி, தேவைப்பட்டால் சரி செய்துகொள்வதற்கு வார ஆப்ஷன் களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த உத்தி, ஆப்ஷன்கள் குறித்து சற்று தெரிந்தவர்களுக்குத் தானே தவிர, தெரியாதவர்களுக்கு அல்ல.

மற்றவர்கள், வாரத்தின் இடையே நிஃப்டி 10750-10800- ஐ நோக்கிக் கீழிறங்கினால், அதைப் பயன்படுத்தி வாங்கும் உத்தியைப் பின்பற்றலாம்.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஃபைஸர் (PFIZER)

தற்போதைய விலை: ரூ.3,299.45

வாங்கலாம்


இந்த நிறுவனத்தின் பங்கை ஏற்கெனவே  பரிந்துரைத்திருக்கிறோம். விலை ஏறி முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ளது. பங்கின் விலை இப்போதும்  தொடர்ந்து ஏற்றம் பெறுவதுபோல் உள்ளது. இதன் விலை, நன்கு பிரேக் அவுட்டாகியுள்ளது.

தற்போது அதிக  வால்யூம் மற்றும் மேம்பட்ட நகர்வின் காரணமாக மேல்நோக்கி நன்கு வேகமெடுத்துள்ளது. முதலீட்டாளர்கள், இதன் பங்குகளில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள். குறுகிய காலத்தில் பங்கின் விலை 3,500 ரூபாயை எட்டக்கூடும். 3,100 ரூபாய்க்குக்கீழே ஸ்டாப்லாஸ் வைத்து வாங்கவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் (LEMONTREE)

தற்போதைய விலை: ரூ.75.65

வாங்கலாம்


பட்டியலிடப்பட்டதிலிருந்தே இந்தப் பங்கு நன்கு செயல்பட்டு வருகிறது. புதிய முதலீடுகளால் பங்கின் விலை குறுகிய காலத்தில் 84 ரூபாயை எட்டியிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தப் பங்குச் பலவீனத்தால் லாபம் குறைந்து நீண்ட சரிவைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் 65 ரூபாய்க்கு அருகே வாங்குவது அதிகரித்து மீண்டும் மேலே ஏறுகிறது. சார்ட்டில் இதன் விலை இறக்க நகர்வு, இரண்டு நல்ல கூம்பு வடிவத்தை உருவாக்கியுள்ளது.

இதன் விலை மேலே ஏறி பிரேக் அவுட் புள்ளிக்கருகே செல்வதாகத் தெரிகிறது. இந்த பிரேக் அவுட்டினால், புதிய நகர்வாக 77 ரூபாயை கடக்கக்கூடும். முந்தைய உயரத்திற்குச் சவால்விடும்படியாக விலை ஏறி, 95-100 ரூபாய்க்கு அருகே எட்டும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.68 வைத்து வாங்கவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டெல்டா கார்ப் (DELTACORP)

தற்போதைய விலை: ரூ.249.20

வாங்கலாம்

வாங்கும் விருப்பமுள்ளவர்களையும், வெறுப்பவர்களையும் சம அளவில் கொண்டுள்ள பங்காக இது இருக்கிறது. எனவே, இதன்  விலைப்போக்கு சிறிது ஏறுவதும் பின்னர் குறைவதுமாக உள்ளது. தற்போது இந்தப் பங்கானது ஒரு நீண்ட கால வாங்கும் வாய்ப்புக்கான அறிகுறியோடு இருப்பது சார்ட்டில் தெரிகிறது.

எனவே விரைவில் ஒரு சுற்று ஏற்றத்துக்கு வாய்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது. எனவே, 230 ரூபாய்க்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்து தற்போதைய நிலையில் வாங்கலாம். குறுகிய கால இலக்கு விலை ரூ.290.

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்ஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!