Published:Updated:

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

கேள்வி - பதில்

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

கேள்வி - பதில்

Published:Updated:
கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

நான், கடந்த செப்டம்பர் 1, 2018-ம் ஆண்டில் பொதுத்துறை வங்கியிலிருந்து ஓய்வு பெற்றேன். கிராஜுவிட்டி தொகையாக ரூ.16 லட்சம் கிடைத்தது. இந்தத் தொகையில் ரூ.10 லட்சத்துக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு என்று கூறுகிறார்கள். இது சரியா?

திருவாசகம், சென்னை

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் 

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

“நீங்கள் வங்கிப் பணியாளராக இருந்ததால், கிராஜுவிட்டி சட்டப்படி உங்களுக்கான தொகை வழங்கப் பட்டிருக்கும். இதற்கான வரிச் சலுகையைக் கணக்கிடுவதில் மூன்று முறைகள் உள்ளன. அந்த மூன்றில் எது குறைவான தொகையோ, அதுதான் வரிச் சலுகைக்குக் கணக்கில்கொள்ளப்படும்.

முதல் முறையில், கிராஜுவிட்டி தொகையை நீங்கள் 29.3.2018 தேதிக்குப் பிறகு வாங்கினால், அதற்கு ரூ.20 லட்சம்  வரை வரிச் சலுகை உண்டு. இதன்படி ரூ.20 லட்சம் கணக்கில் வருகிறது.

இரண்டாவது முறையில், ஓர் ஆண்டுக்கு உங்களின் 15 நாள் சம்பளத்தை உங்களுடைய பணி ஆண்டுகளுடன் பெருக்கிவரும் தொகை கிராஜுவிட்டி யாகக் கணக்கிடப்படும். இந்தத் தொகை ரூ.20 லட்சத்தைவிடக் குறைவா அல்லது அதிகமா என்று பார்க்க வேண்டும்.

மூன்றாவதாக, நீங்கள் வாங்கிய கிராஜுவிட்டி தொகை ரூ.16 லட்சம். இந்த மூன்று தொகையில் எது குறைவானதோ, அதுதான் வரிச் சலுகைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதைவிடக் கூடுதலாக இருக்கும் தொகைக்கு வரிச் செலுத்தியாக வேண்டும். எனவே, உங்களுடைய  15 நாள் சம்பளம், சர்வீஸ் ஆண்டு ஆகியவற்றைப் பொறுத்தே இதை முழுமையாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியும்.”

ஷரோன் பயோ நிறுவனம், வாராக் கடன் பிரச்னையில் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, ஒரு மாத கால இலக்கில் வாங்கலாமா?

விஜயகுமார் நாதன், ஃபேஸ்புக் வழியாக...

எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை ஆலோசகர்


“ஷரோன் பயோ நிறுவனத்தின் நிதிநிலை, தற்போது நல்ல நிலையில் இல்லை. எனவே, அதன் பங்குகளில் எந்தவிதமான ஈடுபாடும் காட்டாமல் இருப்பதே பாதுகாப்பானது.”

அரசு ஊழியராகிய நான், எல் & டி இந்தியா வேல்யூ ஃபண்டில் ரூ.4,000, எல் & டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்டில் ரூ.2,500, பிர்லா சன் லைஃப் மிட்கேப் ஃபண்டில் 3,000 ரூபாயை மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். மேலும், 50,000 ரூபாயை டாக்ஸ் சேவிங் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனது முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள். நான் முதலீடு செய்துள்ள ஃபண்டுகள் சரிதானா? கூடுதல் தொகையைப் பெற நான் எதில் முதலீடு செய்யலாம்?

வெற்றிவேல், மதுரை


ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

“உங்களின் தற்போதைய முதலீட்டுத் தேர்வான எல் & டி இந்தியா வேல்யூ ஃபண்ட் நல்ல தேர்வு தான். எல் & டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்டுக்குப் பதிலாக, இன்வெஸ்கோ இந்தியா மல்டிகேப் ஃபண்டை நீங்கள் பரிசீலிக்கலாம். அதேபோல், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மிட்கேப் ஃபண்டுக்குப் பதிலாக, எல் & டி மிட்கேப் ஃபண்ட் அல்லது ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்டைக் கவனிக்கலாம். வரிச் சேமிப்பு முதலீட்டைப் பொறுத்தவரை, நீங்கள் மிரே அஸெட் டாக்ஸ் சேவர் மற்றும் ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றையும் பரிசீலிக்கலாம்.’’

எங்களது எட்டு வயது மகனுக்கு ஆட்டிசம். இதற்கான சிகிச்சை செலவுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்யலாமா?

நித்ய லட்சுமி, சென்னை

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்


“பொதுவாக, பிறவிக் குறைபாடு நோய்களுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய முடியாது. ஆட்டிசம் பிறவிக் குறைபாடு வகையில் வருவதால், இதற்கான சிகிச்சைக்கு மெடிக்கல் இன்ஷூன்ரஸில் க்ளெய்ம் கிடையாது.”

பணி ஓய்வுபெற்றுள்ள நான், 30 லட்சம் ரூபாயை தலா 15 லட்சம் ரூபாயாகப் பிரித்து கடன் சார்ந்த பங்குகளிலும், பங்கு சார்ந்த பங்குகளிலும் பிரித்து முதலீடு செய்ய விரும்புகிறேன். ஆலோசனை கூறவும்.

வரதராஜன், சென்னை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்


“உங்கள் முதலீட்டை மூன்று ஹைபிரீட் பாண்ட் ஃபண்டுகளில் சமமாகப் பிரித்து, குறைந்தது மூன்றாண்டு கால அளவுக்காவது முதலீடு செய்யவும். அப்படிச் செய்தால், ஓரளவு லாபகரமாகச் செயல்படலாம். இதையே ஐந்தாண்டு காலத்துக்கும் அதற்கு மேலும் முதலீடு செய்தால், வங்கி வைப்புத்தொகைக்கான வருமானத்தைவிட 2% அதிக வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

உங்களுடைய 30 லட்சம் ரூபாயை தலா 10 லட்சம் ரூபாயாகப் பிரித்து, ரிலையன்ஸ் ஹைபிரீட் பாண்ட் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டெட் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும். வருமானத்தை சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் முறையில் தேவைப்படும்போது திரும்ப எடுத்துப் பயன்பெறலாம்.”

நான், ஆக்ஸிஸ் ஃபோகஸ் 25 ஃபண்டில்  ரூ.2,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 திட்டத்தில் ரூ.3,000 என எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். மேலும், பி.ஓ.ஐ (BOI) டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்டில் வரிச் சேமிப்புக்காக பத்து ஆண்டுகாலத்துக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். என் ஃபண்ட் தேர்வு சரியானதா? 

ரத்னவேல், புதுக்கோட்டை

கனகா ஆசை,  நிதி ஆலோசகர்


“நன்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்தான் முதலீடு செய்துள்ளீர்கள். இந்த முதலீடுகளை அப்படியே தொடருங்கள். அடுத்து நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் ஃபண்டுகளில் டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் நல்ல தேர்வுதான். ஆனால், பி.ஓ.ஐ (BOI) டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்டுக்குப் பதிலாக, தொடர்ந்து நல்லமுறையில் செயல்பட்டு வரும் மிரே அஸெட் டாக்ஸ் சேவர் குரோத் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.” 

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

நான் 65 வயது ஓய்வூதியதாரர். மியூச்சுவல் ஃபண்டில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கு யோசனை கூறவும்.

மகேந்திரன், திருச்சி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“மியூச்சுவல் ஃபண்டில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. குறிப்பிட்ட ஃபண்ட் கம்பெனிகளின் இணையதளங்களின் வழியே முதலீடு செய்யலாம். இதுபோக, பல்வேறு நிதிச் சேவை நிறுவனங்களின் தளங்களும் இதற்கு உதவி புரியும். இத்தகைய முதலீட்டுத் தளங்கள், ஆன்லைன் வசதியுடன் கூடுதலாக வழிகாட்டு தலும் அளிக்கின்றனவா என்பதைக் கண்டறிந்த பிறகு முதலீடு செய்வது முக்கியமானது. எப்படி முதலீடு செய்கிறோம் என்பதைவிட, எதில் முதலீடு செய்கிறோம் என்பதே லாபத்துக்கு முக்கியம். ஆதலால், ஆன்லைன் வழங்கும் வசதிகளைக் கொண்டு, அதேசமயம் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் இருக்கும் சேவை களைத் தேர்வு செய்யவும்.”

முடிந்த நிதியாண்டில் வருமான வரிக் கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு தவறால் நான் ரூ.80 வரி கட்டும்படி உள்ளது. இந்த வரியை நான் கட்ட வேண்டுமா?

செந்தில்குமார், சேலம்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்


“கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இந்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வரிச் செலுத்திய கணக்கீட்டில் இருக்கும் தவற்றின் காரணமாக ஏற்படும் வித்தியாசம் நூறு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், அதை வரிச் செலுத்துபவர் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை என்று  கூறப்பட்டுள்ளது. அதேபோல, வரிச் செலுத்துபவர் கூடுதல் தொகையைச் செலுத்தி, அது நூறு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில் அரசாங்கம் திருப்பித் தராது என்றும் கூறப் பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், 80 ரூபாயைச் நீங்கள் செலுத்தவேண்டிய அவசியமில்லை.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism