Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

பல மாதங்களாகக் குறிப்பிட்ட வரம்புக்குள் ளேயே இருந்த சந்தை, அதிலிருந்து வெளியேறி இருப்பதுபோல் தெரிகிறது. ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்த பங்குகளின் விலை,  வரவிருக்கும் வாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பதை நாம் பார்க்கலாம்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இருப்பினும், எல்லைக்கு அருகே தொடர்ந்து போராட்டத்தை எதிர்கொண்ட சந்தையின் தற்போதைய வலுவான நிலை, நிச்சயம் நல்ல ஒரு சென்டிமென்டை நோக்கித் திரும்புவதற்கான அறிகுறியாகவே தெரிகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்கியிருப்பதும் கூட, தேர்தல் குறித்த நிச்சயமின்மையால் ஏற்பட்ட தொங்கல் நிலை குறைந்து வருவதைக் காட்டுகிறது.

உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், சில பங்குகளை விற்று லாபம் பார்த்துவரும் நிலையில் புதிய முதலீடுகளையும் மேற்கொண்டு வருகின்றன. மொத்தத்தில் எப்படியிருந்தாலும், பல டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மார்ச் என்பது சமநிலைப்படுத்திக்கொள்ளும் மாதமாக இருப்பதுடன், அதற்கான காற்றும் வீசத் தொடங்கிவிட்டதால் இந்தக் கண்ணோட்டம் சந்தையை இன்னும் அதிகமாகப் பாதிக்க கூடும்.

இண்டெக்ஸ், சமீபத்திய உச்சநிலைக்குச் செல்லக் காட்டிய பாய்ச்சலைப் பார்த்த யாருமே மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், இண்டெக்ஸ் அதிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறது. இண்டெக்ஸுக்கு வெளியே உள்ள  நிறுவனப் பங்குகளின் போக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த மூன்று மாதங்களாக, தொடர்ந்து உருவான டோஜி கேண்டில்களுக்குப்பின்னர், மாத கேண்டில் சார்ட் மேலே செல்வதற்கான அறிகுறியைக் காட்டிக்கொண்டிருக்கிறது.மேலும், 27500-க்கு மேலே உள்ள தற்போதைய பேங்க் நிஃப்டி புள்ளிகளை இன்னும் மேலே செல்வதற்கு நிஃப்டியால் மேற்கொள்ளப்படும் முயற்சி, அதற்கு ஆதரவாக இருப்பது போன்று தெரிவதை நாம் பார்க்கலாம்.

இண்டெக்ஸ் தற்போது குறிப்பிட்ட வரம்பி லிருந்து மேலே நோக்கி நகரும் நோக்கத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதால், சந்தையின் போக்குக்கேற்ப வியாபாரம் செய்வதற்கு ஏற்றத் தருணமாக இது இருக்கக்கூடும். ஒருவேளை, நிஃப்டியால் 11050-க்கு மேல் நிலைத்திருக்க முடியுமென்றால், காளைகளின் பாய்ச்சல் பல இடங்களுக்குப் பரவுவதைப் பார்க்கலாம்.

நிஃப்டிக்கான உடனடி இலக்கு 11200 புள்ளிகளாக இருப்பதைப் பார்க்க முடிவதுடன், அதற்குமேல் 11400 புள்ளிகளுக்கு அருகிலும் கூட சில பெரிய  நிலை உள்ளது. நிஃப்டிக்கான ஆதரவுப் பகுதி தற்போது 10900 புள்ளிகளுக்கு நகர்ந்துள்ளது. ஆனாலும், 10800 புள்ளிகளையே தொடர்ந்து ஓர் அர்த்தமிக்க ஆதரவு நிலையாகத் தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம்.

என்.சி.சி (NCC)

தற்போதைய விலை: ரூ.99.90

வாங்கலாம்

இந்த நிறுவனத்தின் பங்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.92-க்கு அருகே நீண்ட காலமாக இருந்துள்ளது. இந்த விலையைக் கடந்து செல்வதற்குப் பலமுறை முயற்சிகள் நடந்து, ஒவ்வொருமுறையும் பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு மீட்சியிலும் ஓர் உயர்ந்த தாழ்வுநிலையை உருவாக்குகிறது. இது ஏறக்குறைய முக்கோண வடிவத்தைப் போன்ற பேட்டர்னாக உள்ளது.

அதிக வால்யூம் மூலம் தடைகளைத் தாண்டி வழக்கம்போல் பிரேக்அவுட்டாகி மேலேறியதோடு இந்த வாரம் நிறைவுபெற்றிருக்கிறது. ஆனால், இந்த முறை கணக்கீட்டில் தெளிவான மாற்றம் தெரிகிறது. விலையானது 50% ரீட்ரேஸ்மென்ட் பகுதிக்கு உயர்ந்து தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து ரூ.100-110 என்ற அளவிற்குக்  குறுகிய காலத்தில் உயருமென்று நாம் எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.87 வைத்து வாங்கவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹெஸ்டர் பயோசயின்சஸ் (HESTERBIO)

தற்போதைய விலை: ரூ.1488.75

வாங்கலாம்


விலங்குகளுக்கான நோய்த் தடுப்பூசிகள் மற்றும் விலங்குப் பராமரிப்புக்கான தயாரிப்புகளில் இந்த நிறுவனம் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு சிறிது காலம் மிகவும் நல்ல நிலையில் செயல்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு  இதன்  போக்கு  சற்று ஆசுவாசப்படுத்துவ தாக இருந்தது. இதன் போக்கில் கடந்த சில மாதங் களாகக் காணப்பட்ட தேக்கநிலை, தற்போது முடிவுக்கு வந்து மேலேறி வருகிறது. இது பொதுவாக, மேலும் வலுவாக உயர்வதற்கான நல்ல அறிகுறியாகும். சார்ட்டில் பல்வேறு ஆதரவு தடை நிலைகள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றைத்தான் இதன் விலை தாண்டிச் செல்கிறது. முந்தைய உச்சங்களைத் தொடுவதற்கான சாத்தியங்கள் தற்போது உள்ளன. ஸ்டாப்லாஸ் ரூ.1,375 வைத்து வாங்கவும். இலக்கு விலை ரூ.1,750.

ஆஸ்ட்ரால் பாலி டெக்னிக் (ASTRAL)

தற்போதைய விலை: ரூ.1,199.95

வாங்கலாம்


இந்தப் பங்கின் போக்கு  பெரிய சரிவிலிருந்தது.  2018, நவம்பரில் அதிலிருந்து மீண்டுள்ளது. காளையின் ஏற்றம் சவாலான நிலை அளவுக்கு உயர்ந்து,  தற்போது பங்கின் விலையைத் தீர்க்கமாக முந்தைய உயரங்களை நோக்கித் திரும்பியுள்ளது.  பழைய உச்சங்களுக்குச் சவாலாக இந்த வாரம் நிறைவடைந்து, தற்போது தொடர்ந்து மேலேறுவதுபோல் உள்ளது.  மேலும், தற்போதைய உயரங்களைத் தாண்டி மேலேறி புதிய உச்சத்தைத் தொடுவதற்கான அறிகுறி தெரிகிறது. விலை ரூ.1,200-க்கு மேலே பிரேக் அவுட்டாகி புதிய உச்சத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்புடன் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,170.

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவெயூன்ஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism