தங்கத்தின் விலை, சமீப காலம் வரை ஏற்றமில்லாமல் காணப்பட்டது. இடையில் விலை உயர்ந்த தங்கம் இப்போது இறங்க ஆரம்பித்திருக்கிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்ததும், தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்ததும் தங்கம் விலை குறைவதற்கு முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. தவிர, இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரத்தில் திடீரென ஏற்றம் காணத் தொடங்கியவுடன் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தி லிருந்து பங்குச் சந்தை நோக்கித் திரும்பியதும் முக்கியக் காரணம். இந்தியா வுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் குறைந்ததும் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த 15 நாள்களில் தங்கத்தின் விலை 6.55% குறைந்தது. மும்பையில் 10 கிராம் தங்கம் பிப்ரவரி 20-ம் தேதி 33,725 ரூபாயாக இருந்தது. இது மார்ச் 6-ம் தேதி ரூ.31,975-ஆகக் குறைந்தது.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 1,400 டாலருக்குமேல் சென்றால் மட்டுமே மிக வேகமாக வளரும். அந்த விலையைக் கடப்பதற்கு முன் தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என சர்வதேச நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ சொல்லியிருக்கிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த டிசம்பரில் உச்சபட்சமாக ரூ.1,349 டாலரைத் தொட்டது. பிற்பாடு விலை குறையத் தொடங்கிய தங்கம், தற்போது ஒரு அவுன்ஸுக்கு 1,298 டாலராக வர்த்தகம் ஆகிறது.

தங்கம் விலை குறைந்தாலும், அதை வாங்க இது சரியான நேரம்தான்!

- இளையராஜா