Published:Updated:

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

க்ரஸிவ் ஹைபிரீட் ஃபண்டு களைக் குறித்து நாம் ஏற்கெனவே பார்த்தோம். இந்த வாரம் கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகளைப் பற்றி பார்ப்போம்.  

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், என்.சி.டி போன்ற முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்தைவிட சற்று அதிகமாகக் கிடைக்க வேண்டும்; அதே சமயம்,  முழுமையான ஈக்விட்டி ஃபண்டுகளில் உள்ள ஏற்ற இறக்கம் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு உகந்தது கன்சர் வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகளாகும்.

நீண்ட காலத்தில் இந்தவித ஃபண்டு களில் ஹை சிங்கிள் டிஜிட் அல்லது லோ டபுள் டிஜிட் வருமானத் திற்கு முதலீட்டாளர்கள் டார்கெட் செய்யலாம். இந்தவித ஃபண்டுகளை, ரெகுலர் சேவிங்ஸ் அல்லது கன்சர் வேட்டிவ் ஹைபிரீட் அல்லது டெப்ட் ஹைபிரீட் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றன. ஒருசில வருடங்கள் முன்புவரை இந்தவகை ஃபண்டுகள் எம்.ஐ.பி என அழைக்கப்பட்டன.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

செபி விதிமுறைகளின்படி, இந்தவித ஃபண்டுகள் கடன் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய அனுமதி உள்ளது. போர்ட்ஃபோலியோவில் கடன் சார்ந்த முதலீடுகள் 75 – 90 சதவிகிதமும், எஞ்சியது பங்கு சார்ந்த முதலீடுகளிலும் இருக்கும்.
 
வருமான வரிக்கு, இந்த வகை ஃபண்டுகள் கடன் சார்ந்த ஃபண்டுகளின் வகையில் வரும். முக்கால்வாசிக்கும் மேற்பட்ட போர்ட்ஃபோலியோ நிரந்தர வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் உள்ளது போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கும். கால்வாசிக்கும் குறைவாக இருக்கும் பங்கு சார்ந்த முதலீடுகள், இந்தவித ஃபண்டு களுக்கு வருமானத்தில் ஒரு பாசிட்டிவ் நிலையைக் கொடுக்கும். ஆகவே, இந்தவித ஃபண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை விட நீண்ட காலத்தில் அதிக வருமானத்தைக் கொடுக்கும்.

அதுமட்டுமல்ல, வருமான வரி, பணத்தை வெளியில் எடுக்கும்போதுதான் அப்ளை ஆகும். மேலும், மூன்று வருடத்திற்குமேல் வைத்திருக்கையில், பணவீக்கத்தைத் தாண்டிய வருமா னத்திற்கு வரி கட்டினால் போதுமானது. ஆக மொத்தத்தில், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை ஒப்பிடும் போது வரியைத் தாண்டிய நிகர வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!



சிறிதளவுகூட ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்கள் இந்தவித ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டாம். அவர்கள் ஹை குவாலிட்டி உடைய லிக்விட் ஃபண்டு களை நாடலாம்.

இந்த வகையில் முதலீட்டிற்கு உகந்த சில ஃபண்டுகளை இங்கே பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட்

இந்த ஃபண்டு முன்பு ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. எம்.ஐ.பி 25 என அழைக்கப்பட்டது. இது தனது போர்ட்ஃபோலியோவில் பங்கு சார்ந்த முதலீடுகளைக் குறைவாகவே (16.25%) வைத்துள்ளது. எஞ்சியது கடன் சார்ந்த முதலீடுகளிலேயே உள்ளது. அக்குவா ஸ்பேஸ் டெவலப்பர்ஸ், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ், நயாரா எனர்ஜி, டல்வண்டி சபோ பவர், பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் போன்ற நிறுவனங்களின் பாண்டுகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

 15/03/2019 நிலவரப்படி

பங்கு சார்ந்த முதலீட்டில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், மதர்ஸன் சுமி, பி.வி.ஆர், மாருதி, பிரிட்டானியா போன்ற நிறுவனப் பங்குகள் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் மனீஷ் பாந்தியா மற்றும் ரஜாத் சந்தக் ஆவார்கள்.

இந்த ஃபண்ட் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து நல்ல வருவாயை ஈட்டித்  தந்து கொண்டிருக்கிறது. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.5,000 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.100 ஆகும்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட்

இதன் ஃபண்ட் மேனேஜர்கள் சத்யபிரதா மொஹாந்தி மற்றும் பிரனாய் சின்ஹா ஆவார்கள். தற்போது பங்கு சார்ந்த முதலீடுகள் கிட்டத்தட்ட 26 சதவிகிதமும், எஞ்சியது கடன் சார்ந்த முதலீடு களிலும் உள்ளது.

கடன் சார்ந்த முதலீட்டில் இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ், ஃபுல்லர்ட்டன் இந்தியா கிரெடிட், இ.சி.எல் ஃபைனான்ஸ், உத்தர் பிரதேஷ் பவர், பி.என்.பி ஹவுஸிங் போன்ற பாண்டுகள் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள், பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவில் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.500 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000 ஆகும்.

ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரீட் டெப்ட் ஃபண்ட்

முன்பு ஹெச்.டி.எஃப்.சி எம்.ஐ.பி லாங்க் டேர்ம் என இந்த ஃபண்ட் அழைக்கப்பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் பிரஷாந்த் ஜெயின், ஷோபித் மெஹ்ரோத்ரா மற்றும் அமர் கல்குன்ரீக்கர் ஆவார்கள்.

கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகளிலேயே மிகவும் அதிகமான சொத்தை (ரூ.3,100 கோடிக்கு மேல்) நிர்வகித்து வருவது இந்த ஃபண்டுதான்.  

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

இந்த ஃபண்ட் 15 வருடங்களுக்கும்மேலாக நடப்பிலிருந்து வருகிறது இது. சுமார் 75% பாண்டு களிலும், எஞ்சியது பங்கு சார்ந்த முதலீட்டிலும் உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ, இன்ஃபோசிஸ், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனப் பங்குகள் பங்கு சார்ந்த முதலீட்டில் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. மத்திய அரசாங்கம், ரிலையன்ஸ் ஜியோ, ஹெச்.டி.எஃப்.சி, பவர் ஃபைனான்ஸ், எஸ்.பி.ஐ போன்ற பாண்டுகள் கடன் சார்ந்த முதலீட்டில் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.5,000, எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 ஆகும். 

யூ.டி.ஐ ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட்

யூ.டி.ஐ எம்.ஐ.எஸ் அட்வான்டேஜ் பிளான் என இந்த ஃபண்ட் முன்பு அழைக்கப்பட்டது. அமன்தீப் சிங் சோப்ரா மற்றும் அஜய் தியாகி இந்த ஃபண்டை நிர்வகித்து வருகின்றனர். இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.5,000 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 ஆகும். 15 ஆண்டு களுக்கும் மேலாக நடப்பிலிருக்கும் இந்த ஃபண்டின் செயல்பாடும் நன்றாக இருந்துள்ளது.

வோடஃபோன் ஐடியா, மத்திய அரசாங்கம், டி.ஹெச்.எஃப்.எல், பேங்க் ஆஃப் பரோடா, உத்தர் பிரதேஷ் பவர் போன்ற பாண்டுகள் டாப் ஹோல்டிங்களாக இருப்பதுடன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இந்தஸ் இந்த் பேங்க், கோட்டக் பேங்க் போன்ற பங்குகளும் டாப் ஹோல்டிங்களாக உள்ளன. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ 5,000 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 ஆகும். 

ரிலையன்ஸ் ஹைபிரிட் பாண்ட் ஃபண்ட்

ரூ.2,000 கோடிகளுக்கும் அதிகமான சொத்தை நிர்வகித்து வரும் இந்த ஃபண்ட், நாம் இங்கு கொடுத்துள்ள ஃபண்டுகளிலேயே மிகவும் குறைவான (11.01%) ஈக்விட்டி சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அமித் திரிபாதி மற்றும் சஞ்சய் பரேக் ஆவார்கள். முன்பு ரிலையன்ஸ் எம்.ஐ.பி என இந்த ஃபண்ட் அழைக்கப்பட்டது. 15 வருடங்களுக்கும் மேல் அனுபவமுள்ள ஃபண்டுகளில் இதுவும் ஒன்று.

கிரெடிட் ரிஸ்க் அதிகமுடைய (ரேட்டிங் ஏ மற்றும் அதற்கும் குறைவான) பாண்டுகளில் அதிகமாக (55%+) முதலீட்டை வைத்துள்ளது.  ஆர்.எம்.இஸட் பில்ட்கான், மரிபோஸா அக்ரி, சங்கி இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களில் பாண்டுகளில் முதலீடு செய்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி போன்ற நிறுவனப் பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.5,000 மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.100 ஆகும்.  

(பார்வை தொடரும்)

சொக்கலிங்கம் பழனியப்பன்,  டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்  (www.prakala.com)