Published:Updated:

வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்!

வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்!

வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்!

ங்கமா, வெள்ளியா என்று கேட்டால், முதலில் தங்கத்தை டிக் அடிக்கும் நம் மக்கள், இப்போது தங்கத்தைவிட வெள்ளியை விரும்பி வாங்கிவருகிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் தங்கத்தின் இறக்குமதி 6.3% குறைந்த நிலையில், வெள்ளியின் ஏற்றுமதியோ குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்து வருகிறது. 

வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்!

கடந்த 2015-ம் ஆண்டுதான் வரலாறு காணாத அளவுக்கு 7,461 டன் அளவுக்கு வெள்ளியை நம் நாடு இறக்குமதி செய்தது. 2016-ல் இது கணிசமாகக் குறைந்து 4,995 டன் என்கிற அளவை எட்டியது. அந்த நிலை யிலிலிருந்து மீண்டும் உயரத் தொடங்கிய வெள்ளி இறக்குமதி, கடந்த 2018-ல் 6,442 டன் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்!



பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கிராமப்புற மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதினால், அவர்கள் அதிக அளவில் வெள்ளியை வாங்குவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சிறு விவசாயி களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை அளிக்கும் மத்திய அரசின் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. வரும் ஏப்ரலில் முதல் தவணையாக ரூ.2,000 அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கொண்டு மக்கள் வெள்ளியை வாங்க விரும்புவார்கள் என்பதால், விற்பனை யாளர்கள் அதிக அளவில் வெள்ளிப் பொருள்களை வாங்கி வைத்திருக்கின்றனர்.

கடந்த 18-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.40,800-ஆக இருந்தது, கடந்த 21-ம் தேதி ரூ.41,100-ஆக விலை உயர்ந்தது. வரும் நாள்களிலும் வெள்ளி விலை சிறிது உயரவே வாய்ப்பிருப்பதாக நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள், வெள்ளி வாங்குவது குறித்து யோசிக்கலாம்!

- ஆகாஷ்