Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தின் வேகமான நகர்வுக்குப் பின்னர், பங்குச் சந்தைக் குறியீடுகள் தற்போதைய ஏற்றமான போக்கை எடுத்துள்ளன. கடந்த வாரம் நாம் கொண்டிருந்த தனிச் சிறப்பான நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இது மிகவும் சாதாரணமானதுதான். பேங்க் நிஃப்டி, ஏற்கெனவே முக்கியமான பகுதிகளுக்குமேல் இருப்பதோடு, நிஃப்டியுடன் ஒப்பிடுகையில் அதை  வலுவானதாகவும் ஆக்கியுள்ளது. நிஃப்டி சரியாக 11490 புள்ளிகளின் தடை நிலை பகுதிக்குள் இருக்கும் நிலையில், அடுத்த வாரம் அது எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை நாம் கண்காணிக்க வேண்டியதுள்ளது.  அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகித உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ள நிலையில், அது வளரும் நாடுகளின் சந்தைகளுக்கு ஊக்கமளிப்பதாகச் செயல்பட வேண்டும். எனவே, சந்தையின் இறக்க நிலையைப் பங்குகளை வாங்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தின் 467 புள்ளிகள் நகர்வுக்குப் பின்னர், தற்போதைய சந்தை நிலைக்குப் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை. இண்டெக்ஸ், வாரம் முழுவதும் 160 புள்ளிகள் என்ற குறுகிய வரம்புக்குள்ளேயே நகர்ந்ததோடு, சரியாக 11494 புள்ளிகளின் தடை நிலைப் பகுதியின்மீது மீண்டும் முடிவடைந்தது.  இந்தப் பகுதியிலிருந்து கரடிகள் தங்களது வேகத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், இது ஒரு முக்கியமான பகுதியாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



ஒட்டுமொத்த ஃபிபனாச்சி பகுப்பாய்வும் இந்த நிலையிலிருந்து தானாகவே செய்யப்படும் என்பதால், இது மிகவும் முக்கியமானது. இங்கிருந்தபடியே அடுத்து நடக்கும் விஷயங்களைப் பார்க்க, காளைகள் இந்தப் பகுதியை உறுதியுடன் கைப்பற்றுவது அவசியமானது. ஆகவே, நிகழ்வுகளைக் கண்காணிக்க அடுத்த வாரத்தின் முதல் சில தினங்கள் மிகவும் முக்கியமானது.   11265 புள்ளிகளை நோக்கிய எந்த ஓர் இறக்கமான நிலையையும் பங்குகளை வாங்குவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பேங்க் நிஃப்டியில் 1700 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில், கடந்த வார நகர்வும் இந்த வார நகர்வும் சற்று உற்சாகமளிப்பதாகவே இருக்கின்றன. வாராந்திர அடிப்படையில் பார்க்கும்போது இண்டெக்ஸ் டோஜி பேட்டர்னை உருவாக்கியுள்ளது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், ஒரு பெரிய உயர்வுக்குப் பின்னர் ஏற்படும் டோஜி என்பது பின்னோக்கிச் செல்வதற்கான அறிகுறியாக இருக்காது. ஒரு பெரிய நிகழ்வுகளைக் கொண்ட வாரத்துக்குப் பின்னர், சந்தை இந்த வாரத்தில்தான் சற்று இளைப்பாறி உள்ளது. ஓராண்டுக்குப் பின்னர் இண்டெக்ஸ் ஒரு பிரேக் அவுட்டைக் கொடுத்துள்ளதால், காளைகள் முற்றிலும் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. எனவே, பங்குகளை வாங்குவதற்கு சந்தையில் இறக்க நிலை ஏற்படுவதை எதிர்நோக்கி இருக்க வேண்டும். 29000 புள்ளிகளை நோக்கிய எந்த ஓர் இறக்கமான நிலையும் பங்குகளை வாங்க நுழைவதற்கான சிறந்த இடமாக இருக்கும்.

ஹெய்டெல்பெர்க் சிமென்ட்  ( HEIDELBERG)

தற்போதைய விலை: ரூ.176.15

வாங்கலாம்


சிமென்ட் நிறுவனப் பங்குகளுக்கு பங்குச் சந்தையில் மவுசு குறைவாக இருந்தாலும், தென்னிந்திய மாநிலங்களில் சிமென்ட் விலை அதிகரித்திருப்பது, சிமென்ட் நிறுவனப் பங்கு களின் விலையைச் சற்றே உயர்த்தியிருக்கிறது. இந்த விலை ஏற்றமானது அனைத்து சிமென்ட் பங்குகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றன. ஹெய்டெல்பெர்க் சிமென்ட்  பங்கின் விலை கடந்த ஓராண்டு காலமாக ஒரு வரம்புக்குள் இருந்தது. இப்போது ஏற்றம் பெறுவதுபோலக் காணப்படுகிறது. இதன் விலை நன்கு பிரேக் அவுட் ஆகியுள்ளது. இதன் குறுகிய கால இலக்கு விலை ரூ.197. ஸ்டாப்லாஸ் ரூ.162 வைத்து வாங்கவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜி.எம். ப்ருவரீஸ் (GMBREW)

தற்போதைய விலை: ரூ.629.70

வாங்கலாம்


மதுமானம் மற்றும் டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஜி.எம் ப்ருவரீஸ் நிறுவனப் பங்கின் விலை பல வாரங்களாகத் தொடர்ந்து இறக்கத்தில் வர்த்தகமாகி, இப்போது ஏற ஆரம்பித்திருக்கிறது. தற்போது இந்தப் பங்கின் சார்ட்டில் ஆர்.எஸ்.ஐ டைவர்ஜென்ஸ் உருவாகி உள்ளது. இதனால், பங்கின் விலை ஏற்றத்துக்கு மாறும் எனத் தெரிகிறது. குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ. 682-685-ஐ எட்டக்கூடும். இலக்கு விலை ரூ.632. ஸ்டாப்லாஸ் ரூ.602.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சிட்டி யூனியன் பேங்க் (CUB)

தற்போதைய விலை: ரூ.200.55

வாங்கலாம்


ஒரு பங்கானது சரிவைச் சந்தித்து அடிமட்ட ஆதரவு நிலைக்குச் சென்று மீண்டும் விலை ஏறினால், அந்தப் பங்கை வாங்கும் ஆர்வத்துடன் இன்னமும் பலர் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம். இறக்கத்துக்குப் பிறகு ஏற ஆரம்பித்த இந்தப் பங்கின் விலையானது தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்துவருகிறது. கரெக்‌ஷன் காரணமாகத் தொடர் ஏற்றம் பலமுறை தடைப்பட்டிருந்தாலும், இனி வரும் நாள்களில் இந்தப் பங்கின் விலை தொடர் ஏற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய விலை மற்றும் பங்கின் விலை ரூ.196-க்கு இறங்கும் வரையிலும் வாங்கலாம். இதன் குறுகிய கால இலக்கு விலை ரூ.213-214. ஸ்டாப்லாஸ் விலை ரூ.187.

தொகுப்பு: பா.முகிலன், செ.கார்த்திகேயன்

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.