Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

பேங்க் நிஃப்டியில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டது. சந்தையில் கடந்த வாரத்தில் மகிழ்ச்சி நீடித்ததற்கு அதுதான் முக்கியக் காரணமாகவும் இருந்தது. மேலும், நிஃப்டியையும் அதன் முந்தைய உச்சங்களுக்கு அருகே அதனால் தள்ள முடிந்தது. இந்த நிலையில், நிஃப்டியும் புதிய உச்சங்களைத் தொடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை தற்போது உணர முடிகிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்த வாரம் முழுவதுமே இண்டெக்ஸ் மதிப்புமிக்க நிறுவனங்களின், குறிப்பாக பெரிய வங்கிகளின் பங்குகள் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டன. கூடுதலாக, மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளிலும் காணப்படும் நல்லதோர் ஏற்றம், சென்டிமென்ட் மீட்டரைத் தொடர்ந்து துடிப்புடன் வைத்திருக்கிறது.

ஆனால், முன்னரே நாம் குறிப்பிட்டது போன்றுதான், பல முதலீட்டாளர்கள் தற்போதைய ஏற்றத்தை, தாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் பங்குகளிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பாக இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதைக் காட்டிலும் விற்று மீள்வதிலேயே அதிக ஆர்வமாக இருப்பதாகத் தெரிவிக் கின்றன. அந்நிய முதலீடு வரத்து தொடர்ந்து நீடிப்பது சந்தையின் போக்கை ஏற்றமாக வைத்திருக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் சந்தையில் நிஃப்டி ஃபியூச்சருக்கான ரோல் ஓவர் கட்டணம் அதிகமாக அதாவது சுமார் 1 சதவிகிதமாக  உள்ளது. மிக நீண்ட காலத்தில் இப்போதுதான் மிக அதிகமாக இருக்கிறது. பேங்க் நிஃப்டி-யில்கூட, கடந்த ஓராண்டு மற்றும் அதற்குமேல்  காலத்தில் ஓப்பன் இன்டரஸ்ட் பொசிஷன் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆகவே, இந்தச் சந்தை ஓர் ஏற்றப் போக்கில் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த மாதத்தில்  அநேகமாக இந்த ஏற்றப் போக்கு மாறும் என்பதைவிட அப்படியே தொடரும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது நிஃப்டி புதிய உச்சங்களைத் தொடுமா இல்லையா என்பதில்தான் ஒட்டுமொத்த கவனமும் இருக்கும் என்பதால், அனைவரும் பெரிய நிறுவனப் பங்குகளின் செயல் பாடுகளைத்தான் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். கடந்த வாரத்தைப்போன்றே வங்கிப் பங்குகள் தொடர்ந்து செயலாற்றுமானால், புதிய உச்சங்களைத் தொடும் வேலை எளிதாகிவிடும் (வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நிஃப்டி குறியீட்டில் 38% பங்களிப்பைக் கொண்டுள்ளன). மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் மிகவும் விலை ஏற்றம்கண்டு வருவதால், ஏற்ற  சென்டிமென்ட்கள் தொடரும் என எதிர்பார்க்கலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் (LTTS)

தற்போதைய விலை: ரூ.1,572.25

வாங்கலாம்


மைண்ட்ட்ரீ நிறுவனத்தை எல் & டி நிறுவனம் கையகப்படுத்தியதில் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது அந்த விவகாரம் இணக்கமாக முடிவுக்கு வந்துள்ளது. செப்டம்பர் 2018 முதலாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட இறக்கத்தையடுத்து பக்கவாட்டிலேயே நகர்வு இருக்கிறது. இப்போது பங்கு விலை ரூ.1,420, நல்லதோர் ஆதரவுப் பகுதியாக உள்ளது. மேலும், நல்ல ஆதரவு காரணமாக 38% ரீட்ரேஸ்மென்ட் பகுதியில் எழுச்சி பெற்றுள்ளது. தற்போது இந்தப் பங்குகளுக்குப் புதிதாகத் தேவை  ஏற்பட்டிருப்பதால், ஆதரவு மண்டலத்தையொட்டி விலையில் நல்ல ஏற்றம் உள்ளது. எனவே, மேலும் விலை ஏற்றம் பெற்று 1,710 என்ற அளவுக்கு உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.1,410 வைத்து வாங்கலாம்.

குஜராத் ஸ்டேட் பெட்ரோனெட் (GSPL)

தற்போதைய விலை: ரூ.190.70

வாங்கலாம்


இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.185-190 என்ற வரம்புக்குள், கடந்த ஏப்ரல் 2018 முதல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. பலமுறை அந்த வரம்பில் இந்தப் பங்கின் விலை இறங்கி ஏறியிருக்கிறது. தற்போது மீண்டும் மீண்டெழுந்து மேலே ஏறுகிறது. இந்த முறை இந்தப் பங்குகளின் விற்பனையில் வால்யூம் அதிகரித்திருப்பதால், பெரிய அளவில் மேல்நோக்கிய நகர்வை எதிர் பார்க்கலாம். பங்குகள் அதிகமாக வாங்கப்படும் பகுதியில் ஆர்.எஸ்.ஐ சார்ட் கீழிறங்காமல் இருப்பது எப்படி எனப் பார்க்க வேண்டும். வரும் வாரங்களில் பங்கு விலை மேலும் அதிகரிக்கக்கூடும். இங்கே ஒரு பிரேக் அவுட் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனவே, குறுகியகாலத்தில் 225 ரூபாயை எட்டக்கூடும். பிரேக் அவுட்டாகவும் 175 ரூபாய்க்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்து வாங்கவும்.

டேக் சொல்யூஷன்ஸ் (TAKE)

தற்போதைய விலை: ரூ.149.35

வாங்கலாம்


கடந்த ஜனவரி 2018 முதல் டேக் சொல்யூஷன்ஸ் பங்கு விலை, அதிகபட்ச விலை 300 ரூபாய்க்கு அருகிலிருந்து ரூ.98 வரை நீண்ட சரிவைச் சந்தித்துள்ளது. விற்பனையில் வால்யூம் அதிகரித் திருப்பதால் இதன் பங்கு விலை,  மேலேறி வலுவானதொரு நகர்வு காணப்படுகிறது. மார்ச்  நடுவில் இறங்கியது. இப்போது ஏற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது. தொடர்ச்சியாக அதிக வால்யூம் ஏற்றம் பெற்று, வரும் வாரங்களில் தொடர்ந்து மேலேறக்கூடும். குறுகிய காலத்தில்  குறைந்தபட்சம் ரூ.175 என்ற அளவை நோக்கிச் செல்லக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.135 வைத்து தற்போதைய விலையில் வாங்கவும்.

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்


டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!