தேக்கு மர வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்புபோல, குறைந்த தொகைக்கு வீட்டு மனை வழங்குவதாகச் சொல்லி, மக்களிடம் நிதி திரட்டிய நிறுவனம்தான் பி.ஏ.சி.எல்.

பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்த பால் வியாபாரியான நிர்மல்சிங் பாங்கோ, குறைந்த விலையில் மனை மற்றும் ஐந்தாண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தரும் கவர்ச்சிகரமான உறுதிமொழிகளுடன் இந்தியா முழுக்க ஒரு திட்டத்தைத் தொடங்கினார். சொந்தமாக ஒரு சென்ட் நிலமாவது நம் பெயரில் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அப்பாவி மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் பணத்தைக் கட்டிவந்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நடந்த இந்தத் திட்டத்தின்மூலம் 5.5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 49,100 கோடி ரூபாய் வசூலித்தார் இந்த நிறுவனத்தைத் தொடங்கிய நிர்மல்சிங் பாங்கோ.

மக்களிடமிருந்து வாங்கிய பணத்தைக் கொண்டு இந்தியா முழுக்க சுமார் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தார். ஆனால் அறிவித்தபடி, பணம் கட்டியவர்களுக்கு வீட்டு மனையோ, பணமோ தராமல் வாடிக்கையாளர் களை ஏமாற்றுவதாகப் புகார் வரத் தொடங்கியது. புகார்கள் பல ஆயிரங்களைத் தாண்டியபோது அந்த நிறுவனத்தின் நடவடிக்கையை முடக்கியது செபி.

அடுத்ததாக, உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்யும் வேலையில் இறங்கியது. இந்த விற்பனையின்மூலம் திரட்டிய தொகையிலிருந்து முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.2,500 ரூபாயைத் திருப்பித்தர செபி முடிவு செய்தது.

இதுவரை 1,13,352 முதலீட்டாளர்களுக்கு 2,500 ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ள தாக செபி தெரிவிக்கிறது. தற்போது, லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி, முதலீட்டாளர்களின் மொத்த தொகையையும் திருப்பித் தருவதற்கான முயற்சியில் செபி இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதற்காக, பி.ஏ.சி.எல் நிறுவனத் தின் வாடிக்கையாளர்களை, ரீஃபண்ட் தொகைக்காக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரீஃபண்ட் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளது. அந்த விளக்கங்கள் இனி...

* முதலீட்டாளர்களின் பான் கார்டு பெயரும், பி.ஏ.சி.எல் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் வேறுபட்டிருந்தாலும்கூட விண்ணப் பிக்கலாம். வாடிக்கையாளரின் பெயருக்கான ஆதாரங்களை ஒப்படைத்தால் போதும்.

* பான் கார்டுகூட இல்லாத மைனர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருந் தாலும் க்ளெய்ம் செய்ய விண்ணப்பிக்கலாம். அதற்கு, மைனர் குழந்தையின் பெயரில் பான் கார்டுக்கு விண்ணப்பித்துப் பெறவேண்டும். பான் கார்டு எடுக்கக் எந்த வயது வரம்பும் இல்லை என்பதால் தாராளமாக பிள்ளைகள் பெயரில் பான் கார்டு எடுக்கலாம்.

* ரீஃபண்ட் தொகையைக் கொடுப்பது குறித்த விவரங்களை, விண்ணப்பங் களின் அளவைப் பொறுத்து லோதா கமிட்டியே முடிவெடுக்கும். முதலீட்டுக் கான வட்டி குறித்து தற்போது எதுவும் குறிப்பிடப்படவில்லை.

* ஒரு முதலீட்டாளரின் க்ளெய்ம் தொகை என்பது அவரது பி.ஏ.சி.எல் பதிவு எண்ணில் குறிப்பிடப்பட்டிருக் கும் செலுத்தப்பட்ட முதலீட்டு அளவாகும். அதனைப் பெறு வதற்கு, க்ளெய்ம் விண்ணப்பத்துடன், பி.ஏ.சி.எல் சான்றிதழின் நகல் மற்றும் பணம் செலுத்திய ரசீதுகளின் நகல்களையும் இணைத்து அப்லோட் செய்ய வேண்டும். அவற்றைப் பரிசீலனை செய்த பின் முதலீடு செய்த பணம் திருப்பியளிக்கப்படும்.

* ரசீதுகளையோ, சான்றிதழையோ தவறவிட்ட வர்களுக்கு முதலீட்டைத் திருப்பிச் செலுத்துவது குறித்து லோதா கமிட்டி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

* இந்தத் திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டிய முதலீட்டாளர்களில் எவரேனும் இறந்துவிட்டால், அவர்களுக்கான க்ளெய்ம் பெறும் விவரங்கள் குறித்து தற்போது எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போதுள்ள நிலையில், உயிரோடிருக்கும் முதலீட்டாளர்கள் க்ளெய்ம் செய்வது குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. க்ளெய்ம் பெறுவதற்கு, இறந்த முதலீட்டாளர்களின் வாரிசுகள் விண்ணப்பித்தால் அதுகுறித்து லோதா கமிட்டி முடிவு செய்யும்.

* பி.ஏ.சி.எல் பாண்ட் சான்றிதழ் மற்றும் ரசீதுகளை பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் வசம் ஒப்படைத்து, அதற்கான ஒப்புதலை (acknoledgement) மட்டும் கைவசமிருப்பவர்கள், அதனை க்ளெய்ம் செய்வதற்குப் பயன்படுத்த இயலாது. அதுகுறித்து லோதா கமிட்டி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

* முதலீட்டாளர்கள் அப்லோட் செய்யும் ரசீதுகளின் எண்ணிக்கைக்கு எந்த உச்ச வரம்பும் கிடையாது. கைவசம் இருக்கும் அனைத்து பணம் செலுத்திய ரசீதுகளையும் அப்லோட் செய்து க்ளெய்ம் செய்யலாம். இந்த க்ளெய்ம் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்ப மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

* கடந்தமுறை 2,500 ரூபாய் வரை முதலீட்டாளர் களுக்குத் திருப்பியளித்தபோது, விண்ணப்பிக்காத வர்களும்கூட தற்போது விண்ணப்பிக்கலாம்.

* பான் கார்டு இல்லாத முதலீட்டாளர்கள், அதற்குப் பதிலாக ஆதார் கார்டினைக் காட்ட அனுமதியில்லை. உரிய ஆவணங்கள் அனைத்தையும் விண்ணப்பத்துடன் அப்லோட் செய்யவேண்டும். அதேபோல, செக் புக் பயன்பாடு இல்லாதவர்கள், வங்கி அதிகாரியிடம் அதுகுறித்த சான்றிதழ் கடிதத்துடன் இணைக்க வேண்டும். மேலும், பாஸ்புக்கின் முதல் பக்கம் மற்றும் முகவரி எழுதப்பட்டுள்ள பக்கங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.

* சரியான ஆவணங்களை அப்லோட் செய்த பின்னரும் ‘This PACL number does not exist as per our records’ என்ற மெசேஜ் வந்தால், பி.ஏ.சி.எல் பதிவு எண் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து பி.ஏ.சி.எல் முதலீட்டாளர்களுக் கான ரீஃபண்ட் பணியைச் செய்துவரும் அலுவலகத்துக்கு மெயில் அனுப்ப வேண்டும். இ-மெயில் அனுப்ப வேண்டிய முகவரி nodalofficerpacl@sebi.gov.in ஆகும்.

* ரீஃபண்ட் பெறுவதற்கு பான் கார்டு விவரம், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கிராஸ் செய்யப்பட்ட செக்கின் நகல், பி.ஏ.சி.எல் சான்றிதழ் நகல், பணம் செலுத்திய ரசீதுகள் தேவை. டாக்குமென்டுகள் pdf, jpg or jpeg வடிவில் இருக்கவேண்டும். இதுதொடர்பாக மேலும் சந்தேகங்கள் எழுந்தால் அதற்கான ஹெல்ப்லைன் 02261216966 என்கிற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள் ஏப்ரல் 30, 2019 ஆகும் என செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி, ரீஃபண்ட் வழங்கப்படும். செபியானது, பி.ஏ.சி.எல் நிறுவன முதலீட்டாளர் களுக்கும் லோதா கமிட்டிக்கும் இடையே, தொடர்பாளராகச் செயல்பட்டு க்ளெய்ம்களுக்கு விண்ணப்பிக்க உதவி செய்கிறது. மற்றபடி, ரீஃபண்ட் தருவது குறித்த முடிவுகளை லோதா கமிட்டியே தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.

பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், செபியின் இந்த அறிவுறுத்தலின்படி, முறைப்படி விண்ணப்பித்து ரீஃபண்டுகளை முழுமையாகப் பெறவேண்டும். இனிவரும் காலங்களில், பி.ஏ.சி.எல் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருக்கத் தேவையான விழிப்பு உணர்வினைப் பெற வேண்டும்!

தெ.சு.கவுதமன் - படங்கள்: பா.காளிமுத்து