பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.(சரியான விடை கீழே தலைகீழாக...)

நாணயம் QUIZ

1. இந்தியாவின் முட்டை நகரம் என்பது

அ. நாமக்கல்

ஆ. கோயம்புத்தூர்

இ. திருப்பூர்

2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் பருத்தி ஜவுளி ஆலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன?

அ. மத்தியப்பிரதேசம்

ஆ. மஹாராஷ்ட்ரா

இ. தமிழ்நாடு

3. இந்தியப் பொருளாதாரம் என்பது...

அ) முதலாளித்துவம்

ஆ) சோஷலிசம்

இ) கலப்பு

ஈ) கூட்டாட்சி

4. வேளாண் உணவுப் பொருள்களான நெய், தேன் போன்றவற்றின் தரத்தை உறுதிசெய்யும் சான்றிதழ்...


அ. ஐ.எஸ்.ஐ

ஆ. பி.ஐ.எஸ்

இ. அக்மார்க்

ஈ. மேலே கண்ட அனைத்தும்

5. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய்த் தாளின் அதிகபட்ச மதிப்பு

அ. ரூ.500

ஆ. ரூ.5,000

இ. ரூ.2,000

6. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்.எஸ்.இ) அமைந்துள்ள இடம்

அ. மும்பை

ஆ. புதுடெல்லி

இ. கொல்கத்தா

7. வெளிச்சந்தையில் கீழ்க்காண்பவற்றில் எதை ஆர்.பி.ஐ வாங்கும் மற்றும் விற்கும்

அ. அந்நியச் செலாவணி

ஆ. தங்கம்

ஆ. அரசுக் கடன் பத்திரங்கள்

ஈ. மேலே கண்ட அனைத்தும்

8.  கிஷான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்தால் வருமான வரிச் சலுகை கிடைக்கும்

அ. சரி

ஆ. தவறு

9. இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் எதில் முதலீடு செய்ய முடியும்?

அ. நிறுவனப் பங்குகள்

ஆ. தங்கம்

இ. ரியல் எஸ்டேட்

ஈ. மேற்கண்ட அனைத்திலும்

10. இந்தியாவில் வருமான வரி கட்டுவதில் பெண்களுக்குச் சலுகை இல்லை


அ. சரி

ஆ. தவறு 

சி.சரவணன்

விடைகள்

1. அ. நாமக்கல் 

2. ஆ. மஹாராஷ்ட்ரா

3. இ கலப்பு

4. இ. அக்மார்க்

5. இ. ரூ.2,000

6. அ. மும்பை

7. ஈ. மேலே கண்ட அனைத்தும்

8. ஆ. தவறு

9. ஈ. மேற்கண்ட அனைத்திலும்

10. அ. சரி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு