Published:Updated:

அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!
அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!

அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!

பிரீமியம் ஸ்டோரி

ந்தியப் பங்குச் சந்தை, 2018 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பெரிய சரிவைச் சந்தித்தது. தற்போது அதிலிருந்து மீண்டெழத் தொடங்கியுள்ளது. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட நிச்சயமற்றத் தன்மை, ராணுவத் தாக்குதல் போன்ற காரணங்களால் பங்குச் சந்தைச் சரிவு தொடர்ச்சியாக இருந்தது. எனினும், மத்தியில் பாரதிய ஜனதா அரசு தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரியவருவதால் பங்குச் சந்தையில் குழப்பம் தெளியத் தொடங்கியது. மேலும், விரைவாக வளரும் பொருளாதார நாடு என்ற பெயரை இந்தியா தக்கவைத்துக் கொண்டிருப்பதும் பங்குச் சந்தையில் முதலீப்டுகள் குவியத் தொடங்கியிருக்கிறது.

அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!

2019 மார்ச் முதல் ஏப்ரல் வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து (எஃப்.ஐ.ஐ) கணிசமான முதலீடுகள் வரத் தொடங்கவும், இந்தியப் பங்குச் சந்தை அதன் வாழ்நாள் உச்சத்தை சமீபத்தில் எட்டியது. பரந்துபட்ட பார்வையில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தபோதிலும், வந்து கொண்டிருக்கிற நான்காவது காலாண்டு முடிவுகள் பங்குகளின் விலைப் போக்கில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து உணர்ந்துகொள்வது முக்கியமானது. இத்தகைய மாற்றங்கள், சில நேரம் ஏற்ற இறக்கத்தை மேலும் அதிகரிக்கச்செய்து சில துறைகளைச் சீர்குலையச் செய்யவும் வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தையிலிருக்கும் ரிஸ்க் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும், அதையெல்லாம் தாண்டி அதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து, கூடுதல் கவனம்கொள்வது மனித மனதின் இயல்பாக இருக்கிறது.  

அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!

அதேநேரத்தில், ரிஸ்க் குறைவான பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறது. ரிஸ்க் என்பது முதலீட்டாளர்களைப் பொறுத்து வேறுபடுகிறது. சிலருக்குப் பங்கின் விலை ஏற்ற இறக்க நிலை ரிஸ்க்காகத் தெரியும். சிலருக்கு ஒழுங்கில்லாத வருமானம் தரும் பங்குகள் ரிஸ்க்காகத் தெரியும். சிலருக்கு டிவிடெண்டுகளை முறையாகத் தராத பங்குகள் ரிஸ்க்கானவையாகத் தெரியும். எனவே, ரிஸ்க் குறைவான பங்குகளை அடையாளம் காண்பதற்காக முதலீட்டு ஆலோசகர்களும் ஆய்வாளர்களும் ஸ்டாண்டர்டு டீவியேஷன் (standard deviation) மற்றும் சி.வி என்கிற கோஎஃபிசியன்ட் ஆஃப் வேரியேஷன் (CV - Coefficient of Variation) போன்ற கணக்கீட்டு முறைகளைக் கொண்டுவந்துள்ளார்கள்.

சி.வி எனப்படுவது, ஒரு பங்கின் ஸ்டாண்டர்டு டீவியேஷனை அதன் சராசரி வருமானத்தால் வகுத்துக் கிடைக்கும் மதிப்பு. உதாரணமாக, ஒரு நிறுவனப் பங்கின் கடந்த ஐந்தாண்டு கால வருமானம் முறையே  5%, 10%, 7%, 8% மற்றும் -7% எனக்கொண்டால், அதன் ஐந்தாண்டு சராசரி வருமானம் 5% எனக் கிடைக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு டீவியேஷன் 6.73% என்றுள்ளது. இதன் சிவி 1.46. இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தப் பங்கின் மூலம் ஒரு யூனிட் வருமானம் கிடைக்க  ரிஸ்க் அளவு 1.46 யூனிட் ஆக உள்ளது என்பதே.

அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!

அதிக சி.வி மதிப்புள்ள பங்குகள், கணிசமான அளவு மோசமான செயல்பாட்டைக் கொண்டி ருக்கிறது என அர்த்தம். அதேநேரம், குறைவான சி.வி மதிப்புள்ள பங்குகள் நல்ல நிலையில் செயல்படுகின்றன என அர்த்தம். எனவே, இந்த மதிப்பீட்டின் மூலம் குறைவான ரிஸ்க் உள்ள பங்குகளை நம்மால் அடையாளம் காண முடியும். ரிஸ்க் குறைவான  பங்குகளை எப்படி கண்டுபிடிப்பது? அதன் சி.வி மதிப்பை, பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் அல்லது நிஃப்டியின் சி. வி மதிப்புடன் ஒப்பிட்டு பார்த்துக் கண்டுபிடிக்க முடியும்.

 மேலும், பீட்டா (BETA) கணக்கீட்டு முறையில் மிகவும் எளிதாக ரிஸ்க் குறைவான பங்குகளைக் கண்டறியலாம். பீட்டா முறையானது, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தையும் அதே நேரத்தில் ஒரு நிறுவனப் பங்கின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து கிடைக்கும் மதிப்பீடாகும். இந்த பீட்டா மதிப்பீட்டின்படி, ரிஸ்க் குறைவான ஐந்து பங்குகளை பார்ப்போம்.  பீட்டா குறைவாக இருந்தால் அந்தப் பங்கு ரிஸ்க் குறைவானது என்று அர்த்தம். இந்த பீட்டா மதிப்பை, பங்குச் சந்தை சார்ந்த முக்கிய நிறுவனங்களின் இணையதளங்களில் பார்க்க முடியும்.

1. ஹெச்.சி.எல் டெக்

(பீட்டா  0.249)


ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், உலகளவில் ஐ.டி சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனம். சாஃப்ட்வேர்,  ஐ.டி சொல்யூஷன்ஸ், தொலைதூர உள்கட்டமைப்பு மேலாண்மை, பொறியியல் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு சேவைகள் மற்றும் பி.பி.ஓ சேவைகளை வழங்கிவருகிறது. இந்த நிறுவனப் பங்கின் விலை தற்போது     ரூ.1,080-ரூ.1,120 என்ற வரம்புக்குள் வர்த்தகமாகி வருகின்றன. பங்குச் சந்தை இண்டெக்ஸ்படி இதன் ரிஸ்க் நிலவரத்தைப் பார்க்கும்போது, சிறிதளவே இறக்கத்துடன்கூடிய சீரான ஏற்றப் போக்குடன் பங்கு விலை ரூ.1,160 -க்கு  உயரக்கூடும்.    

2. ஆதித்ய பிர்லா ஃபேஷன்

(பீட்டா 1.25)


ஆதித்ய பிர்லா ஃபேஷன் (ABF), நவநாகரிக ஆடைகளுக்கான நிறுவனம். இந்த நிறுவனம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று பிரிவுகளாக இயங்குகிறது. இது 400 பிராண்டு களைச் சேர்ந்த பொருள்கள் விற்பனை செய்து வருகிறது. 

இந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ.216-230 என்ற வரம்பில் வர்த்தகமாகின்றன. இதன் நீண்டகால பீட்டா அளவு 1.26 என உள்ளது. இது பங்கின் விலை போக்கு, சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் சீராக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

3. ஜோதி லேபாரட்டரீஸ்

(பீட்டா 1.25)


ஜோதி லேபாரட்டரீஸ் நிறுவனம் வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. ஃபேப்ரிக் ஒயிட்னர், சோப், டிடர்ஜென்ட், கொசுவத்திச் சுருள் மற்றும் ஊதுவத்திகளைத் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் சோப் மற்றும் டிடர்ஜென்ட், வீட்டுப் பராமரிப்புப் பொருள்கள்  என இரண்டு பிரிவுகளாக இயங்குகிறது. 

அதிக ரிஸ்க் இல்லாத 5 பங்குகள்!

இந்த நிறுவனத்தின் பங்குகள், ரூ.175-215 என்ற வரம்பில் வர்த்தக மாகின்றன. குறைவான பீட்டா மதிப்பையும் கொண்டிருப்பதால் இதைக் குறைந்த ரிஸ்க் உள்ள பங்காகக் கணக்கில்கொள்ளலாம்.

4. எம்பசிஸ் (MPhasis)

(பீட்டா 0.54)


எம்பசிஸ் நிறுவனம், உலக அளவில் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கிவரும் நிறுவனம். இது, அப்ளிகேஷன் டெவலப்மென்ட் & மெயின்டனன்ஸ் சர்வீசஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அவுட்சோர்ஸிங் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை உலகம் முழுவதும் வழங்கிவருகிறது. பேங்கிங் & கேப்பிட்டல் மார்க்கெட், இன்ஷூரன்ஸ், தகவல் தொழில்நுட்பம், கம்யூனிகேஷன் & என்டர்டெய்னிங் & எமர்ஜிங் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பிரிவுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. எம்பசிஸ் நிறுவனப் பங்குகள்  ரூ.950-1,050 என்ற வரம்புக்குள் வர்த்தகமாகின்றன.

டெக்னிக்கலாகப் பார்க்கும்போது இந்த பங்கின் விலை நீண்டகால ஏற்றப்போக்கில் இருந்தாலும் குறைவான பீட்டா மதிப்பால் குறிப்பிட்ட வரம்புக்குள் ஏறி இறங்கி விற்பனையாகி வருகிறது. இது ஏற்றம் பெற்று ரூ.1,089 என்ற அளவுக்குச் செல்லக்கூடும்.

5. அஸ்ட்ரால் பாலி டெக்னிக் (Astral Poly Technik)

(பீட்டா  0.92)

அஸ்ட்ரால் பாலி டெக்னிக் நிறுவனம் வீடு மற்றும் தொழிற்கூடங்களுக்கான சிபிவிசி பிளம்பிங் பொருள்கள் மற்றும் ஏஎஸ்டிஎம் சால்வன்ட் வெல்ட் லெட் ஃப்ரீ பிவிசி பிளம்பிங் பொருள்களைத் தயாரிக்கிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ.1,150-1,230 என்ற வரம்புக்குள் வர்த்தகமாகின்றன. இதன் பீட்டா மதிப்பு 0.92 என்ற அளவில் இருக்கிறது.

பங்கு விலையின் ஏற்ற இறக்கம் கட்டுப் பாட்டுக்குள் இருக்கிறது.

ரிஸ்க் குறைவான ஐந்து பங்குகளை இங்கே பார்த்தோம். இவற்றில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கணிசமாகக் கிடைக்கும். அதேவேளை, இழப்பைச் சந்திக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. ரிஸ்க் அதிகமில்லாத மேலும் சில பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினால் இதே பீட்டா அளவீட்டு முறையைப் பின்பற்றி பங்கு களைத் தேர்வுசெய்யலாம். இது, பங்குச் சந்தையில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற கணக்கீட்டு முறையாக இருக்கும்.

இந்தப் பங்குகளில் ஒரேநேரத்தில் மொத்தமாக முதலீடு செய்யாமல், முதலீட்டுத் தொகையை   மூன்று அல்லது ஐந்தாகப் பிரித்துக்கொண்டு, பங்கு விலை இறக்கம் காணும்போது அவ்வப்போது முதலீடு செய்துவந்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும்.

தொகுப்பு: தெ.சு.கவுதமன்  

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு