Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், விலை நகர்வை வார வரைபடத்தில் பார்க்கும்போது, ஒரு நல்ல ஏற்றத்திற்குப் பிறகு,  ஓர் அகண்ட பக்கவாட்டு நகர்வில் உள்ளதைப் பார்க்கமுடிகிறது. கீழே 1420 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1850 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரி 2019 கடைசி வாரத்தில் இருந்து, மார்ச் 19 கடைசி வாரம்வரை மட்டும் மூன்று முறை மேல் எல்லையைத் தாண்ட முயற்சி செய்து, தோல்வியடைந்தது. அதன்பின் ஒரு வலிமையான இறக்கத்தின் மூலம் தொடர்ந்து இறங்கி, 10.04.19 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 1446 என்ற புள்ளியைத் தொட்டது.   அதன்பின் சற்றே மேலே திரும்பியுள்ளது.

சென்ற  வாரம் சொன்னது… “மென்தா ஆயில் வலிமையாக இறங்கிய நிலையில் புல்பேக் ரேலி வரலாம். இதன் ஆதரவு எல்லை  1445 ஆகும். மேலே 1510 என்பது வலிமையான தடைநிலை ஆகும்.”

மென்தா ஆயில் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1445-ஐ தக்கவைத்துக் கொண்டது. அதன்பின் கடந்த வாரம் முழுவதும், ஒவ்வொரு நாளும் படிப்படியாக ஏற ஆரம்பித்துள்ளது.

 இந்த ஏற்றம் என்பது இறக்கத்தின் ஏற்றமே.  அதாவது நாம் சென்ற வாரம் சொன்னதுபோல, புல்பேக் ரேலி வந்துள்ளது. ஃபிபனாச்சி அளவுகோலில் 23.6% அளவிற்கு ஏறி, அதன்பின் தொடர்ந்து ஏற முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

இனி என்ன செய்யலாம்..?

மென்தா ஆயில், புல்பேக் ரேலியில் உள்ளதால், கீழே 1466 என்பது முக்கிய ஆதரவு ஆகும். மேலே 1536 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

காட்டன்

காட்டன் அப்டிரெண்டில் இருந்து வருகிறது. பொதுவாக அப்டிரெண்ட் தொடருவதற்கு  சிறிய இறக்கமோ அல்லது பக்கவாட்டு நகர்வோ நடக்கவேண்டும்.  அதை ரீடிரேஸ்மென்ட் என்று சொல்லுவோம். காட்டனில் அதுதான் நடந்து வருகிறது.

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் தற்போது ஏற்றத்தின் இறக்கத்தில் உள்ளது.    எனவே, தற்போது 21870 என்ற ஆதரவை எடுத்து நிற்கிறது. மேலே 22110 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.”

நாம் கொடுத்திருந்த 22110 என்ற தடைநிலையை உடைத்து ஓரளவிற்கு ஏற ஆரம்பித்தது. அதன் உச்சமாக 22430-ஐ தொட்டபின், சற்றே இறங்கி பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. கீழே நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 21870 தக்கவைக்கப் பட்டுள்ளது. பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையை உடைத்தால் வலுவான ஏற்றம் தொடரலாம்.

இனி என்ன செய்யலாம்..? 

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன் தற்போது 22030 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 22350 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்ற வாரம் சொன்னது… “சென்னா ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் மே மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.  தற்பது 4433 என்ற எல்லை ஆதரவாகவும், 4566 என்ற எல்லை உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.”
சென்னா, நல்ல ஏற்றத்திற்குப் பிறகு, கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பக்கவாட்டு நகர்வில் உள்ளது.  நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4433-ஐ தக்கவைத்துள்ளது. மேலே கொடுத்திருந்த தடைநிலையான 4566-ஐயும் தக்கவைத்துள்ளது. எனவே, தற்போது தொடர் பக்கவாட்டு நகர்வில் இருந்துவருவதால், ஒரு பிரேக்அவுட் வருவதற்கு வாய்ப்புள்ளது.

இனி என்ன செய்யலாம்?

சென்னா, தொடர் பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், இன்னும் 4433 என்ற எல்லை ஆதரவாகவும், மேலே 4566 என்ற எல்லை தடைநிலையாகவும் உள்ளது.

தி.ரா.அருள்ராஜன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு