Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் டவுன் டிரெண்டுக்கு மாறியுள்ளது எனத் தொடர்ந்து கூறி வருகிறோம். டவுன் டிரெண்ட் தொடர, அவ்வப்போது பக்கவாட்டு நகர்விலும் இருந்து வருகிறது. தற்போது  ஓர் அகண்ட பக்கவாட்டு நகர்வில் இருந்து வருகிறது. இந்தப் பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையானது 32250 என்ற எல்லையில் வலிமையாகத் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகிறது. கீழே ஆதரவு எல்லை படிப்படியாக இறங்கி வருகிறது. தற்போது பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லைக்கு அருகே உள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தொடர்ந்து பக்கவாட்டு நகர்வில் உள்ள நிலையில், கீழே 31430-ஐ உடனடி ஆதரவாக வும், மேலே 31980 உடனடித் தடைநிலை யாகவும் உள்ளது.” 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31980-ஐ தாண்ட முடியாமல் மெள்ள இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கமானது, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லைக்கு அருகில் வந்துள்ளது. அந்த ஆதரவை எடுப்பதற்கான முயற்சியில் சிறிய ஸ்பின்னிங் டாப் வகை கேண்டில்களை தோற்றுவித்துள்ளது.

கடந்த வாரம், நாம் கொடுத்திருந்த மேல் எல்லைக்கு அருகிலிருந்து இறங்க ஆரம்பித்து, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லைக்கு அருகில் வந்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம்  இறங்கி வந்துள்ள நிலையில் 31280 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவாக உள்ளது. மேலே 31800 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளி, பொதுவாக தங்கத்தின் நகர்வைப் போலவே இருந்து வந்தாலும், சென்ற வாரம், வெள்ளி, தங்கம் இறங்கியபோது இறங்கவில்லை.   ஆனால், ஏறவும் இல்லை. மாறாக, பக்கவாட்டு நகர்வில் இருந்துள்ளது. இந்தத் தொடர் பக்கவாட்டு நகர்வு வலிமையான பாட்டமாகவும் மாறலாம். அதுவே உடைக்கப்பட்டால் வலிமையான இறக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி தொடர் இறக்கத்தில் உள்ள நிலையில் 36850 என்பது உடனடி ஆதரவு நிலை ஆகும். மேலே 37660 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி ஆதரவுநிலையான 36850 என்ற எல்லையைத் தக்கவைத்துள்ளது. வெள்ளி பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், காளைகள் இறக்கத்தைத் தடுக்க முயன்று வருகிறார்கள்.  கடந்த வாரம் 5 நாள்களும் ஸ்பின்னிங் டாப் வகை கேண்டில்களே தோன்றியுள்ளன.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி தற்போது இன்னும் 36850 என்ற ஆதரவை எடுத்து வருகிறது. ஆனால், தடைநிலை சற்றே குறைந்து 37500 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது…

“கச்சா எண்ணெய் தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கும் வேளையில், 4380 என்பது உடனடி ஆதரவு நிலை ஆகும். மேலே 4520 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.”

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4520-ஐ உடைக்க முடியாமல், தயங்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மிகப்பெரிய மாற்றம் இல்லாமல், நாம் கொடுத்திருந்த கீழ் எல்லையையும் உடைத்து கீழே இறங்க முடியாமல் உள்ளது.

இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய், ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால்,  மே மாத கான்ட்ராக்ட்டை இனி எடுத்துக்கொள்வோம். தொடர் பக்கவாட்டு நகர்வில் இருந்து வருகிறது. கீழே 4370 என்பது ஆதரவு எல்லையாகவும், மேலே 4490 வலிமையான தடைநிலையாகவும் உள்ளது.

காப்பர் (மினி)


சென்ற வாரம் சொன்னது… “காப்பர் மினி,  441-ஐ ஆதரவாகவும், மேலே 453-ஐ தடைநிலை யாகவும் கொண்டு இயங்கி வருகிறது.”

காப்பர்  தற்போது பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தோம். சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 441-ஐ தக்கவைத்துள்ளது.  மேலே தடைநிலையான 453-ஐ உடைத்து வலிமையாக ஏறி 459-ஐ தொட்டாலும், அதன்பின் இறங்கி முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

காப்பர் பக்கவாட்டு எல்லையை உடைத்து ஏற முயன்று தோல்வியில் முடிந்துள்ளது.  தற்போது 444 உடனடி ஆதரவாகவும், மேலே 453 தடைநிலையாகவும் உள்ளது.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு