Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

செய்திகளின் வரத்து பலவிதமாக இருந்தாலும், தற்போது முடிவடைந்த வாரத்தில், இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம்கண்டு இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது. நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 11859 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியதோடு, சந்தையின் சென்டிமென்டை தொடர்ந்து உற்சாகத்திலேயே வைத்திருந்தது. பிரதான குறியீடுகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அதற்கு ஈடான வருமானம் கிடைக்கவில்லை என்றபோதிலும் கூட, முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட் ஃபோலியோவுக்கு புத்துயிர் கிடைத்ததைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். நிஃப்டி வெளிப்படுத்திக்கொண்டிருந்த உணர்வுடன் ஒப்பிடுகையில், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளின் வெளிப்பாடு மிகவும் குறைவாகவே இருந்தது. 

ஒரு நல்ல நடவடிக்கைக்காக நிஃப்டியை உச்சத்துக்குக் கொண்டு சென்றதற்கு வங்கிகள்தான் காரணமாக இருந்தன. தனியார் வங்கிப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன. பொதுத்துறையைச் சேர்ந்த எஸ்.பி.ஐ கூட திடீர் ஏற்றத்தைக் காட்ட முயன்றாலும், அதனால் முற்றிலும் செயல்பட முடியாமல் போனபோது, முந்தைய வாரங்களின் மாயாஜாலத்தால் வங்கிகள் செயல்பட்டு, பேங்க் நிஃப்டியை புதிய உச்சங்களுக்குக் கொண்டு சென்றன. இருப்பினும், வங்கிப் பங்குகள் தொடர்ந்து உயரமான பகுதிகளிலேயே நின்றுகொண்டு, தன்னைத்தானே மேல்நோக்கித் தள்ளிக்கொள்ளும் என்ற நம்பிக்கையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்தன. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதேபோல், ஐ.டி இண்டெக்ஸ்கூட இதுவரை இல்லாத புதிய உச்சங்களுக்கு அருகே நகர்ந்துகொண்டிருப்பதோடு, இன்னும் மேலும் செல்ல விரும்புவதைப் போன்று தோன்றுகிறது. டி.சி.எஸ் நிறுவனத்தின் சாதகமான காலாண்டு முடிவுகள் அதற்கான தூண்டுதலைச் செய்துள்ளது. ஆனால், அதுவும்கூட கணக்கிட முடியாத அளவில் எண்ணிக்கையைக் குறைத்ததன் மூலம்  சமன் செய்யப்பட்டது. விப்ரோ சற்று ஏமாற்றம் அளித்தாலும், பல ஐ.டி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதிக எண்ணிக்கையிலான பைபேக்குகள், பெரிய அளவிலான விற்பனை எதுவும் இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆகவே, ஒருவேளை ஏதாவது சில சாதகமான தூண்டுதல்கள் இருந்தால், ஐ.டி துறைகூட சந்தை இன்னும் மேலே செல்வதற்கு உதவியாக இருக்கலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வர்த்தக தினம் இரண்டு நாள்கள் குறைக்கப் பட்ட வாரமாக இருந்தபோதிலும், பங்குகளின் விலை,  ஏற்ற நிலைக்கு அருகிலேயே நீடித்தது. இது சந்தையின் உணர்வுகள் உற்சாகமாக இருப்பதையும், காளைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றி எந்த அளவுக்கு இருக்கும் என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஆனால், அந்த விடையைத் தெரிந்துகொள்வதற்கு நமக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. ஆனாலும்,  காளைகளின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் விதமாக எதுவும் காணப்படவில்லை என்பதே, டிரேடர்கள் சந்தையின் இறக்க நிலையின்போது பங்குகளை வாங்கும் அணுகுமுறையைத் தொடரலாம் என்பதற்கு நல்ல காரணமாக உள்ளது.

சந்தை ஆதரவு படிப்படியான ஏற்றத்தைக் கொண்டிருக்கிறது. நிஃப்டி 11500-ல் உருவான ஆதரவைக் குறிப்பிடும் ஆப்ஷன் பொசிஷன் களுடன் இந்த மாதத்தை நாம் தொடங்கினோம். தற்போது இது மெதுவாக நிஃப்டி 11700 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள், தற்போது நிலுவையில் உள்ள தங்களது ஸ்டாப்லாஸை 11700 புள்ளி களுக்குக் கீழ் மாற்றியமைத்துக்கொள்வது புத்திசாலித்தனமானது. சந்தையின் ஏற்றப் போக்கு நீடித்து, அதன் சென்டிமென்டில் மாற்றம் ஏற்படும் வரை,  குறிப்பிட்ட பங்குகளை வாங்கி விற்கும் அணுகுமுறையை முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வினதி ஆர்கானிக்ஸ் (VINATIORGA)

தற்போதைய விலை: ரூ.1767.90

வாங்கலாம்


கெமிக்கல் நிறுவனங்கள் மிக நன்முறையில் செயல்படுகின்றன. நல்ல செயல்திறனும், சீனாவின் கெமிக்கல் சப்ளையில் ஏற்பட்ட தடங்கல்களால் உருவான சாதகமான சூழலும் இணைந்து, இந்தத் துறை பங்குகளின் விலை யேற்றத்துக்குத் தூண்டுதலாக இருக்கின்றன. தற்போது ஏற்றம் கண்டுள்ள இந்தத் துறையின் சில பங்குகளில் ஒன்றாக வினதி ஆர்கானிக்ஸ் இருக்கிறது. அடுத்து வரும் காலாண்டுகளில் 20-30 சதவிகிதத்துக்கும்மேல் நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தப் பங்குகளுக்கான தேவை பெரிய அளவில் இருக்கிறது. சார்ட்டில் புதியதொரு மேல்நோக்கிய உந்துதல் போக்கு தெரிகிறது. இன்னும் சில வாரங்களில், புதிய உச்சமாக 1,900 ரூபாயை எட்டக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.1,675-க்குக் கீழே வைத்து வாங்கவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதானி கிரீன் எனர்ஜி (ADANIGREEN)

தற்போதைய விலை: ரூ.45.00

வாங்கலாம்

அதானி குழுமத்தைச் சேர்ந்த பங்குகள், இந்த வாரம் நல்ல செயல்திறனில் உள்ளன. அந்தக் குழுமத்திலுள்ள அதானி கிரீன் பங்கின் சார்ட் விலை ஏற்றப் போக்கைக் காட்டுகிறது. இது அதானி குழுமத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட துணை நிறுவனம். இந்த நிறுவனப் பங்கின் விலையில்  ஏற்பட்ட சரிவு முடிவுக்கு வந்து, மேல் நோக்கிய புதிய தொடக்கத்தை உணர்த்துவதுபோல நீண்ட வாராந்திர கேண்டில் இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் (KEI)

தற்போதைய விலை: ரூ.422.50

வாங்கலாம்


இந்த நிறுவனத்தின் பங்கு ஏற்கெனவே சிலமுறை பரிந்துரைக்கப்பட்டு, எதிர்பார்த்தது போலவே குறுகிய காலத்தில் நன்கு செயல்பட்டது. இந்தப் பங்குகளின் விலை தற்போது புதிய விற்பனைகளின் காரணமாக மீண்டும் ஏற்றப் போக்கில் செயல்படுவதை சார்ட் காட்டுகிறது. கடந்த சில வாரங்களாக ஒருங்கிணைப்பாகச் செயல்பட்ட பிறகு தற்போது புதிதான மேல்நோக்கிய ஏற்றத்தைக் காட்டுகிறது. முந்தைய உச்சநிலைகளுக்குச் சவாலான ஏற்றத்தை எட்டுவதுபோல் உள்ளது. சார்ட்டில் கீழிறங்கி நடுநிலை மண்டலத்துக்கு வந்த பங்குகளின் விலை, எதிர்வினையாற்றி தற்போது மீண்டும் ஏற்றத்துடன் செயல்படுவதற்கான அறிகுறி தெரிகிறது. இது, பங்கு விலையை புதிய உச்சம் நோக்கிச் செலுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது.

ஸ்டாப்லாஸ் ரூ.420 வைத்து வாங்கவும். தொடர்ச்சியான ஏற்றத்தால் 465 ரூபாய் என்ற புதிய உயரத்தைக் குறுகிய காலத்தில் எட்டக்கூடும்.

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்


டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு