இந்திய வருமான வரித் துறை, முடிந்த 2018-19 நிதி ஆண்டுக்கான படிவம் 16 (Form-16)-ஐ மாற்றி அமைத்தி ருக்கிறது. வீட்டு வாடகை வருமானம், இதர வருமானங்கள், வரியைச் சேமிக்க மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் போன்றவற்றை படிவம் 16-ல் விரிவாகச் சேர்க்க, தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய படிவம் கொண்டுவர என்ன காரணம்?

முந்தைய நிதியாண்டில் பல பணி யாளர்கள், வரிச் சலுகைக்கான முதலீடு எதையும் செய்யாமலே ரீஃபண்ட் கோரியிருக்கிறார்கள். இதனைப் படிவம் 16 மூலம் வருமான வரித்துறை கிராஸ் செக் செய்து கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்தே புதிய படிவம் வருகிறது.

முடிந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலை ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரித் துறைக்கு சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வரிக் கணக்கு தாக்கல் பெரும்பாலும், பணியாளர்களுக்கு நிறுவனம் வழங்கிய படிவம் 16-ன் அடிப்படையில் இருக்கும். இந்தப் படிவம் பெரும்பாலும் ஜூன் மாத மத்தியில் பணியாளர்களுக்கு அளிக்கப்படும். புதிய படிவம் 16, வருகிற மே 12 முதல் நடைமுறைக்கு வரும் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. அந்தவகையில், முடிந்த நிதியாண்டு 2018-19-க்கு புதிய படிவத்தை நிறுவனங்கள் வழங்கும்.

புதிய படிவத்தில், வருமான வரி பிரிவுகள் 80சி, 80சிசிடி, 80இ, 80ஜி என அனைத்து பிரிவுகளிலும் எவ்வளவு வரிச் சலுகைக்காக முதலீடு செய்யப் பட்டிருக்கிறது என்ற விவரங்களை தனித்தனியாகக் குறிப்பிட வேண்டும். இந்த விவரங்களையும், வரிக் கணக்குத் தாக்கலின்போது தெரிவிக்கப் பட்டிருக்கும் விவரங்களையும் வருமான வரித் துறை சரிபார்க்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, நிறுவனம் அளிக்கும் படிவம் 16-ஐ வருமான வரித் துறை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும்.

அந்த வகையில், போலியாக அல்லது தவறாக வரிச் சலுகை கோரினால் சிக்கல் வர வாய்ப்புள்ளது.

சேனா சரவணன்