பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...

1. இந்தியா எந்த நாட்டுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது?
அ. அமெரிக்கா
ஆ. ஐக்கிய அரபு நாடுகள்
இ. சீனா
2. இந்தியாவிலிருந்து எந்த நாடு அதிகமாக இறக்குமதி செய்கிறது?
அ. அமெரிக்கா
ஆ. ஐக்கிய அரபு நாடுகள்
இ. சீனா
3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) வேளாண் துறையின் பங்களிப்பு
அ. 15.4%
இ. 40%
இ. 50%
4. 2018-19-ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம்....... என மதிப்பிடப்பட்டுள்ளது.
அ. ரூ.1,10,000
ஆ. ரூ.91,921
இ. ரூ.2,00,000
5. இந்தியாவில் மொத்த விலைப் பணவீக்கம் (WPI) அதிகமாக இருக்க முக்கியக் காரணம்
அ. எரிபொருள்கள் மற்றும் மின்சாரம்
ஆ. உற்பத்திப் பொருள்கள்
இ. காய்கனிகள்
6 அரசு விதிமுறைபடி சிறு நிறுவனம் என்பது
அ. ஆண்டு விற்றுமுதல் ரூ.5 கோடிக்குக்கீழ்
ஆ. ஆண்டு விற்றுமுதல் ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரை
இ. ஆண்டு விற்றுமுதல் ரூ.5 கோடி முதல் ரூ.75 கோடி வரை
7. உங்கள் வங்கி உங்கள் புகாரை.....மாதத்துக்குள் திருப்திகரமாக தீர்க்கா விட்டால் ஆர்.பி.ஐ-யின் பேங்கிங் ஆம்புட்ஸ்மேனை அணுக வேண்டும்?
அ. ஒரு
ஆ. இரண்டு
இ. மூன்று
8. காளைச் சந்தை என்று எப்போது அழைப்பார்கள்..?
அ. அனலிஸ்ட்கள் தொலைக்காட்சிகளில் பங்குகளை வாங்க தொடர்ந்து பரிந்துரை செய்யும்போது
ஆ. பங்குச் சந்தைக் குறியீடுகள் அவற்றின் முந்தைய இறக்கத்திலிருந்து 20% ஏற்றம் கண்டிருக்கும்போது
இ. பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகள் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கும்போது
9. வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ்-ல் குறைந்த பட்ச முதலீட்டுத் தொகை
அ. ரூ.1,000
ஆ. ரூ.5,000
இ. ரூ.500
10. சமீபத்தில் அதிக விலை இறக்கம் கண்ட தனியார் வங்கிப் பங்கு
அ. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்
ஆ. ஆக்ஸிஸ் பேங்க்
இ. யெஸ் பேங்க்
சி.சரவணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விடைகள்
1. அ. அமெரிக்கா
2. இ. சீனா
3. அ. 15.4%
4. ஆ. ரூ. 91,921
5. ஆ. உற்பத்தி பொருள்கள்
6. இ. ஆண்டு விற்றுமுதல் ரூ.5 கோடி முதல் ரூ.75 கோடி வரை
7. அ. ஒரு
8. ஆ. பங்குச் சந்தை குறியீடுகள் அவற்றின் முந்தைய இறக்கத்திலிருந்து 20% ஏற்றம் கண்டிருக்கும்போது
9. இ. ரூ.500
10. இ. யெஸ் பேங்க்