Published:Updated:

நாணயம் பிட்ஸ்

நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் பிட்ஸ்

நாணயம் பிட்ஸ்

நாணயம் பிட்ஸ்

நாணயம் பிட்ஸ்

Published:Updated:
நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் பிட்ஸ்
நாணயம் பிட்ஸ்

இ-காரும் ரத்தன் டாடாவும்!

த்தன் டாடாவின் கவனம் முழுக்க எலெக்ட்ரிக் கார்களின்மீதுதான். மின்சக்தி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களில்தான் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறார் டாடா குழுமத்தின் கெளரவத் தலைவர் ரத்தன் டாடா. முதலில், கோவை இ-கார் நிறுவனமான ஆம்பியர் நிறுவனத்தில் முதலீடு செய்தவர், தற்போது ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். சீரீஸ் ‘எ’ ஃபண்ட் கேட்டகிரியில் இவர் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தாலும், முதலீட்டுத் தொகை எதுவும் குறிப்பிடவில்லை. இதுதவிர, பே டிஎம், கார்தேக்கோ, ஷியோமி உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ரத்தன் முதலீடு செய்திருக்கிறார். டாடாவின் யுசி - ஆர்.என்.டி ஃபண்டில் ஏறக்குறைய ரூ.21,000 கோடி முதலீட்டுத் தொகை இருக்கிறது. #கலக்குங்க  டாடாஜி!

நாணயம் பிட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்.வி.பி-யின் ஜஸ்ட் எ டாலர்!

திநவீன தொழில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு உதவுகிற மாதிரி ‘ஜஸ்ட் எ டாலர்’ என்கிற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது லஷ்மி விலாஸ் பேங்க். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் அந்நியச் செலாவணியை மாற்றும் வசதியை ஏற்படுத்தித் தருகிறது இந்தத் திட்டம்.

சமீபத்தில் திருப்பூரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம், லஷ்மி விலாஸ் பேங்கின் ரீடெய்ல் பேங்கிங் பிரிவின் தலைவர் பியூஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

# எக்ஸ்போர்ட்டர்களுக்கு இனி ஜாலிதான்!

நாணயம் பிட்ஸ்

ப்ளாக்செயின் டெக்னாலஜிக்குப் பெரும் வரவேற்பு!

திநவீன தொழில்நுட்பமான ப்ளாக்செயின் டெக்னாலஜிக்கு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பலத்த வரவேற்பு இருப்பதாக கனடாவின் டான் டேப்ஸ்காட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ப்ளாக்செயின் தொழில்நுட்பம் குறித்து இன்னமும் பலவிதமான சந்தேகங்களும் கேள்விகளும் இருக்க, வருகிற 2030-ல் இந்தத் தொழில்நுட்பம் மூலம் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்பு 3.1 பில்லியன் டாலருக்குமேல் இருக்கும் என இந்த நிறுவனம் கணித்திருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இந்தத் தொழில்நுட்பத்தை எந்தெந்தத் துறையில் பயன்படுத்தலாம் என உலகம் முழுக்க உள்ள 3,100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துவருகின்றன என்பது கூடுதல் தகவல். # வரப்போகுது ப்ளாக்செயின் பஞ்சாயத்து!

நாணயம் பிட்ஸ்

பிக் பாஸ்கெட்டில் டாலர் மழை!

ன்லைன்மூலம் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனமான பிக் பாஸ்கெட், ‘யூனிகார்ன்’ (ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஸ்டார்ட்அப்) ஸ்டார்ட்அப் நிறுவனப் பட்டியலில் இணைந்திருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த மிரே அஸெட் - நாவர் நிறுவனம் உள்பட, பல முதலீட்டு நிறுவனங்கள் பிக் பாஸ்கெட்டில் 150 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10,500 கோடி) முதலீடு செய்ததைத் தொடர்ந்து, பிக் பாஸ்கெட்டுக்கு ‘யூனிகார்ன்’ அந்தஸ்து கிடைத்துள்ளது. #வாழ்த்துகள்!

திவால் நிறுவனங்கள்!

ம்மூர் ஐ.எல் அண்டு எஃப்.எஸ் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான பணத்தைத் திரும்பத் தரமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதைப்போல சீனாவிலும் உருவாகியிருக்கிறது.

சீன நிறுவனங்கள் இதுவரை 5.8 பில்லியன் டாலர் அளவுக்குப் பணத்தைத் திரும்பத் தரமுடியாமல் திவால் ஆகியிருப்பதாக அந்த நாட்டிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே இவ்வளவு பெரிய தொகையை நிறுவனங்கள் திரும்பத் தராமல் இருப்பதைக் கண்டு சீன மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 3.4 மடங்கு அதிகமாம்!

# நம்ம நாட்டுல இந்த நிலைமை வராம இருந்தால் சரி!

சரிவில் எவரெடியின் சந்தை மதிப்பு!

பே
ட்டரி தயாரிப்பு நிறுவனமான எவரெடியின் சந்தை மதிப்பு கடந்த 15 மாதங்களில் 75% வரை இறங்கி யிருக்கிறது. இதற்குக் காரணம், சீன பேட்டரிகள். சீனாவில் தயாராகும் பேட்டரிகள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் இவற்றுடன் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது எவரெடி. ஓராண்டுக்கு முன் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,100 கோடிக்குமேல் இருந்தது. ஆனால், இப்போது இரண்டு மடங்கு குறைந்து, வெறும் ரூ.631 கோடியாக வர்த்தகம் ஆகிவருகிறது. #எவரெடிக்கு இடி!

குறைந்தது நேரடி வரி வருவாய்!

டந்த 2018-19-ம் ஆண்டில் நேரடி வரி வருவாயாக ரூ.12 லட்சம் கோடியை ஈட்ட வேண்டும் என மத்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விடவும் ரூ.82,000 கோடி நேரடி வரி வருவாய் குறைந்திருக்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டைவிட நேரடி வரி வருவாய் 13.4% அதிகரித்திருந்தாலும் வரி வருவாய்க்கான இலக்கு பிற்பாடு மாற்றியமைக்கப்பட்டது. இதனால்தான் வரி வருமானம் 18% குறைந்துள்ளது. #வருமானத்தை அதிகப்படுத்துங்க அதிகாரிகளே!

நாணயம் பிட்ஸ்

அதிகரிக்கும் எரிவாயு மானியம்!

மையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு அளிக்கப்படும் மானியம் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் சமையல் எரிவாயுக்காக அளிக்கப் பட்ட மானியம் ரூ.20,880 கோடி. 2019-ல் இது 49.4% அதிகரித்து, ரூ.31,200 கோடியாக  உயர்ந்திருக்கிறது. அதே போல, மண்ணெண் ணெய்க்குக் கடந்த    2018-ல் அளிக்கப்பட்ட மானியம் ரூ.4,785 கோடி. இது 2019-ல் ரூ.5,800-யாக உயர்ந்திருக்கிறது. வருகிற 2020-ல் சமையல் எரிவாயுக்கான மானியம் ரூ.35,880 கோடியாக இருக்கும் என்றும் மண்ணெண்ணெய்க்கு அளிக்கப்படும் மானியம் ரூ.2,730 கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. # எகிறுது மானியம்!