Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், “இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளை மேலே நகர்த்த சில நல்ல செய்திகள் தேவை; அந்த வகையில் வர்த்தகர்கள் தனிப்பட்ட பங்குகளில் கவனம்கொள்ளுங்கள்” என்று சொல்லி யிருந்தோம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நாம் சொன்னபடியே நடந்திருக்கிறது. கூடவே, சந்தை தொடர்ந்து எட்டு நாள்களாக இறக்கத்தில் முடிந்திருக்கிறது. அமெரிக்கா - சீனா பொருளாதாரப் போர் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கவே, சந்தை தொடர் இறக்கம் கண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியால் அமெரிக்கப் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டன. இது இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.

நிஃப்டியின் குறுகிய கால சப்போர்ட் 11700 உடைக்கப்பட்டது. இதனை அடுத்து, அடுத்த சப்போர்ட்டான 11550-ம் உடைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை நிஃப்டி 11279-க்கு இறங்கியது. இதில் லார்ஜ்கேப் பங்குகளின் இறக்கம்தான் அதிகம். நாம் இதுவரைக்கும் பார்க்காத சூழல் இது. 

குறியீடுகளின் முக்கிய சப்போர்ட்கள் உடைக்கப்பட்ட நிலையில், இதற்கு வங்கிப் பங்குகளின் குறியீடும் தப்பவில்லை. நாடாளு மன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பலதரப்பட்ட கருத்துகள் பரவிவருவதும் சந்தை இறக்கத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது. தற்போதைய நிலையில், பெரும்பாலான பங்குகளின் மதிப்பீடு மிகவும் அதிகமாக இருக்கிறது.

நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் நன்றாக இருந்தால் மட்டுமே பங்குகளின் மதிப்பீட்டை நியாயப்படுத்தும் நிலை காணப்படுகிறது. தற்போது வரைக்கும் காலாண்டு முடிவுகள் கலவையாகவே வருகின்றன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பெரிய தரகு நிறுவனங்கள் பெரிய நிறுவனப் பங்குகளைத் தரமிறக்கியதால், (உதாரணம் ரிலையன்ஸ்) பங்குகளை விற்பது கண்டபடி அதிகரிக்கிறது. இதனால் பங்கின் விலை அதிகமாக இறக்கம் காண்கிறது. மிகச் சில நிறுவனங்கள் மட்டுமே நல்ல வருமானத்தைத் தந்துள்ளதால்,  அவற்றின் பங்கு விலை அதிகரிக்கிறது.

மத்தியில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் விலக, இன்னும் இரு வாரங்களே உள்ளன. அதுவரைக்கும் தனிப்பட்ட பங்குகள்மீது கூடுதல் கவனம் செலுத்தி, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது நல்லது.

பல பெரிய முதலீட்டாளர்கள் சந்தை இன்னும் இறங்கும், நல்ல நிறுவனப் பங்குகளை மலிவான விலையில் வாங்கலாம் எனக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மாறாக, இண்டெக்ஸ் அதிக இறக்கம் கண்டிருப்பதால், லாங்க் பொசிஷன் டிரேடிங் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புதிதாக சார்ட் பொசிஷன்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சப்போர்ட் உடைக்கப்படும்போது, டிரேடர்கள் அதிக விற்பனையில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தற்போதைய இந்த விற்பனை குறித்து முதலீட்டாளர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.

ஆனால், அது நடக்கவில்லை என்றால்,  சந்தை சிறிது காலத்துக்கு இறக்கமாக இருக்கும். அதனால் பெரிய பாதிப்பு இருக்காது.

வரும் வாரத்தில் நிஃப்டி புள்ளிகள் 11100 மற்றும் 11200 இடையே வர்த்தகமாகக்கூடும்.      மே 23 வரைக்கும் நிஃப்டி புள்ளிகள் 11600-ஐ தாண்ட வாய்ப்பில்லை.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வருண் பெவரேஜஸ் (VBL)

தற்போதைய விலை: ரூ.912.10

வாங்கலாம்


இந்த நிறுவனத்தின் பங்கு விலையில், நீண்ட காலமாக மேல்நோக்கிய நகர்வு இருக்கிறது. நிர்வாகத்தின் நல்ல செயல்பாட்டால் தற்போது வெளியான நான்காவது காலாண்டு நிதிநிலை முடிவும் நன்றாக உள்ளது. பங்கு விலையின் போக்கு தொடர்ந்து மேல்நோக்கிச் செல்லும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

இந்த ஏற்றப்போக்கினால் இந்தப் பங்கு இதுவரையில்லாத புதிய உச்சத்தை எட்டக்கூடும். தொடர்ந்து விலை ஏறி, ரூ.1,100-யை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.880 வைத்து வாங்கவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மங்களம் ஆர்கானிக்ஸ்

தற்போதைய விலை: ரூ.583.15

வாங்கலாம்


கெமிக்கல் நிறுவனப் பங்குகளுக்கான தேவை, சில நேரங்களில் அதிகரித்துக் காணப்படும். அப்படியான நிறுவனங்களில் மங்களம் ஆர்கானிக்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனப் பங்குக்கு விலையைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் இருக்கிறது.

எனவே, தற்போது சந்தை சரிவு நிலையில் இருக்கும் சூழலிலும், தொடர்ந்து நன்கு செயல்பட்டு வருகிறது.

முந்தைய இறக்க நிலைகளால் ஒருபோதும் அதன் போக்கின் வலிமையை இழக்கவில்லை என்பது இதன் ஆக்ஸிலேட்டர் சார்ட்டில் தெரிகிறது.

ஒவ்வோர் இறக்கத்துக்குப்பிறகும் மேல்நோக்கி வலுவாக ஏறி, தொடர்ந்து புதிய உச்சத்துக்குச் செல்கிறது.

ஸ்டாப்லாஸ் ரூ.570 என வைத்துக்கொண்டு, தற்போதைய விலையில் முதலீடு செய்யவும். இலக்கு விலை ரூ.625. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹைகல் (HIKAL)

தற்போதைய விலை: ரூ.175.55

வாங்கலாம்


இந்தியாவைச் சார்ந்த பார்மா மற்றும் கெமிக்கல் நிறுவனங்களுக்கு பங்குச் சந்தையில் திடீரென வரவேற்பு அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம், கெமிக்கல் பொருள்களை சீனா விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தடையே என்கிறார்கள். 

இந்த வாய்ப்பானது இன்னும் சில காலத்துக்கு நீடிக்கக்கூடும். ஹைகல் நிறுவனம், நான்காம் காலாண்டில் நல்ல வருமானத்தைக் காட்டியுள்ளது.  இந்த வளர்ச்சியானது தொடரும் என்றே சொல்லலாம். க்

நிறுவனம் தொடர்ச்சியாக 20% வளர்ச்சியை அடைந்து வருகிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும்விதத்தில் பங்கின் விலை சார்ட் உள்ளது.

பங்கு விலை புதிய உச்சத்தை எட்டுவதற்கான அறிகுறி தெரிகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.162 வைத்து வாங்கவும். இலக்கு விலை ரூ.200.

தொகுப்பு: சி.சரவணன், தெ.சு.கவுதமன்

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.