பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.

சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...
1. பாரத ரிசர்வ் வங்கியின் ஸ்லோகன்
அ. இந்தியாவின் மத்திய வங்கி
ஆ. நம்பிக்கையுடன் வங்கிச் சேவை
இ. அனைவருக்கும் வங்கிச் சேவை
2. முதலீட்டுடன் தொடர்புடையது
அ. காலம்
ஆ. பணம்
இ. ரிஸ்க்
ஈ. மேலே கண்ட அனைத்தும்
3. கடன் என்பது சேவை / பொருளை இப்போது வாங்கிப் பயன்படுத்திவிட்டு, பிறகு அதற்கு உரிய தொகையை அளிப்பதாகும்.
அ. சரி
ஆ. தவறு
4. பணவீக்கம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் என்ன பாதிப்பினை ஏற்படுத்துகிறது?
அ. பொருள்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
ஆ. சப்ளையைவிட தேவையை அதிகரிக்கிறது
இ. தேவையைவிட சப்ளையை அதிகரிக்கிறது
5. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் நாணயத்தின் குறைந்தபட்ச மதிப்பு
அ. 25 பைசா
ஆ. 50 பைசா
இ. 1 ரூபாய்
6. பங்குச் சந்தை ஏறினால் காளைச் சந்தை, இறங்கினால் கரடிச் சந்தை, அதிக ஏற்ற இறக்கம் இல்லை என்றால்...
அ. மான் சந்தை
ஆ. சிக்கன் சந்தை
இ. யானை சந்தை
7. ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் என்பது...
அ. வரிக்கு முந்தைய லாபம்
ஆ. வரிக்குப் பிந்தைய லாபம்
இ. முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்கப் பட்டபிறகான லாபம்
8. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்.ஐ.பி (S.I.P) என்பது
அ. Specific Investment Plan
ஆ. Systematic Investment Plan
இ. Special Income Plan
9. இந்தியாவில் ஏ.டி.எம்-ஐ முதன்முதலில் அறிமுகப்படுத்திய வங்கி
அ. ஹெச்.எஸ்.பி.சி
ஆ. எஸ்.பி.ஐ.
இ. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்
10. வங்கி நடப்புக் கணக்குக்கு (கரன்ட் அக்கவுன்ட்) வட்டி எதுவும் வழங்க மாட்டார்கள்.
அ.சரி
ஆ. தவறு
சி.சரவணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விடைகள்
1. அ. இந்தியாவின் மத்திய வங்கி, 2. ஈ. மேலே கண்ட அனைத்தும், 3. அ. சரி, 4. ஆ. சப்ளையைவிட தேவையை அதிகரிக்கிறது, 5. ஆ. 50 பைசா, 6. ஆ. சிக்கன் சந்தை, 7. ஆ. வரிக்கு பிந்தைய லாபம், 8. ஆ. Systematic Investment Plan, 9. அ. ஹெச்.எஸ்.பி.சி., 10 .அ. சரி