Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

தங்கம் (மினி)

தங்கம் தொடர்ந்து பங்குச் சந்தைக்கு எதிர்திசையில் நகர்வது இன்னமும் நடந்துவருகிறது.    சென்ற வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை வலிமை குன்றியபோது, தங்கம் பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையான 31980 என்ற தடையை உடைத்து மிக மிக வலுவாக ஏறியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் அடுத்தகட்டமாக 32160 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 31680-ஐ உடனடி ஆதரவுநிலையாகவும் கொண்டுள்ளது.’’

தங்கம் சென்ற வாரம், திங்களன்று, நாம் தந்த தடைநிலையான 32160-ஐ மிக வலிமையாக உடைத்து ஏறியது. இந்த ஏற்றம் நாம் தந்திருந்த தடைநிலையான 32160-ஐ உடைத்து ஏறியது மட்டுமல்ல, உச்சமாக 32538-ஐ தொட்டது. ஆனால், அந்த உச்சம்தான் அந்த வாரத்தின் உச்ச மாகவும் முடிந்துள்ளது. அதன்பின் அடுத்தடுத்த நாள்களில் பங்குச் சந்தை ஏற, தங்கம் இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கமானது, அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து எங்கிருந்து ஏற ஆரம்பித்ததோ, அங்கேயே வந்து சேர்ந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? 31880-ஐ முக்கிய ஆதரவு எல்லையாகவும், 32260-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

வெள்ளி (மினி)

தங்கத்தைவிட வெள்ளி மிக வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி  டவுன் டிரெண்டில் உள்ள நிலையில் 37850 என்ற எல்லை தடைநிலையாகவும், 37000 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும் உள்ளது.’’

வெள்ளி விலை ஏறினாலும், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 37850-ஐ தாண்ட முடியவில்லை. ஆனால், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 37000-ஐ உடைத்து நன்கு இறங்கி குறைந்தபட்ச புள்ளியான 36683-ஐ தொட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

இனி என்ன செய்யலாம்? 36540 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 37160 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போது 4255 என்ற ஆதரவைக் கொண்டுள்ளது.  மேலே 4370 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது.”

கச்சா எண்ணெய் பலமான இறக்கத்திற்குப் பிறகு, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4255 என்ற எல்லையைத் தக்கவைத்துக்கொண்டு மெள்ளமெள்ள ஏற ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு குறைவாக உள்ளதாலும், ஆயில் ஏற்றுமதி நாடுகளுக்கிடையேயான கூட்டம் நடைபெற இருப்பதாலும் கச்சா எண்ணெய் மெள்ள ஏற முனைந்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

இனி என்ன செய்யலாம்? கச்சா எண்ணெய் மே மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம். தற்போது 4540 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும், கீழே 4380-ஐ முக்கிய ஆதரவாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

காப்பர் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “காப்பர் நல்ல இறக்கத்திற்குப்பிறகு கீழே 428-ஐ ஆதரவாகவும், மேலே 435-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”

காப்பர்  நல்ல இறக்கத்திற்குப்பிறகு, பக்கவாட்டு நகர்வில் உள்ளது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 428-ஐ உடைத்து மெள்ள மெள்ள இறங்கிக்கொண்டிருக்கிறது. நாம் கொடுத்திருந்த தடைநிலையான 435-ஐ உடைக்க முயற்சி செய்யவில்லை. 

இனி என்ன செய்யலாம்?  காப்பர் நெருக்கமான பக்கவாட்டு நகர்வில் உள்ளது.  இந்த நிலையில், 423 என்பதை உடனடி ஆதரவாகவும், மேலே 431 என்பதை உடனடித் தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், மே மாத தொடக்கத்தில், முந்தைய கான்ட்ராக்ட் விலையைவிடக் குறைந்து தொடங்கியதைப் பார்த்தோம்.

எப்போதுமே ஃபியூச்சர்ஸ் வகை வியாபாரம் என்பது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்று பார்க்கும்போது, வரும் மாதங்களில் என்ன விலையில் வியாபாரமாக வாய்ப்புள்ளது என்பதைக் காட்டக்கூடிய வழிகாட்டியாகவும் பார்க்கப்படுகிறது. இதை ‘பிரைஸ் டிஸ்கவரி மெக்கானிசம்’ என்று அழைப்போம். 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

அந்த வகையில்,  ஏப்ரல் மாத விலையைவிட, மென்தா ஆயில் மே மாதம் குறைவான விலையில் வியாபாரமாக வாய்ப்பு உண்டு என்பதையே தற்போதைய நிகழ்வு காட்டியுள்ளது.

மே மாத ஆரம்பத்தில் குறைந்த விலையில் ஆரம்பித்த மென்தா ஆயில், முதல் இரண்டு வாரங்களை எடுத்துப் பார்த்தால், முதல் வாரத்தில் சற்றே ஏற்றம், இரண்டாம் வாரம் ஒரு ரீட்ரேஸ்மென்ட் என்ற வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற  வாரம் சொன்னது… “மென்தா ஆயில் தற்போது தொடர்ந்து வலிமையாக ஏறிக்கொண்டி ருந்தாலும், அது அடுத்த 1450 என்ற வலிமையான தடைநிலைக்கு அருகில் உள்ளது. இதுவே தடையாக மாறலாம். கீழே 1375 என்பது மிக முக்கிய ஆதரவு ஆகும்.”

மென்தா ஆயிலுக்கு  நாம் கொடுத்த தடை எல்லையான 1450-ஐ தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. மேலே ஏற முடியாத நிலையில், இதன் விலை மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்துள்ளது.

இந்த இறக்கம் நாம் கொடுத்திருந்த 1375 என்ற எல்லையை 15.05.19 அன்று உடைத்து, 1358 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொட்டாலும், பிறகு சற்றே ஏறி டோஜி வகை கேண்டிலைத் தோற்றுவித்தது.

இதனால் ஆதரவு எல்லை, முடிவு விலையின் அடிப்படையில் தக்கவைக்கப்பட்டுள்ளது. எனவே, ரீட்ரேஸ்மென்ட் முடிவுக்கு வந்து அடுத்தகட்ட ஏற்றத்தில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்? 1360-ஐ ஆதரவாகக் கொண்டும், மேலே 1433-ஐ தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

காட்டன்

காட்டன் நல்ல ஏற்றத்திற்குப்பிறகு ஏப்ரல் 2019 முழுவதும் 22500 என்ற எல்லையில் வலிமையாகத் தொடர்ந்து தடுக்கப்பட்டுக்கொண்டிருந்ததைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்த பக்கவாட்டு நகர்வு 06.05.19 என்று முடிவுக்கு வந்து, கீழ் எல்லையை உடைத்துத் தொடர் இறக்கத்தில் இருப்பதைப் பார்த்தோம். 

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் தற்போது இறங்குமுகமாக மாறியுள்ளது. இனி 21350 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும், மேலே 21850 உடனடித் தடைநிலையாகவும் இயங்க வாயப்புள்ளது.”

நாம் கொடுத்திருந்த 21850 என்ற தடைநிலையை உடைக்க முடியாமல் இறக்கம் தொடர ஆரம்பித்தது. இந்த இறக்கம் என்பது மிக வலிமையான இறக்கமாக மாறி, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 21350-ஐ உடைத்து விலை கடும் வீழ்ச்சியடைந்தது.

இதனால் காட்டன் விலை குறைந்தபட்ச விலையாக 19950-ஐ தொட்டது. இது மிகப்பெரும் வீழ்ச்சி ஆகும். தற்போது மெள்ள மீண்டுவருகிறது.

இனி என்ன செய்யலாம்? 21420 என்பதை வலிமையான தடைநிலையாகவும், கீழே 20940 என்பதை உடனடி ஆதரவாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்ற வாரம் சொன்னது… “சென்னா வலிமையாக ஏறிய நிலையில் 4395 உடனடி ஆதரவாகவும், மேலே 4500 உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.”

சென்னா, சென்ற வாரம் ஒரு பக்கவாட்டு நகர்விலிருந்து, மேல் எல்லையை உடைத்து மிக வலிமையான ஏற்றத்தைக் காட்டியுள்ளது.

நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4395-ஐ தக்கவைத்துக்கொண்டு, மேலே 4500 என்ற வலிமையான தடையை உடைத்து ஏறி, உச்சமாக 4603-ஐ தொட்டது. மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்? மே மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். 4650 என்பதைத்  தடை நிலையாகவும், கீழே 4570 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in