Published:Updated:

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை இனி பார்ப்போம். 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில்  (இந்த நிறுவனம் ஜனவரி- டிசம்பரை நிதி ஆண்டாகக் கொண்டுள்ளது). 9.25% அதிகரித்து, ரூ.463.28 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.424.03 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,813.6 கோடியிலிருந்து, ரூ.3,076.14 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை 9% அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விற்பனை 10.2% அதிகரித்துள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் குழு, இடைக்கால டிவிடெண்டாக  23 ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முத்தூட்  ஃபைனான்ஸ்

முத்தூட்  ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 2018-19-ம் நிதியாண்டில் 14% அதிகரித்து, ரூ.2,103 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.1,844 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனம் வழங்கிய கடன் 20% அதிகரித்து, ரூ.38,304 கோடியாக உள்ளது. தனித்த நிகர லாபம் ரூ.1,778 கோடியிலிருந்து 11% அதிகரித்து, ரூ.1,972 கோடியாக உள்ளது. முத்தூட் ஃபைனான்ஸ்,  இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு  12  ரூபாய் வழங்கியுள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

வோடஃபோன் ஐடியா

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இழப்பு நான்காவது காலாண்டில் ரூ.4,881.9 கோடியாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.5,004.6 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.962.2 கோடியாக இருந்தது. 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

எய்ஷர் மோட்டார்ஸ்

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் நான்காவது காலாண்டில் 18.05% அதிகரித்து, ரூ.544.84 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.461.53 கோடியாக இருந்தது.

மொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.2,528 கோடியிலிருந்து ரூ.2,500 கோடியாகக் குறைந்துள்ளது.

நான்காம் காலாண்டில், ராயல் என்ஃபீல்ட் பைக் விற்பனை 13% குறைந்து, 1,97,567-ஆக உள்ளது. கடந்த ஆண்டில் இதன் விற்பனை 2,26,907 பைக்குகளாக இருந்தன.

2018-19-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,202.73 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.1,959.67 கோடியாக இருந்தது.

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு, டிவிடெண்டாக (முகமதிப்பு ரூ.10 உள்ள பங்குகளுக்கு) ரூ.125 வழங்கப் பரிந்துரை செய்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

நியூஜென் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ்

நியூஜென் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 11.25% அதிகரித்து, ரூ.187.99 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.168.98 கோடியாக இருந்தது.

 இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 5.74% அதிகரித்து, ரூ.60.33 கோடியாக உள்ளது. நியூஜென் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு வருவாய் 9.14 ரூபாயிலிருந்து, 8.86 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ்

ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிகர  லாபம் நான்காவது காலாண்டில் 30 சதவிகிதம் அதிகரித்து, ரூ.373 கோடியாக உள்ளது.

 முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.286.1 கோடியாக இருந்தது. வருமானம் 32% அதிகரித்து, ரூ.1,276 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2018-19-ம் நிதியாண்டில் 23% அதிகரித்து, ரூ.1,253 கோடியாக உள்ளது. வருமானம் 16% அதிகரித்து, ரூ.4,305 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் சொத்து மதிப்பு 28% அதிகரித்து, ரூ.1,69,312 கோடியாக உள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

கரூர் வைஸ்யா பேங்க்

கரூர் வைஸ்யா வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) நான்காவது காலாண்டில் 3.68% குறைந்து, ரூ.619.23 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர வட்டி வருமானம் ரூ.642.89 கோடியாக இருந்தது.

இந்த வங்கியின் நிகர லாபம் 18.71% அதிகரித்து, ரூ.60.02 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 3.11% குறைந்து, ரூ.464.77 கோடியாக உள்ளது. ஒரு பங்கிலிருந்து வருவாய் 66 பைசாவிலிருந்து 75 பைசாவாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ஃ பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ்

ஃபிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 10.34% அதிகரித்து, ரூ.1,638.93 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,485.31 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.247.52 கோடியிலிருந்து 6.54% அதிகரித்து, ரூ.231.32 கோடியாக உள்ளது. எபிட்டா  2.76% அதிகரித்து ரூ334.99 கோடியாக உள்ளது. 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ஜீ மீடியா கார்ப்பரேஷன்

ஜீமீடியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 5.79% குறைந்து, ரூ.169.35 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.179.75 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 3622.76% அதிகரித்து, ரூ.86.66 கோடியாக உள்ளது. எபிட்டா 93.22% அதிகரித்து ரூ.44.48 கோடியாக உள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ்

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 28.26% அதிகரித்து, ரூ.2,971.78 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.2,316.91 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 7.33% அதிகரித்து, ரூ.297.41 கோடியாக உள்ளது. எபிட்டா 31.39% அதிகரித்து, ரூ.407.80 கோடியாக உள்ளது. ஒரு பங்கு வருவாய் 5.91 ரூபாயிலிருந்து 8.83 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முருகப்பா குழுமம்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் முருகப்பா குழுமத்தின் டேர்ன்ஓவர் 2018-19-ம் நிதியாண்டில் 12% வளர்ச்சி யடைந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.36,893 கோடியாக உள்ளது.

இந்தக் குழுமத்தில் மொத்தம் 28 நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் 9 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. கொரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிகர விற்பனை 19% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனியின் நிகர லாபம் முடிந்த நிதியாண்டில் 30% அதிகரித்து, ரூ.1,197 கோடியாக உள்ளது. இ.ஐ.டி பாரியின் நிகர லாபம் ரூ.79 கோடியாக உள்ளது.

-தெ.சு.கவுதமன்

திருத்தம்: நாணயம் விகடன்19.5.2019 இதழில் நாணயம் குவிஸ் பகுதியில் இரண்டாவது கேள்வி, ‘இந்தியா எந்த நாட்டிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்கிறது?’ என இருந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆர்