நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் QUIZ

நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.  

நாணயம் QUIZ

சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...

1. பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் முதலீட்டில் - முதலீடு, முதலீட்டுப் பெருக்கம், வட்டி வருமானம் அனைத்துக்கும் வரி இல்லை.

அ. சரி

ஆ. தவறு

2. நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசி...


அ. மெயின்மேன் பாலிசி

ஆ. கீமேன் பாலிசி

இ. மேனேஜர் பாலிசி

3.  பொதுவாக, கல்விக் கடனில் யார் கேரன்டராக இருப்பார்?


அ. பெற்றோர்

ஆ. பெற்றோர் அல்லது காப்பாளர்

4. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் டிவிடெண்ட் வழங்கப்படும்

அ. சரி

ஆ. தவறு

5. பொதுவாக, தங்க நகையைவிட வெள்ளி நகைக்குச் சேதாரம் அதிகம்

அ. தவறு

ஆ. சரி

6.  மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்  ஆவதற்கு, எந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்?

அ. மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

ஆ. சர்டிபைடு ஃபைனான்ஷியல் பிளானர்

இ. சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்

7. கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் ரிசர்வ் வங்கிமூலம் வீட்டுக் கடன் வாங்க முடியும்.

அ. சரி

ஆ. தவறு

8. புதிய பங்கு வெளியீட்டின்போது பங்கு விலையை நிர்ணயம் செய்வது

அ. செபி அமைப்பு

ஆ. நிதி திரட்டும் நிறுவனம்

இ. பங்கு வெளியீட்டுக்கான முதலீட்டு  வங்கிகளின்  கூட்டமைப்பு

9. பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டியது இந்தப் பகுப்பாய்வை...

அ. டெக்னிக்கல் அனாலிசிஸ்

ஆ. ஃபண்டமென்டல் அனாலிசிஸ்

10. ஒருவர் ரூ.1,000 முதலீடு செய்கிறார். ஆண்டுக்கு 10% தனிவட்டி வழங்கப்பட்டால், அவருக்குக் கிடைக்கும் தொகை

அ. ரூ.1,120

ஆ. ரூ.1,100

இ. 1,110

சி.சரவணன்

விடைகள்

1. அ. சரி

2. ஆ. கீமேன் பாலிசி 

3. ஆ. பெற்றோர் அல்லது காப்பாளர் 

4. ஆ. தவறு

5. ஆ. சரி

6. அ. மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

7. ஆ. தவறு 

8. இ. பங்கு வெளியீட்டுக்கான முதலீட்டு வங்கிகளின் கூட்டமைப்பு

9. ஆ. ஃபண்டமென்டல் அனாலிசிஸ்

10. ஆ. ரூ.1,100