நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்!

ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்!

ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்!

மீபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் நம்முடன் பேசினார். “நான் டிப்ளமோ படித்துவிட்டு கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து ரூ.80,000 வரை மேற்படிப்புக்காக வைத்திருந்தேன். என் உறவினர் ஒருவர் சொன்னதைக் கேட்டு பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டிச் சந்தையில் அந்தப் பணத்தைப் போட்டேன். எனக்கு இந்த  முதலீடுகள் பற்றி எதுவும் தெரியாது. தற்போது ரூ.30,000 வரை நஷ்டமாகிவிட்டது” என்றார். 

ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்!

இவரைப் போலவே பலரும் கமாடிட்டிச் சந்தை மற்றும் பங்குச் சந்தையில் லாபம் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு பிற தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்கிறார்கள். பங்குச் சந்தையில் எப்போது வேண்டுமானாலும் இழப்பு ஏற்படலாம். எனவே, தேவைக்குப் போக எஞ்சியுள்ள உபரிப் பணத்தை மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பலரும் எடுத்துச்சொல்வதில்லை.

குறிப்பிட்ட சில ஆண்டுகளில் நடக்கவுள்ள பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற அவசியத் தேவைகளுக்கான தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ரிஸ்க் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குறுகிய காலத் தேவைக்கான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குமேல் தேவைப்படாத தொகையை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லது.

பங்குச் சந்தையில் ஓரளவு ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய நினைப்பவர்கள்கூட, முதலீட்டுத் தொகையை பல்வேறு நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்தால் மட்டுமே பெரியளவில் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்!

சேனா சரவணன்