நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், “மே 23-ம் தேதிக்குமுன் உள்ள நாள்களில், இந்தியப் பங்குச் சந்தை இறங்கும்போது எங்கே சாதகமான செய்தி உள்ளதோ, அங்கே தரமான பங்குகளை அதிக எண்ணிக்கையில் வாங்கும் அணுகுமுறையைப் பின்பற்றலாம்” என்று எழுதியிருந்தோம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நாம் எழுதியபடியேதான் சந்தையில் நடந்தது.

இறக்க நிலையிலிருந்து மேலேறி உச்சத்துக்குச் சென்ற சந்தை, பின்னர் அன்றைய தினம் முழுவதும் ஏற்ற நிலையைத் தழுவியபடியே இருந்ததால், நிஃப்டி 12000 புள்ளிகளைத் தாண்டியது.

 நரேந்திர மோடிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியால், அடுத்த சில ஆண்டுகளுக்குச் சந்தை  சாதகமான  நிலையைக்  கொண்டிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அதே அணுகுமுறையைத் தொடர்வது மட்டுமே தற்போது நமக்குத் தேவை.

சந்தை பெரிய அளவில் இறங்கும்போது பங்குகளை வாங்கும் அணுகுமுறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து முதலீடு செய்துவரலாம்.

தேர்தலின்போது மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானபோது பல பங்குகளின் விலை கணிசமாக ஏற்றம் கண்டிருந்தது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அந்தவகையில், நன்கு விலை ஏறியிருந்த பங்குகளைப் பெரும்பாலானவர்கள் விற்று ஆதாயம் பார்த்ததால், சந்தை உச்சத்திலிருந்து சரிந்தது.

வாங்குவதற்கு ஆளில்லாமல் தேங்கிக் கிடந்த   ஏராளமான பங்குகளை, இதுவரையில்லாத இந்த உச்ச நிலையைப் பயன்படுத்தி, விற்பதற்கான ஒரு வாய்ப்பாகக்கொண்டு, தங்களிடமிருந்த பங்குகளை விற்றுத் தீர்த்தனர் பலர்.

தீவிர முதலீட்டாளர்கள், புதிய அரசிடமிருந்து வெளிப்படும் புதிய கருத்தின் அடிப்படையிலான பங்குகளை வாங்க ஒன்றுகூடவும், அதற்கான பணத்தைத் திரட்டவும் சற்று நாளாகும் என்பதால், சில காலத்துக்கு இந்த ஏற்ற இறக்கப் போக்குத் தொடரும்.

இது சந்தையை இன்னும் ஓரிரு வாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே வைத்திருக்கும். ஆனால், அதற்குப்பின்னர் ஏற்ற நிலை மீண்டும் புத்துயிர் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போது நாம் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் என்னவென்றால், அந்நிய நிறுவன முதலீட் டாளர்கள் ஒதுக்கீடு எவ்வளவு அதிகரித்துள்ளது, எவ்வளவு முதலீடு வந்துள்ளது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடுகள் வரத்து எவ்வளவு, தீவிர முதலீட்டாளர்களின் கைகளில் சும்மா கிடந்த பணம் எவ்வளவு சந்தைக்கு வந்துள்ளது என்பது போன்றவற்றைத்தான். இவைதான், இறுதியாக ஏற்றம் காணக்கூடிய தரமான பங்குகள் எவை என்பதைத் தீர்மானிக்கும்.

அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை 11000 -12500 புள்ளிகளுக்கு இடையே ஒரு புதிய வரம்பில் இருப்பதை நாம் காணலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL)

தற்போதைய விலை: ரூ.111.80

வாங்கலாம்


பொதுத்துறை புளூசிப் பங்காக இருந்த இந்த நிறுவனப் பங்கு  கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது அந்தச் சரிவிலிருந்து மீண்டுயெழும் போக்கு தெரிகிறது.

சமீப காலத்தில் பங்கு விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல், ஒரு தேக்கநிலையில் காணப்பட்டது. புதிய வாங்கும் போக்கு வரவிருப்பதை இந்தப் பங்கின் சார்ட் காட்டுகிறது. சரிவு நிலையிலிருந்த இந்தப் பங்கின் வால்யூம் அதிகரித்ததன்மூலம் புதிதாக வாங்கும் போக்கு உருவாகியிருப்பது உறுதியாகிறது.

தற்போது ஒரு பிரேக்அவுட்டின்மூலம் ஏற்றப்போக்கு வேகமெடுக்கிறது. இந்த ஏற்றம் தொடர்ந்தால் சூப்பர் ட்ரெண்ட் இண்டி கேட்டரையும் கடக்கக்கூடும். அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 40% வருமானத்தை எதிர்நோக்கி முதலீடு செய்யலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிராஜ் இண்டஸ்ட்ரீஸ் (PRAJIND)

தற்போதைய விலை: ரூ.142.80


வாங்கலாம்


இதே பகுதியில் இதற்குமுன்பும் இந்தப் பங்கைப் பற்றி எழுதியிருக்கிறோம். இது சமீபத்தில் ரூ.167 என்ற உயரத்திலிருந்து ரூ.115 என்ற இறக்கத்திற்குச் சரிந்தது. பின் வலுவாக மீண்டெழுந்து, முந்தைய முக்கிய உச்சத்தை நோக்கிச் செல்கிறது.

இந்த நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகள், எதிர்பார்த்ததைவிடச் சற்றே குறைவாக வந்ததும்கூட மீண்டெழுவதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

மத்திய அரசாங்கத்தின் சர்க்கரை உற்பத்தித் துறையின் கொள்கை தொடருமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவும்கூட பிராஜ் நிறுவனத்துக்கு மீண்டும் சாதகமாக அமைந்துள்ளது.

இந்தப் பங்குக்கு ஸ்டாப்லாஸ் 115 ரூபாய்க்குக் கீழே வைத்து, தற்போதுள்ள விலையில் வாங்கவும். குறுகிய காலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.165 வரை உயரும் என எதிர்பார்க்கலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சிட்டி யூனியன் பேங்க் (CUB)

தற்போதைய விலை: ரூ.212.60

வாங்கலாம்


இந்த வாரத்தில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்ட சிறப்பான வங்கித் துறைப் பங்குகளில் சிட்டி யூனியன் வங்கிப் பங்கும் ஒன்றாகும்.

இந்த வங்கிப் பங்கினை பிற வங்கிப் பங்குகளுடன் ஒப்பீடு செய்து பார்த்தால், சிறந்த தனியார் வங்கிகளின் வருமானத்தைப்போல், சிட்டி யூனியன் வங்கியின் வருமானமும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்படுவார்கள்.

இந்தப் பங்குகளின் வலுவான ஏற்றப்போக்கும், அதிகப்படியான  வால்யூமும் சீராகத் தொடர்கிறது. இந்தப் பங்கின் விலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ளது.

ஸ்டாப்லாஸ் 203 ரூபாய்க்குக்கீழே வைத்து தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலை ரூ.240 எனக் கொள்ளலாம்..

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்


டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.