நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில்,  விலையான ஒரு கேப் டவுன் (gap down) முறையில், (புது கான்ட்ராக்ட் தொடக்கத்தில்) இறங்கித் தொடங்கினாலும்  அது ஒரு ‘அப் டிரெண்டு’க்கான எல்லா அறிகுறிகளையும் கொண்டு நகர ஆரம்பித்தது.   இந்த நகர்வானது ஒரு ஹையர் டாப் மற்றும் ஹையர் பாட்டத்தை உருவாக்கி நகர ஆரம்பித்துள்ளது.  10.05.2019 அன்று உச்சமாக 1433-ஐ தொட்டுவிட்டு இறங்கி 1358 என்ற குறைந்தபட்ட புள்ளியைத் தொட்டு மேல் நோக்கித் திரும்பியது. இது ஒரு ரீட்ரேஸ்மென்ட் நகர்வாகும். அடுத்த ஏற்றம் 1478 வரை நகர்ந்து, புதிய உச்சத்தைத் தோற்றுவித்ததால், இது ஒரு அப் டிரெண்டை அன்று நிரூபித்தது. 

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி


சென்ற வாரம் நாம் சொன்னது…“மென்தா ஆயில் ரீட்ரேஸ்மென்ட் முடிந்த நிலையில், 1360-ஐ ஆதரவாகக் கொண்டுள்ளது.  மேலே 1433 தடைநிலையாகக் கொண்டுள்ளது.”

மென்தா ஆயில் சென்ற வாரம் மிக வலிமையான ஏற்றத்தைக் கொண்டிருந்தது. நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1433-ஐ உடைத்து ஏறி, அப் டிரெண்டின் அடுத்தகட்ட ஏற்றத்திற்கு வழிவகுத்தது.  சென்ற வாரம் திங்களன்று 1410 என்ற புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்து, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1433-ஐ உடைத்து ஏறி, 1451 என்ற அதிகபட்ச புள்ளியைத் தொட்டது. 

அடுத்து செவ்வாய்க்கிழமையன்று ஒரு கேப்அப் மூலம் 1464-ல் தொடங்கி, பின் ஏறி, அதிகபட்சப் புள்ளியாக 1478-ஐ தொட்டது.  இந்த அடுத்தகட்ட ஏற்றத்திற்குப்பிறகு, மென்தா ஆயில், ரீட்ரேஸ்மென்ட் என்ற வகையில் இறங்கி 1402-ஐ தொட்டது. இது முந்தைய பாட்டமான 1358-ஐவிட அதிகம். அதாவது, மென்தா ஆயில் ஒரு ஹையர் பாட்டத்தைத் தோற்றுவித்து ஏற ஆரம்பித்துள்ளது.  இது அடுத்தகட்ட உயர்விற்கு வழிவகுத்துள்ளது. இந்த ஏற்றம் 1489 வரை தொடர்ந்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

இனி என்ன நடக்கலாம்..? மென்தா ஆயில், மே மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். மென்தா ஆயில் அப் டிரெண்டில் இருப்பதால், மேலே உடனடித் தடைநிலையான 1330-ஐ தாண்டினால், இன்னும் வலிமையான ஏற்றம் வரலாம். தற்போதைய உடனடி ஆதரவு எல்லை 1280 ஆகும்.

காட்டன்

காட்டன்  14.05.2019 வரை தொடர்ந்து இறங்கிய நிலையில், தற்போது ஒரு பலமான புல்பேக் ரேலியில் உள்ளது. இந்த புல்பேக் ரேலி இனி அப் டிரெண்டாக மாறுமா என்பது வரும் வாரம் நமக்குத் தெரியவரும்.

சென்ற வாரம் சொன்னது.. “காட்டன் பெரிய இற்றக்கத்திற்குப்பிறகு ஏறுவதால், இதை புல்பேக் ரேலியாகவே பார்க்கலாம். தற்போது 21420 என்ற வலிமையான தடைநிலை யாகவும், கீழே 20940 உடனடி ஆதரவாகவும் உள்ளது.”

நாம் கொடுத்திருந்த 20940 என்ற ஆதரவு நிலையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.  எனவே, காட்டன் விலைநகர்வு காளைகளின் கையில் இன்னும் வலுவாக உள்ளது. மேலே நாம் கொடுத்திருந்த தடை நிலையான 21420-ஐ உடைத்து, 21540 வரை ஏறியது. சிறிய இறக்கம் வந்து, 21060 என்ற புள்ளியைத் தொட்டு மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

இனி என்ன நடக்கலாம்..? காட்டன்,  இனி  ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். காட்டன் 21800 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகக் கொண்டுள்ளது. உடைத்தால் பெரிய ஏற்றம் வரலாம்.  கீழே 21500 உடனடி ஆதரவு ஆகும்.

சென்னா

சென்னா என்.சி.டி எக்ஸ் (NCDex) சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்ற வாரம் சொன்னது… “சென்னா, மே மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால்,  இனி ஜூன் மாத கான்ட்ராகட்டை எடுத்துக் கொள்வோம். சென்னா 4650 என்ற தடைநிலை யையும், கீழே 4570 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.”

சென்னா, சென்ற வாரம் நாம் கொடுத்த தடை நிலையான 4650-ஐ ஒரு கேப் மூலம் வலிமையாகத் தாண்டி 4745--ஐ தொட்டு ஆரம்பித்தது. அதன்பின், தொடர்ந்து இறங்குமுகமாக மாறியது. இந்த இறக்கம் ஒரு லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டத்தைத் தோற்றுவித்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்? சென்னா, தற்போது 4595 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது. இதை உடைத்தால்,  நல்ல இறக்கம் வரலாம்.  மேலே 4680 உடனடித் தடைநிலை ஆகும்.

தி.ரா.அருள்ராஜன்