நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை இனி பார்ப்போம்.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிக்கல்ஸ்

கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் நான்காவது காலாண்டில் 36.16% அதிகரித்து, ரூ.140.54 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் தனித்த நிகர லாபம் ரூ.103.22 கோடியாக இருந்தது. ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 7.62% அதிகரித்து, ரூ.1,223.84 கோடியாக உள்ளது.

2018-19-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 23.97% உயர்ந்து, ரூ.401.39 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட்  வழங்கப் பரிந்துரைத்துள்ளது. 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ஜிண்டால் ஸ்டீல் & பவர்

ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 18.14% அதிகரித்து, ரூ.10,158.95 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.8,598.77 கோடியாக இருந்தது. நிகர இழப்பு ரூ.424.69 கோடியிலிருந்து ரூ.2,145.79 கோடியாக அதிகரித்துள்ளது. எபிட்டா 13.68% குறைந்து, ரூ.1,844.72 கோடியாக உள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் நான்காவது காலாண்டில் 8.8% குறைந்து, ரூ.1,126.6 கோடியாக உள்ளது. கடந்த 2018 டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,230.8 கோடியாக இருந்தது.

இதன் செயல்பாட்டு வருமானம், 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.8,892.3 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் நான்காவது காலாண்டில் செயல்பாட்டு வருமானம் ரூ.8,054.5 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் எபிட் 4.9% குறைந்து, ரூ.1,368.3 கோடியாக உள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்கு ஒன்றுக்கு ரூ.14 டிவிடெண்ட் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

டி.எல்.எஃப்

டி.எல்.எஃப் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 79% அதிகரித்து, ரூ.435 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.247.73 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் 44% அதிகரித்து, ரூ.2,661 கோடியாக உள்ளது.

2018-19–ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம், ரூ.4,477 கோடியிலிருந்து ரூ.1,314 கோடியாகக் குறைந்துள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம், ரூ.7,664 கோடி யிலிருந்து ரூ.9,029 கோடியாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் நான்காவது காலாண்டில் 49% குறைந்து, ரூ.1,108 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.2,175 கோடியாக இருந்தது. வருமானம் ரூ.89,928.97 கோடியிலிருந்து ரூ.86,422 கோடியாகக் குறைந்துள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.8,449.5 கோடியாகவும் லாப வரம்பு 9.8 சதவிகிதமாகவும் உள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

பாஷ் (Bosch)

பாஷ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 12.95% குறைந்து, ரூ.2,749.15 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.3,158.03 கோடியாக இருந்தது.

நிகர லாபம் 5.09% குறைந்து, ரூ.411.70 கோடியாக உள்ளது. எபிட்டா 20.08% குறைந்து, ரூ.678.99 கோடியாக உள்ளது. பாஷ் நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 142.10 ரூபாயிலிருந்து, 136.50 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

இண்டஸ்இண்ட் பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்கின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் ரூ.360 கோடியாகச் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.953 கோடியாக இருந்தது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.335 கோடியிலிருந்து, ரூ.1,560 கோடியாக உயர்ந்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.606 கோடியாக இருந்தது. இந்த நிறுவனம் வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் சதவிகிதம், மூன்றாவது காலாண்டில் 1.13 சதவிகிதத்திலிருந்து, நான்காவது காலாண்டில் 2.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல, நிகர வாராக் கடன் 0.59 சதவிகிதத்திலிருந்து, 1.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ராம்கோ சிமென்ட்ஸ்

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 22.13% அதிகரித்து, ரூ.1,532.42 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,254.75 கோடியாக இருந்தது.

நிகர லாபம் 52.29% அதிகரித்து, ரூ.165.37 கோடியாக உள்ளது. எபிட்டா 15.45% அதிகரித்து, ரூ.336.17 கோடியாக உள்ளது.

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனப் பங்கின்     இ.பி.எஸ் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ்

பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 10.38% அதிகரித்து, ரூ.1,772.94 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,606.27 கோடியாக இருந்தது.

நிகர லாபம் 290.42% அதிகரித்து, ரூ.28.54 கோடியாக உள்ளது. எபிட்டா ரூ.157.52 கோடி யிலிருந்து 39.28% குறைந்து, ரூ.95.65 கோடியாக உள்ளது. பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 8.63 ரூபாயிலிருந்து, 2.79 ரூபாயாகக் குறைந்துள்ளது. 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ்

ஆர்த்தி இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 17.69% அதிகரித்து, ரூ.1,211.44 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,029.39 கோடியாக இருந்தது. நிகர லாபம் 46.93% அதிகரித்து, ரூ.124.45 கோடியாக உள்ளது. எபிட்டா 30.97% அதிகரித்து, ரூ.237.60 கோடியாக உள்ளது. ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 10.42 ரூபாயிலிருந்து 15.21 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தொகுப்பு: தெ.சு.கவுதமன்