‘நான் முதலீடு செய்தால் மட்டும் அந்தப் பங்கின் விலை இறங்கிவிடுகிறது’ என்று பலர் அலுத்துக்கொள்வதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். ‘எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதனால்தான் நான் பங்குச் சந்தை பக்கமே போவதில்லை’ என்பார்கள் பலர். உண்மையில், பங்குச் சந்தை மூலம் லாபம் சம்பாதிக்க அதிர்ஷ்டம் வேண்டுமா?

பங்குச் சந்தை முதலீட்டில் லாபத்துக்கும் அதிர்ஷ்டத்துக்கும் சம்பந்தமில்லை. ஒரு பங்கில் முதலீடு செய்யும்முன், அந்த நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் எப்படிப்பட்டவர், கடந்த காலங்களில் நிறுவனம் எப்படி லாபகரமாகச் செயல் பட்டிருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

மேலும், மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் ஒரு பங்கில் முதலீடு செய்யக் கூடாது. ஒரு பங்கில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள தொகையை மூன்று அல்லது ஐந்து பிரிவாகப் பிரித்துக்கொண்டு வெவ்வேறு காலகட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு நல்ல பங்கில் முதலீடு செய்தபிறகு, அந்தப் பங்கின் விலை இறங்கினால், அந்தப் பங்கில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்; விற்றுவிடக் கூடாது.

ஒரே ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்யக் கூடாது. குறைந்தது மூன்று முதல் ஐந்து பங்கு களிலாவது முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது அவசியம். பங்குகள் வெவ்வேறு துறையைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அடுத்து, பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல லாபம் ஈட்டுவதற்குக் குறைந்தது மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் காத்திருப்பது கட்டாயம். பொறுத்தார் பூமியை மட்டுமல்ல, பங்குச் சந்தையையும் ஆள்வார்!

சேனா சரவணன்