Published:Updated:

வேலைக்குச் சேர்ந்ததும் செய்ய வேண்டிய முதல் முதலீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேலைக்குச் சேர்ந்ததும் செய்ய வேண்டிய முதல் முதலீடு!
வேலைக்குச் சேர்ந்ததும் செய்ய வேண்டிய முதல் முதலீடு!

வேலைக்குச் சேர்ந்ததும் செய்ய வேண்டிய முதல் முதலீடு!

பிரீமியம் ஸ்டோரி

ம்மில் பலருக்கு வேலைக்குச் சேர்ந்ததும் எந்த முதலீட்டை முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன.

வேலைக்குச் சேர்ந்ததும் செய்ய வேண்டிய முதல் முதலீடு!

சொந்த வீடு இல்லையென்றால் வாடகை வீட்டில் இருந்துகொண்டு சமாளிக்கலாம். பிள்ளைகள் படிப்புக்கு கையில் பணம் இல்லையென்றால், கல்விச் கடன் வாங்கிச் சமாளிக்கலாம்.

ஆனால், ஒரே ஒரு தேவைக்கு மட்டும் கடன் வாங்குவது மிகக் கடினம். அது ஓய்வுக்கால தேவையாகும். மேலும், வயதான காலத்தில், உங்களின் தேவை களுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து இருக்கவும் முடியாது. பிள்ளைகளையும்  முழுமையாக நம்பி இருக்க முடியாது.

எனவே, ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை இளம் வயதிலேயே, வேலைக்குச் சேர்ந்ததும் முதலில் ஆரம்பித்துவிடுவது நல்லது. இளம் வயதில் முதலீட்டை ஆரம்பித்தால் குறைந்த தொகையை முதலீடு செய்து வந்தாலே போதும்.

உதாரணத்துக்கு, இப்போது 30 வயதுள்ள ஒருவருக்கு ஓய்வுக்காலத்தில், அதாவது 60 வயதில் ரூ.1 கோடி தேவையென்றால், அவரின் முதலீட்டுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% கிடைக்கும்பட்சத்தில், அவர் மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ.2,835 மட்டுமே. இதுவே, நீண்ட காலத்தில் அவரின் முதலீட்டுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 15% வருமானம் கிடைத்தால், மாதம் ரூ.1,430 முதலீடு செய்து வந்தாலே போதும். முதலீட்டுக்கு 12%-க்குமேல் வருமானம் கிடைக்க ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

சேனா சரவணன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு