இண்டெக்ஸ்

நிஃப்டி 12100 புள்ளிகள் என்கிற நிலைக்கு ஏறியிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை ஆர்.பி.ஐ 0.25% ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் சிக்கல்களுக்கு ஆர்.பி.ஐ தீர்வு எதையும் தெளிவாகச் சொல்ல வில்லை. என்.சி.டி-களுக்கு வட்டி கொடுக்க டி.ஹெச்.எஃப்.எல் தவறியதால், அதன் தரக் குறியீட்டை மூன்று முன்னணி தரக்குறியீட்டு நிறுவனங்கள் குறைத்தன. இதனால், வியாழக் கிழமை நிஃப்டி புள்ளிகள் 188 வீழ்ச்சி கண்டன.

வெள்ளிக்கிழமை நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் மற்றும் இறக்கம் என மாறிமாறி காணப்பட்டன. ஆனால், வர்த்தக்கதின் இறுதியில் 27 புள்ளிகள் உயர்ந்து 11870-ல் நிறைவு பெற்றது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தி லிருந்து ஏற்றம் காணும் தீவிர முயற்சியில் இருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, சந்தை இப்போது ஏற்றத்தின் போக்கில்தான் இருக்கிறது.

சந்தையின் இறக்கம் நீண்ட கால முதலீட்டை ஆரம்பிப்பதற்கான கவர்ச்சிகரமான இடமாக இருக்கிறது. அதேநேரத்தில், பங்குகளைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் தேவை.

சர்வதேச காரணங்கள், கலவையாக அதாவது சாதகம் மற்றும் பாதகமாக தொடர்வதால், சந்தை ஓர் எல்லைக்குள் வர்த்தகமாகக்கூடும். ஆனால், அந்த எல்லை இப்போது சற்று நீண்டதாக இருக்கலாம்.

அடுத்த வாரத்தில் பெரிய செய்திகள் எதுவும் இல்லாத நிலையில் நிஃப்டியின் முக்கிய ஆதரவு நிலை சுமார் 11750 ஆக உள்ளது. சில நிறுவனப் பங்குகள் விலை ஏற்றம் காணக்கூடும்.

நிஃப்டி 11750 மற்றும் 12100 இடையே வர்த்தகமாகக்கூடும். இது ஆப்ஷன் வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

பேங்க் நிஃப்டிக்கு 30000 என்பது முக்கிய நிலையாக உள்ளது. சர்வதேச பிரச்னைகளுக்குத் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் வரும் வாரத்தில் சந்தையின் போக்கில் ஒரு தெளிவில்லாத நிலை காணப்படுகிறது.

காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவருவது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. நிறுவனங் களின் நிர்வாகப் பிரச்னைகள்தான் சந்தையின் போக்கை நிர்ணயிக்கக் கூடும்.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் (HDFCLIFE)

தற்போதைய விலை ரூ. 451.40

பட்டியலிடப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி லைஃப், மார்ச் காலாண்டில் நல்ல நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது. சார்ட்டில் இதன் பங்கு விலை, ஒருங்கிணைப்பு நிலையிலிருந்து மாறி ஏற்றத்தின் போக்குக்கு வந்திருக்கிறது. ரூ.420-ல் பிரேக் அவுட் ஆகி, சார்ட்டில் நீண்ட சுத்தியல் உருவம் ஏற்பட்டிருக்கிறது.

அதிக வால்யூம் உடன் பங்கின் விலை ஏற்றம்கண்டு வருவதால், பல உச்சத்தைத் தாண்டி இன்னும் மேலே ஏற வாய்ப்பிருக்கிறது. தற்போதைய விலை மற்றும் ரூ.425-க்கு இறங்கும்வரைக்கும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.415 வைத்துக் கொள்ளவும். குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.890-க்கு உயரக்கூடும்.

நெஸ்கோ (NESCO)

தற்போதைய விலை ரூ.547.40

கடந்த ஓராண்டு காலமாக இந்தப் பங்கு நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. பங்கின் விலை ரூ.430 என்றளவுக்கு இறங்கிய நிலையில், அது குறைந்த ரிஸ்க்கில் நல்ல முதலீட்டு வாய்ப்பாக இருந்தது.

முந்தைய வாரத்தின் ரெசிஸ்டன்ஸ் சுமார் ரூ.520-ஆக இருந்தது. இது அடுத்தக்கட்ட உயர்வுக்கு கதவைத் திறந்துவிட்டது.

நீண்ட பாலிங்கர் பான்ட் பங்கின் விலை மேலும் ஏற்றம் காணும் என்பதைக் குறிப்பிடுவதாக உள்ளது. மேலும், மொமென்டம் இண்டிக்கேட்டர் பங்கு விலையின் ஏற்றத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.500-க்கு கீழே வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை ரூ.625-க்கு உயரக்கூடும்.

பிர்லா கார்ப்பரேஷன் (BIRLACORPN)

தற்போதைய விலை ரூ. 652.25

பெரும்பாலான சிமென்ட் நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் இருக்கக்கூடிய நிலையில், பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனப் பங்கின் விலை ஏற்றம் காண ஆரம்பித்தி ருக்கிறது.

கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக வந்ததையடுத்து பங்கின் விலை ஏற்றம்காண ஆரம்பித்தி ருக்கிறது.

வரும் வாரங்களில் இந்தப் பங்கின் விலை இன்னும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். இன்னும் இரண்டு மாதங்களில் இந்தப் பங்கின் விலை ரூ.800-க்கு உயரக்கூடும்.

தொகுப்பு: சி.சரவணன்

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.