தமிழகத்தின் பல நகரங்களில் மழை பெய்கிறது. ஆனால், சென்னையில் ஒரு சொட்டு தூறல்கூட இல்லையே’’ என்று முணுமுணுத்தபடியே நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவருக்கு நாம் வாங்கி வைத்திருந்த சாத்துக்குடி ஜூஸைக் கொடுக்க, வாங்கிப் பருக ஆரம்பித்தார். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

மைண்ட்ட்ரீ பங்குகளை எல் அண்டு டி நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்த்தீர்களா?

“முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்டு டி, கடந்த வியாழக்கிழமை, நடுத்தர அளவு சாஃப்ட்வேர் நிறுவனமான மைண்ட்ட்ரீயின் 25,000 பங்குகளை வாங்கியிருக்கிறது. எல் அண்டு டி ஏற்கெனவே வாங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகளுடன் இதையும் சேர்த்தால், மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் 28.9% பங்குகள் எல் அண்டு டி வசம் வந்துவிட்டன’’

டாடா சன்ஸ், எல்.ஐ.சி-யிடமிருந்து ரூ.3,000 கோடி மதிப்புள்ள என்.சி.டி-களைத் திரும்ப வாங்கியுள்ளதே?

“டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.3,000 கோடி மதிப்புள்ள என்.சி.டி-களை எல்.ஐ.சி நிறுவனத்திடமிருந்து திரும்ப வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரலில், சந்தை மதிப்பு அதன் விலையைவிட கூடுதல் விலைக்கு எல்.ஐ.சி நிறுவனத்திடமிருந்து என்.சி.டி கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனம், பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக அவசரமாக மாற்றப்பட்டதற்கு எல்.ஐ.சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால்தான், என்.சி.டி கடன் பத்திரங்களை அதிக விலைக்குத் திரும்பப் பெறும் முடிவுக்கு டாடா சன்ஸ் நிறுவனம் வந்துள்ளதாகத் தெரிகிறது. கடன் பத்திரங்களைத் தங்கள்வசமே வைத்திருக்க, ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பின் அனுமதியை எல்.ஐ.சி நிறுவனம் பெற்றாகவேண்டும். பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் பாதுகாப்பானவையல்ல எனக் கூறி, அதற்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு அனுமதிக்கவில்லை. எனவே, டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களை எல்.ஐ.சி நிறுவனம் மீண்டும் அதன்வசமே திருப்பி அளித்துள்ளது.’’

ஜி.வி.கே நிறுவனத்துக்கு கோல்டுமேன் சாக்ஸ் ரூ.1,300 கோடி வழங்கியதன் பின்னணி என்ன?

“கோல்டுமேன் சாக்ஸ் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு, ரூ.1,300 கோடியை, ஜி.வி.கே விமான நிலைய வளர்ச்சி நிறுவனத்தின் கடன்களைத் திருப்பிச் செலுத்த உதவுவதற்காக முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் ஜி.வி.கே குழுமத்தின் பொறுப்பில் இருக்கும் முக்கிய நிறுவனமான மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (MIAL) நிறுவனத்தை, அதானி குழுமம் கைப்பற்றுவதைத் தடுக்கக்கூடும் எனக் கூறப் படுகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட முதலீட்டு வங்கி, மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனத்தின் என்.சி.டி-களில் முதலீடு செய்துள்ளது. அந்த நிறுவனத்தில் 50.5% பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இவற்றில் சில முதலீடுகள், யெஸ் பேங்க் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்களைத் திருப்பித் தர பயன்படுத்தப் படும்.

மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இந்த வங்கிகளில்தான் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. ஜி.வி.கே நிறுவனத்தினர், ஆஸ்திரேலியத் திட்டப்பணி மற்றும் பெங்களூரு விமான நிலைய நிறுவனத்துக்கு நிதியுதவி செய்வதற்காக வங்கிக் கடன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.’’

டாக்டர் ரெட்டீஸ் பங்கு விலை இறக்கம் கண்டதன் காரணம் என்ன?

“டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 11% இறங்கியது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் அதன் பங்குகளை மொத்தமாக விற்றது காரணங்களாக அமைந்தன. ஒரு நிமிடத்திற்குள் 1.96 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பங்கு விலை திடீர் வீழ்ச்சியைச் சந்தித்தது. பிறகு, விரைவாக இறக்கத்திலிருந்து மீண்டு, வர்த்தக இறுதியில் 2.25% குறைந்து, 2,657.80 ரூபாயில் நிலைபெற்றது. இந்த நிறுவனத்தின் பங்கு, ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 15-ல் 23% வர்த்தக நாளின் இடையில் சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது.”

தனிநபர்கள் 14 பேருக்கு செபி அமைப்பு அபராதம் விதித்திருப்பது ஏன்?

“குஷால் டிரேட்லிங்க் நிறுவனத்தின் பங்குகளில் மோசடியான வர்த்தகம் செய்ததாக 14 தனிநபர்கள் மீது குற்றம் சுமத்திய செபி, அவர்களுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை குஷால் டிரேட்லிங்க் நிறுவனத்தில் நடைபெற்ற பங்கு பரிவர்த்தனைகளை செபி ஆய்வு செய்தது. அதன் முடிவில் 14 பேர் முறைகேடான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அந்த 14 பேரும் அவர்களுக்குள் ளாகவே பங்குகளை விற்று, வாங்கி செயற்கையாக பங்கு விலையை அதிகரிக்கச்செய்து மோசடியில் ஈடுபட்டதை செபி கண்டறிந்தது. அவர்களுக்கு, மோசடி மற்றும் தவறான வர்த்தக நடைமுறைகளைத் தடைசெய்யும் விதிமுறைகளின்படி, தலா 3 லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் மொத்தம் 42 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

மேலும், மூன்று தனித்தனி உத்தரவுகளின்படி, மிட்டல் பிக்மென்ட்ஸ் பிரைவேட், எம்.எம்.ஜி ஸ்டீல்ஸ் பிரைவேட் மற்றும் மனோஜ் கோயல் ஆகிய மூன்று நிறுவனங்கள், ஆப்ஷன்ஸ் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்தன. அதற்காக, தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது, செபி.”

ஷ்யாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஐ.பி.ஓ வருகிறதே?

“ஷ்யாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ) மூலம் ரூ.500 கோடி திரட்ட முடிவெடுத்துள்ளது. அதற்காக செபியின் ஒப்புதலைப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் மொத்தம் 66.70 லட்சம் பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. இந்தப் பங்கு விற்பனையின் மூலம் 500 கோடி ரூபாயைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் மற்றும் இதன் துணை நிறுவனமான ஷ்யாம் ஸ்டீல் மேனுஃபேக்சரிங் ஆகிய இரண்டுக்குமான கடன்கள் மற்றும் பொதுவான நிறுவனத் தேவைகளுக்காக இந்த ஐ.பி.ஓ வெளியிடப்படவுள்ளது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக்கொண்ட ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ், ஒருங்கிணைந்த டி.எம்.டி ரீபார் எஃகு தயாரிப்பு ஆலைகளைக்கொண்ட நிறுவனம். இதன் பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் படவுள்ளன.”

சிம்பிளெக்ஸ் இன்ஃப்ரா நிறுவனப் பங்கு வெள்ளிக்கிழமையன்று 18% குறைந்தது எதனால்?

‘‘இந்த நிறுவனத்தின் கடன் அதிகரித்து வருவதையடுத்து, இதன் தரக்குறியீட்டை ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட்ஸ் குறைத்தது. இதனால், சிம்பிளெக்ஸ் இன்ஃப்ரா நிறுவனப் பங்கின் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இடையே 18% குறைந்தது.

மதியம் 2.30 மணியளவில் இந்த இறக்கமானது, 5% ஆகக் குறைந்தது. பங்கின் விலை வர்த்தக முடிவில் 3.22% இறங்கி ரூ.139.95-ல் நிலைபெற்றது. 2018-19-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சிம்பிளெக்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் மொத்தக் கடன் 115 கோடி அதிகரித்து, ரூ.3,651 கோடியாக இருக்கிறது. இது இந்த நிறுவனத்தின் இலக்கான ரூ.3,400 கோடியைவிட அதிகமாக இருக்கவே, பங்கு விலை இறக்கம் கண்டிருக்கிறது.’’

ஆர்.பி.ஐ வட்டியைக் குறைத்து அறிவித்தும் வியாழக்கிழமை சந்தை இறங்க என்ன காரணம்?

“தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆர்.பி.ஐ வட்டியைக் குறைத்திருக்கிறது. அதேநேரத்தில், லிக்விட்டி பிரச்னைக்கு ஆர்.பி.ஐ தீர்வுகாண வில்லை எனப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் எண்ணியதால், சந்தை இறக்கம்கண்டது. மேலும், ஜி.டி.பி வளர்ச்சி குறைவு, பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என ஆர்.பி.ஐ கணித்தது போன்றவை சந்தை இறக்கத்துக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.”

சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும் இந்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்?

“மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருந் தாலும், தற்போதைய நிலையில் உள்நாட்டு பிரச்னைகளான ஜி.டி.பி வளர்ச்சி, வேலை வாய்ப்பின்மை, பணவீக்க விகிதம் போன்றவையும், சர்வதேசப் பிரச்னைகளாக கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் போன்றவையும் இந்தியப் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள் பங்குச் சந்தையின் பெரிய இண்டெக்ஸ் குறியீடுகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதேசமயம், தனிப்பட்ட நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சி மற்றும் நிகர லாபம் அதிகரிப்பு போன்றவற்றை அந்த நிறுவனப் பங்குகளின் விலையில் பிரதிபலிக்கும். அந்த வகையில், நல்ல தரமான நிறுவனப் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கி வரலாம் என்கிறார்கள் முன்னணி பகுப்பாய்வாளர்கள்.

அதேநேரத்தில், அஸெட் அலோகேஷன்படி ஒருவரின் முதலீடு அமைவது லாபகரமாக இருக்கும் என்கிறார்கள். ஒருவரின் முதலீடு பங்குச் சந்தை சார்ந்தது, ரியல் எஸ்டேட், தங்கம், ஃபிக்ஸட் இன்கம் திட்டங்கள் எனக் கலந்திருந்தால், எந்தக் காலகட்டத்திலும் இழப்பைச் சந்திக்க வாய்ப்பிருக்காது. நானும் இந்த ஃபார்முலாவைப் பின்பற்றி வருகிறேன் என்றவர், ‘‘அடுத்த வாரம், புதுப்பொலிவுடன் கூடிய புதிய நாணயம் விகடனைத் தயாரிக்கப் போகிறீரா? புதிய நாணயம் விகடனைப் படிக்க நான் மட்டுமல்ல, உலகம் முழுக்க வாசகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஷேர்லக்