நிறுவனங்களை விட்டு வெளியேறும் ஆடிட்டர்கள்!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் கணக்கினை ஆடிட்டிங் செய்யும் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது பிரைஸ் வாட்டர் கூப்பர் நிறுவனம். ஆடிட்டிங் நிறுவனங்கள் இப்படிச் செய்வது சமீபகாலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திலேயே 14 நிறுவனங் களிலிருந்து ஆடிட்டிங் நிறுவனங் கள் விலகியிருக்கின்றன.

#ஆடிட்டர்ஸ் அலாரம் அடிக்கிறாங்க!

41% அதிகரித்த இன்ஷூரன்ஸ் பிரீமியம்!

இன்ஷூரன்ஸ் பிசினஸ் நம் நாட்டில் வேகமான வளர்ச்சி கண்டுவருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் புதிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள்மூலம் பெற்ற இன்ஷூரன்ஸ் பிரிமீயமானது 41.1% அதிகரித்து, ரூ.28,395 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு மே மாதம் ரூ.20,118-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்களிப்பு 66.08 சதவிகிதமாக இருக்கிறது. 2018 மே மாத இறுதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 71.71 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#காப்பீடு நம் உரிமை!

நிரவ் மோடிக்காகக் காத்திருக்கும் ஆர்தர் ஜெயில்!

லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடி, தனக்கு பெயில் வேண்டும் என்று மூன்றாவது முறையாக மனு செய்தும் அதைத் தள்ளுபடி செய்திருக்கிறது லண்டன் நீதிமன்றனம். இந்த நிலையில், மும்பையில் உள்ள ஆர்தர் ஜெயிலில் முகாம் எண் 12-ல் நிரவ் மோடிக்காக ஒரு செல் தனியாக ஒதுக்கப்பட்டு, அவருடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

#புடிச்சு நம்ம ஜெயில்ல போடுங்க சார்!

ரகுராம் ராஜன் மீண்டும் கவர்னர்?

பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கு மிகக் கடுமையான போட்டியைத் தந்துவருகிறார் ரகுராம் ராஜன். பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைவராக மார்க் கார்னி கடந்த 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு பலரின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்தப் பட்டியலில் இங்கிலாந்து நாட்டின் பிரஜை அல்லாத வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களில் முதலிடத்தில் இருக்கிறது ரகுராம் ராஜனின் பெயர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து ரகுராம் ராஜன் சொன்ன கருத்துகளே அவரை கவர்னர் பதவிக்குப் பரிசீலனை செய்ய வைத்திருக்கிறதாம்! # ராஜன் ராக்ஸ்!

அரசாங்கங்களே, ஒன்று சேர்ந்து பாடுபடுங்கள்!

‘‘இந்தியாவில் பிசினஸ் செய்வதற்கான சூழ்நிலை இன்னும் சிறப்பாக இருக்கவேண்டுமெனில், மத்திய மாநில அரசாங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார் ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா. ‘‘பிசினஸ் செய்வதற்கான சூழ்நிலையை உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் தன்னாலான நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. இனி மாநில அரசாங்கங்களும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

#பிர்லா சொல்றதுலயும் நியாயம் இருக்குப்பா!

அமைதிக் குறியீட்டில் சறுக்கிய இந்தியா!

சர்வதேச அமைதிக் குறியீட்டில் (International Peace index) ஐந்து இடங்களுக்கு சறுக்கியிருக்கிறது நம் இந்தியா. கடந்த ஆண்டு 136-வது இடத்தில் இருந்த நம் நாடு, தற்போது 141-வது இடத்தில் இருக்கிறது.

இந்தப் பட்டியலில் கடந்த 2008-ம் ஆண்டுமுதல் முதலிடத்தைத் தொடர்ந்து பெற்றுவருகிறது ஐஸ்லாந்து. நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் நாடுகள் இந்தப் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன!

#மோடிஜி, அமைதி முக்கியம்ஜி!

குறைந்துவரும் சர்க்கரை உற்பத்தி!

கடந்த மூன்று ஆண்டுகளாக போதுமான மழை இல்லாததால், நம் நாட்டில் சர்க்கரை உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 29 மில்லியன் டன் அளவுக்கு சர்க்கரை உற்பத்தியானது. ஆனால், இந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் டன் (10 லட்சம் டன்) அளவுக்கு சர்க்கரை உற்பத்தி குறையும் என்று கணிக்கடப்பட்டுள்ளது. இந்தியா விலேயே அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்ட்ராவில் மட்டும் சர்க்கரை உற்பத்தி 40% குறைந்திருக்கிறதாம்.

#அப்ப சர்க்கரை விலை ஏறப் போகுதா?!

அதிகரிக்கும் பதஞ்சலியின் வளர்ச்சி!

நான்கு ஆண்டுகளுக்குமுன் பதஞ்சலி நிறுவனத்தின் படுவேகமான வளர்ச்சியைப் பார்த்தபலரும் 2018-ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தின் விற்பனை ரூ.20,000 கோடியைத் தாண்டிவிடும் என்றார்கள். ஆனால், 2018 மார்ச் நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் விற்பனை ரூ.8,100 கோடி மட்டுமே. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி வேகத்தை மீண்டும் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறாராம் பாபா ராம்தேவ். #பிசினஸில் ஏற்ற இறக்கம் சகஜமப்பா!