நாணயம் விகடன் சார்பாக, பங்குச் சந்தை ஃபண்ட மென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில் கல்லூரி மாண வர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஓய்வுபெற்ற அலுவலர்கள் எனப் பல பிரிவினர் கலந்துகொண்டனர்.

இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை எடுத்த தி.இரா.அருள்ராஜன், நாம் எந்தெந்த வழிகளில் முதலீடு செய்கிறோம், அவற்றிலிருந்து எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கிறது, பங்குச் சந்தை முதலீடு அவற்றிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை விவரித்தார்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் செயல்பாட்டை அளவீடு செய்யும் நுட்பங்களை முதல்நாள் பயிற்சி வகுப்பில் கற்றுக்கொடுத்தார் அருள்ராஜன். இரண்டாம் நாளன்று, பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களிடம் ஆளுக்கொரு நிறுவனத்தைத் தந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை விவரித்து, அதில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று சுயமாக முடிவெடுக்கும் அளவுக்குப் பயிற்சி தந்தார்.

பலவிதமான ரேஷியோக்கள், டாப் டவுன் அப்ரோச் மற்றும் பாட்டம் அப் அப்ரோச் உள்ளிட்ட டெக்னிக்கலான விஷயங்களை எளிதில் புரியும்படி விவரித்தார். பல நுட்பங்களைத் தெரிந்துகொண்டதால், இனி தைரியமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வோம் என்றபடி வீட்டுக்குப் புறப்பட்டனர் பங்கேற்பாளர்கள்.

-தெ.சு.கவுதமன், படம் : தி.விஜய்