நிற்பதற்குக்கூட நேரமில்லாமல் நம் வாழ்க்கை ஓட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நமக்காகவும், நம் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் பணி, தொழில், வியாபாரம் என ஏதோ ஒன்றை இறுகப் பற்றிக்கொண்டு கடுமையாக உழைக்கிறோம். அப்படி உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று தெரியாமல் சில நேரங்களில் தவறு செய்துவிடுகிறோம். அப்படித் தவறு ஏதும் நிகழ்ந்துவிடாமல், சரியான முறையில் முதலீடு செய்து, அதை இரட்டிப்பாக்கும் 20 விதிமுறைகள் இருக்கின்றன. அவை...

1. 50:20:30

மாதச் சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்யலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்பது நமக்குத் தெரிவதில்லை. மனம்போன போக்கில் செலவு செய்யாமலிருக்க, 50:20:30 என்ற விதிமுறை நமக்கு உதவும். அதாவது, நாம் வாங்கும் சம்பளத்தில் 50% வீட்டுச் செலவுகளுக்கு என வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகைச் சாமான்கள் போன்றவை. 20% பணத்தை எதிர்காலச் சேமிப்புக்காக அல்லது முதலீட்டுக்காக ஒதுக்கிவைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி., கோல்டு இ.டி.எஃப் போன்ற திட்டங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த 70% தொகை போக மீதமிருக்கும் 30 சதவிகிதத்தை அன்றாடப் போக்குவரத்துச் செலவு, உணவு, உடை மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளுக்காகப் பயன்படுத்தலாம்.

2. இன்ஷூரன்ஸ் என்ற ஆபத்பாந்தவன்!

குடும்பத்துக்காகச் சம்பாதிக்கும் நபர் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் வரை குடும்பத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் அவர் இல்லாமல் போகும்போது, அந்தக் குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பது இன்ஷூரன்ஸ். வீடு, கார் எனப் பலவற்றையும் வாங்குபவர்கள் ஆபத்பாந்தவனாக இருக்கும் இன்ஷூரன்ஸை எடுக்காமல் போவதால், குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள். இதைத் தவிர்க்க, ஒருவர் சம்பாதிக்கும் ஆண்டு வருமானத்தைப்போல 35 மடங்கு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். அதாவது ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்றால், அவருக்குத் தேவைப்படும் காப்பீட்டுத் தொகை = 10,00,000 X 35 = ரூ.3,50,00,000.

3. ஓய்வுக்காலத்துக்கு உதவும் 20 மடங்கு

நம்மில் பலர், குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு கடமைகளை நிறைவேற்றிவிட்டு, 40 வயதுக்குப் பிறகுதான் ஓய்வுக்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குகிறோம். ஆனால், ஓய்வுக்காலத்துக்காக எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதே பலருக்குத் தெரிவதில்லை. ஓய்வுக்காலத்தில் யாருடைய தயவுமில்லாமல் நிதிச் சுதந்திரத்துடன் நாம் வாழவேண்டுமென்றால், இப்போதைய உங்கள் ஆண்டு வருமானத்தைப்போல, 20 மடங்கு தொகை கையில் இருக்க வேண்டும். ஓய்வுக்காலத்துக்கு இந்தப் பெரிய தொகை நமக்கு வேண்டுமென்றால், இளமையிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது.

4. இ.எம்.ஐ 40 சதவிகிதத்துக்குள்...

நம் வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காகச் சொந்தமாக வீடு, கார், ஏ.சி., ஃப்ரிட்ஜ் எனப் பலவற்றையும் இ.எம்.ஐ மூலம் வாங்குகிறோம். இவற்றுக்காக இ.எம்.ஐ செலுத்தும் தொகை 30-40 சதவிகிதத்துக்குள் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு வழி. அதற்குமேல் செல்லும்போது, அன்றாடச் செலவுகளுக்குப் பணமில்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். இ.எம்.ஐ தொகையை திரும்பச் செலுத்தும்போது அதிக வட்டியுள்ள கடன்களை முதலில் செலுத்திவிட வேண்டும்.

5. 20/4/10 ஃபார்முலா

`சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும்’ என்பது இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் ஆசை. வாங்குவதில் தவறில்லை. ஆனால், அதை வாங்குவதற்கு முன்னர் அதற்காக வாங்கும் கடனை அடைப்பதற்கு நம்மிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும். அந்தத் திட்டத்துக்கான ஃபார்முலாதான் 20/4/10. இதில் 20 என்பது, கார் வாங்க நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணம். அதைக் கையில் வைத்துக்கொண்டுதான் கார் வாங்கும் வேலையில் இறங்க வேண்டும். 4 என்பது கடனுக்கான இ.எம்.ஐ. கடன் நான்கு வருடங்களுக்குள் செலுத்தி முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ, காருக்கான பெட்ரோல் செலவு எல்லாம் சேர்த்து உங்கள் மாத வருமானத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த விதிமுறைக்குள் உங்கள் கார் கடன் அடங்கியிருக்க வேண்டியது அவசியம்.

6. ரிஸ்க்கான முதலீட்டில் எவ்வளவு போடலாம்?

பங்குச் சந்தையில் எந்த வயதில், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது முக்கியமான கேள்வி. இதற்கான ஃபார்முலா, 100-ல் உங்கள் வயதைக் கழித்துவரும் சதவிகிதத் தொகைதான். உதாரணமாக, உங்கள் வயது 35 எனில், 100-ல் 35-ஐ கழித்தால், 65% தொகையை நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இது பொதுவான விதிமுறையே. அவரவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப கொஞ்சம் கூடுதலாக அல்லது குறைவாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

7. ஓய்வூதியத் தொகையில் 4%

ஓய்வுக்காலத்துக்கென நீங்கள் சேமித்து வைத்த அல்லது முதலீடு செய்த நிதித் தொகுப்பில் அதிகபட்சம் 4 சதவிகிதத்தை மட்டுமே ஓராண்டில் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், மிச்சமிருக்கும் காலத்துக்குத் தேவையான பணம் உங்கள் கையில் இருக்காது.

8. வீட்டுக் கடனுக்கு 20/5

வீட்டுக் கடன் மூலம் எந்த அளவுக்குக் கடன் பெறலாம் என்பதற்கான தெளிவான விதிமுறைதான் 20/5. இதில் 20 என்பது, நீங்கள் வாங்க விரும்பும் வீட்டுக்குச் செலுத்த வேண்டிய தொகை. 5 என்பது, நீங்கள் செலுத்தும் மொத்த இ.எம்.ஐ தொகையானது உங்கள் ஆண்டு வருமானத்தில் 5 மடங்குக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது. உதாரணமாக, உங்கள் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம்; ஐந்து ஆண்டு வருமானம் ரூ.75 லட்சம்; வீட்டின் மதிப்பு ரூ.80 லட்சம்; நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணம் 20%. 80 லட்சத்தில் 20% என்பது ரூ.16 லட்சம். இதுதான் நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணம். உங்களுக்குத் தேவையான கடன் ரூ.80 லட்சத்தில் 80% என்கிறபோது உங்களுக்குத் தேவைப்படும் தொகை ரூ.64 லட்சம். நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் உங்களின் ஐந்து வருட வருமானத்தைவிட குறைவாக இருக்க வேண்டும்.

9. முதலீட்டை இரட்டிப்பாக்கும் 72

நீங்கள் முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பது முக்கியமான விஷயம். அதாவது, நமது முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டியின் மதிப்பால் 72-ஐ வகுக்க, நமது பணம் எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் ஆண்டுக்கு 8% வட்டி பெறுகிறீர்கள் என வைத்துக்கொண்டால், உங்கள் பணம் (72/8=9) 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

10. மும்மடங்காக்க 114

நீங்கள் முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்குக் கிடைக்கும் வட்டியின் மதிப்பால் 114-ஐ வகுக்க வேண்டும். அப்படியானால் உங்கள் பணம் (114/8=14) 14 வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் மூன்று மடங்காகும்.

மாதச் சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்யலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்பது நமக்குத் தெரிவதில்லை.

11. பணத்தின் மதிப்பறிய 70

இன்று நாம் வாங்கும் ஒரு பொருளின் மதிப்பு ஒரு வருடம் கழித்து அதே விலையில் இருப்பதில்லை. பொருள்களின் விலை உயர்வதால், பணத்தின் மதிப்பு குறைகிறது. 70-ஐ தற்போதைய பணவீக்க விகிதத்தால் வகுக்க உங்களுக்குக் கிடைக்கும் மதிப்பானது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பணத்தின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதைக் காட்டும். உதாரணமாக, தற்போதைய பணவீக்க மதிப்பு 5.5% என வைத்துக்கொண்டால், நம்மிடமிருக்கும் பணத்தின் மதிப்பு (70/5.5=12.7) 12.7 ஆண்டுகளில் பாதியாகக் குறையும். பணத்தின் மதிப்பு குறைவதை ஏன் கணக்கிட வேண்டும்? நம்மிடம் இப்போதிருக்கும் பணத்தின் மதிப்பு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவாக இருக்கும், அதற்கேற்ப நம் சொத்தின் மதிப்பை உயர்த்துவது எப்படி என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

12. நெட்வொர்த் எவ்வளவு?

ஒருவரின் நெட்வொர்த் எத்தனை வயதில் எவ்வளவு இருக்க வேண்டும்? உங்கள் வயது மற்றும் ஆண்டு வருமானத்தைப் பெருக்கும் தொகையில் குறைந்தபட்சம் 10-ல் ஒரு பகுதியாவது இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வயது 30, உங்கள் ஆண்டு வருமானம் 10 லட்சம ரூபாய் என்று வைத்துக்கொண்டால், உங்களின் நெட்வொர்த் தற்போது 30X10/10 = 30 லட்சமாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் நெட்வொர்த்தைக் கணக்கிடும்போது அதில் உங்களுடைய வீடு மற்றும் பரம்பரைச் சொத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

13. போர்ட்ஃபோலியோ மறுசீரமைப்பு 5/25

நமது போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பு செய்வதற்கு இந்த 5/25 முறை உதவுகிறது. உதாரணமாக, நம்மிடமிருக்கும் 10 லட்ச ரூபாயில் 70% பங்குச் சந்தையிலும், 10% தங்கத்திலும், 20% கடன் சந்தையிலும் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அஸெட் அலொகேஷனில் 5% வரை மாற்றங்கள் ஏற்படும்போது நீங்கள் போர்ட்ஃபோலியோ மறுசீரமைப்பு செய்வீர்கள். அப்படிச் செய்யும்போது, ஈக்விட்டி முதலீடானது 70-லிருந்து 75% வரை அதிகரிக்கும்போது நாம் போர்ட்ஃபோலியோ மறுசீரமைப்பு செய்து, 5% அதிகரிக்க வேண்டும். இந்த 5% என்பது 70 சதவிகிதத்தில் 3.5 சதவிகிதம்தான். ஆனால், தங்கம் 10 சதவிகிதத்திலிருந்து 15% வரை உயரும்போது, அதில் அதிகரிக்கும் 5% என்பது 10 சதவிகிதத்தில் பாதியாகும். அதாவது, தங்க முதலீட்டில் மட்டும் 50% வரை மாற்றம் ஏற்படுகிறது. எனவே, நீங்கள் போர்ட்ஃபோலியோ மறுசீரமைப்பு செய்யும்போது 5% மாற்றம் ஏற்படும் வரை காத்திருக்காமல், சிறிய முதலீடுகளில் 25% வரை மாற்றம் ஏற்படும்போதே மறுசீரமைப்பு செய்வது நல்லது.

14. அவசரகாலச் சேமிப்பு

அவசரகாலத்தில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்கக் கவலைப்படுபவர்கள், தங்கள் மாதச் செலவு மற்றும் இ.எம்.ஐ சேர்த்து வரும் தொகையைப்போல ஆறு மடங்கு தொகையை வைத்திருக்க வேண்டும். இதை வைத்திருந்தால், கடன் வாங்காமலேயே அவசரச் செலவுகளைச் சமாளிக்கலாம்.

15. போனஸ் 10:90

நம் போனஸில் 10 சதவிகிதத்தை மட்டுமே நமக்காகச் செலவழிக்கலாம். மீதமிருக்கும் 90 சதவிகிதத்தை, வட்டி அதிகமாக உள்ள கடன்களை அடைக்க அல்லது எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்யலாம்.

ஒருவர் சேமித்து வைத்திருக்கும் ஓய்வூதியப் பணத்தில் 70 சதவிகிதத்தை நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

16. 60:40 அஸெட்

முதலீட்டை எளிதில் பணமாக்கக் கூடிய (லிக்விட்) சொத்துகளில் 60 சதவிகிதத்தையும், எளிதில் பணமாக்க முடியாத (இல்லிக்விட்) சொத்துகளில் 40 சதவிகிதத்தையும் முதலீடு செய்ய வேண்டும்.

17. கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கான விதி 30

கிரெடிட் கார்டு லிமிட் எவ்வளவு இருந்தாலும், அதில் 30 சதவிகிதத்தை மட்டும் பயன்படுத்துவது நல்லது. அது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்லநிலையில் வைத்திருக்கும்.

18. கிரெடிட் கார்டுகள் இரண்டு

சிலர் நான்கைந்து கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பார்கள். அதனால் பல பாதிப்புகள் ஏற்படும். பல கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால் ஒவ்வொன்றுக்கும் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் கிரெடிட் கார்டு சேவைக்காகத் தனியாகப் பணம் செலுத்த வேண்டும். இவை நம் தற்போதைய கடனை அதிகரிப்பதுடன், கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். எனவே, அதிகபட்சம் இரண்டு கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது நல்லது.

19. சொத்து விகிதத்துக்கான கடன் 0-50

ஒருவரின் குறைந்தபட்ச சொத்து விகிதம் அதிகபட்சமாக 50% வரை இருக்கலாம். அதாவது, ஒருவரின் அதிகபட்ச கடன் அளவு, அவரின் மொத்தச் சொத்துகளில் 50 சதவிகிதத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது. ஓய்வுக் காலத்தை நெருங்கும் போது அவரின் சொத்து மதிப்பு அதிகமாகவும், கடன்களின் மதிப்பு ஜீரோவாகவும் இருக்க வேண்டும்.

20. ஓய்வூதியத்தில் முதலீடு 70:30

ஒருவர் சேமித்து வைத்திருக்கும் ஓய்வூதியப் பணத்தில் 70 சதவிகிதத்தை நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 30 சதவிகிதத்தை அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் வளர்ச்சிக்காக முதலீடு செய்யலாம். இந்த 2020-ம் ஆண்டில் இந்த 20 விதிமுறைகளைப் பின்பற்றிப் பணத்தைப் பெருக்குங்கள்!