Published:Updated:

Day Trading: `ராபின் ஹூட் இன்வெஸ்டர்ஸ்' தவிர்க்கத்தக்க 3 தவறுகள்!

பங்கு சந்தை
பங்கு சந்தை

முதலீட்டுக்காகவோ, டே டிரேடிங் செய்யவோ காலடி எடுத்து வைக்கும் புதியவர்கள் அதில் உள்ள ரிஸ்க்குகளைப் பற்றிய அறிவும், சமாளிக்கும் திறமையும் பெற்றிருத்தல் மிகவும் அவசியம்.

சமீபத்தில் பெற்றோர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார். காரணம், அவர்களின் மகன் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், அவர்கள் `இல்லை' என்று சொன்னதால், தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் சொல்ல பதறத்தான் செய்தேன்.

இவையெல்லாம், புதிதாக பங்குச் சந்தைக்குள் வருபவர்கள் அதுபற்றி சரியான தெளிவும், புரிந்துகொள்ளலும் இல்லாமல் தின வர்த்தகத்தில் (Day Trading) ஈடுபட முயற்சி செய்வதையே காட்டுகிறது.

பங்கு சந்தை
பங்கு சந்தை

கொரோனா ஊரடங்கில் நடந்த பல விநோதங்களில் ஒன்று, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுத்தது. முன்அனுபவம் எதுவும் இல்லாமல் தின வர்த்தகத்தில் ஈடுபடும் இந்த வகை நபர்களை `ராபின் ஹூட் இன்வெஸ்டர்ஸ்' என்று குறிப்பிடுகிறார்கள்.

லாக்டெளன் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பங்கு முதலீடுகளை நோக்கி மக்கள் வந்திருந்தாலும் அது நல்வரவுதான். என்றாலும், பங்குச் சந்தை என்பது முட்டி, மிதித்து, தூக்கி வீசும் ஜல்லிக்கட்டுக் காளை; அதன் போக்கை நிர்ணயிக்க யாராலும் இயலாது. அதில் முங்கி முழுகி முத்தெடுத்தவர்களைக்கூட திகைக்க வைக்கும் காட்டாற்று வெள்ளம்.

அப்படிப்பட்ட உலகில், முதலீட்டுக்காகவோ, டே டிரேடிங் செய்யவோ காலடி எடுத்து வைக்கும் புதியவர்கள் அதில் உள்ள ரிஸ்க்குகளைப் பற்றிய அறிவும், சமாளிக்கும் திறமையும் பெற்றிருத்தல் மிகவும் அவசியம். முக்கியமாக, தவறுகளைத் தவிர்ப்பது அவசியத்திலும் அவசியம்.

1. தினசரிச் செலவுகளுக்காக உள்ள பணத்தைப் போட்டு பங்குச் சந்தையில் டிரேடிங் செய்யவே கூடாது.

2. கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து நாளை வட்டியுடன் கட்டி விடலாம் என்ற எண்ணம் கூடவே கூடாது. என்ன வகையான உத்திகளைப் பின்பற்றினாலும், பங்குச் சந்தை தின வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, சொந்தப் பணம் தவிர, கடன் வாங்கி டிரேட் செய்வது கூடவே கூடாது.

பங்கு சந்தை
பங்கு சந்தை

3. பங்குகள் விலை ஏறி இறங்குவதன் பின்னணி தெரியாமல், யாரோ சொல்கிறார் என்பதற்காக ஒரு பங்கை வாங்கக் கூடாது.

ஆக, பங்குச் சந்தை பற்றிய புரிந்துகொள்ளல் இல்லாமல் இதில் இறங்குவது ஆபத்து. விரிவான வழிகாட்டுதலுக்கு நாணயம் விகடன் கட்டுரையை வாசிக்க > டே டிரேடிங்... பேராசை பெருநஷ்டம்! - வழிகாட்டும் ஆலோசனைகள்..! https://bit.ly/315Mv8V

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு