Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எந்தெந்தத் தவறுகளையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். முதலீட்டாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படை அம்சங்கள்...

மீ.கண்ணன், 
நிதி ஆலோசகர், radhaconsultancy.blogspot.in
மீ.கண்ணன், நிதி ஆலோசகர், radhaconsultancy.blogspot.in

1. என்.ஏ.வி குறைந்த ஃபண்டுகள் அல்லது புதிய ஃபண்டுகள்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலானவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, `என்.ஏ.வி குறைந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும்’ என்பது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், அவற்றின் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளின் விலை உயர்வுக்கேற்ப வருமானம் கிடைக்குமே தவிர, என்.ஏ.வி குறைந்த ஃபண்டுகள் அதிக வருமானத்தையும், என்.ஏ.வி அதிகமுள்ள ஃபண்டுகள் குறைந்த வருமானத்தையும் தருவதில்லை. உதாரணமாக, அண்மையில் நிறைய நிறுவனங்கள் ஸ்மால்கேப் ஃபண்டுகளைத் தொடங்கின. புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு இரண்டு வகை அணுகுமுறைகள் இருக்கின்றன. ஒன்று, இந்தப் புதிய ஃபண்டுகளில் என்.ஏ.வி ரூ.10-ஆக இருக்கும்போது முதலீடு செய்வது; அதே நேரம், ஏற்கெனவே இயங்கிவரும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்!

இன்வெஸ்கோ ஸ்மால்கேப் ஃபண்ட் ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறது. எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துவருகிறது. எனவே, புதிதாக முதலீடு செய்பவர் இந்த எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் முதலீடு செய்திருந்தால், அதன் தொடக்க என்.ஏ.வி ரூ.49.33 தொடங்கி ரூ.53.46-ஆக இருந்திருக்கும். அதாவது, சராசரியாக 8 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைத்திருக்கும். அதே நேரம், இன்வெஸ்கோ ஸ்மால்கேப் ஃபண்ட் என்.ஏ.வி ரூ.10.07-ல் தொடங்கி, ரூ.10.53-ஆக இருக்கிறது. சராசரியாக 4% வருமானம். இதிலிருந்து ஃபண்டுகளின் வருமானம் என்.ஏ.வி-யைப் பொறுத்து அமைவதில்லை என்பதை அறியலாம்.

2. ஃபண்ட் நிர்வகிக்கும் தொகையும் லாப விகிதமும்

`மிகப்பெரிய ஃபண்ட் நிறுவனத்தில், மிக அதிகமாக நிர்வகிக்கப்படும் தொகையுள்ள திட்டத்தில் சேர்ந்தால் நல்லது’ எனப் பெரும்பாலான முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். மிக அதிகமாக நிர்வகிக்கும் தொகை இருக்கும்போது, அந்தத் தொகையை முதலீடுசெய்ய சிரமத்துக்குள்ளாகும் வாய்ப்பும் இருக்கிறது. தொகை அதிகரிக்கும்போது நிர்வகிப்பதில் சிரமங்களும் ஏற்படலாம். எனவே, எந்த வகை ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கிறோம்... அவற்றுக்கு நிர்வகிக்கப்படும் தொகை அதிகமாக இருப்பது நல்லதா, இல்லையா என்பதையெல்லாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

உதாரணமாக, அட்டவணை 1-ல் நிர்வகிக்கும் தொகை, ஸ்மால்கேப் ஃபண்டுகளின் ஒரு வருட மற்றும் மூன்று வருட வருமான விகிதங்கள் தரப்பட்டுள்ளன. நாம் ஒரு வருட வருமானத்தை வைத்துப் பார்த்தோமெனில், தொகை குறைவாக இருக்கும்போது வருமானம் அதிகமாக இருக்கிறது. தொகை அதிகரிக்க அதிகரிக்க வருமானம் குறைகிறது. மூன்று வருட வருமானத்தைப் பார்க்கும்போது, குறைந்த நிர்வகிக்கும் தொகையுள்ள முதல் இரு ஃபண்டுகள் அதிக வருமானத்தைத் தருவது கண்கூடாகத் தெரிகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்!

3. செலவு விகிதமும் லாபமும்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செலவு விகிதம் அதிகமாகும்போது வருமானம் குறையும். செலவு விகிதம் சற்று அதிகமாக இருக்கும் ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் 1 மற்றும் 3 வருடங்களில் தொடர்ந்து அதிக வருமானம் தந்திருக்கிறது. எனவே, நாம் செலவு விகிதம் குறைவாக உள்ள ஃபண்டைத் தேர்வுசெய்ய வேண்டுமா அல்லது செலவு விகிதம் சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டின் திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டுமா என்பதை யோசித்து முடிவுசெய்வது நல்லது. செலவு விகிதத்்தை ஈக்விட்டி திட்டங்களில் பார்ப்பதற்கு முன்னர் லாப விகிதம் அதிகமாக இருந்தால், நல்ல திட்டமாக இருக்கும்பட்சத்தில் அதிலேயே முதலீடு செய்யலாம். செலவு விகிதத்தை மட்டும் தனியாகப் பார்த்து, அதனடிப்படையில் ஃபண்டைத் தேர்வுசெய்வது சரியான முடிவாக இருக்காது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4. பெரிய ஃபண்ட் நிறுவனம் அதிக லாபம் தருமா?

பெரும்பாலும் `மிகப்பெரிய நிறுவனம்’ என்று நினைக்கும் நிறுவனங்களில்தான் முதலீடு செய்கிறோம். அந்த நிறுவனத் திட்டங்கள் அதிக வருமானம் தருகின்றனவா, சிறிய நிறுவனத் திட்டங்கள் அதிக வருமானம் தருகின்றனவா என்று பார்க்க வேண்டும் (பார்க்க: அட்டவணை-2). இதில் நம் எண்ணத்தில் முதலில் வரக்கூடிய மிகப்பெரிய நிறுவனத் திட்டங்கள் தொடர்ந்து இரண்டு இலக்க வருமானம் தரவில்லை. சிறிய ஃபண்ட் நிறுவன திட்டங்களான மிரே அஸெட் ஃபண்ட் தொடர்ந்து பத்து சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. அடுத்ததாக ஆக்ஸிஸ் திட்டமும் அதிக வருமானத்தைத் தந்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது இதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

5. அடிக்கடி டிவிடெண்ட் தரும் ஃபண்ட் நல்ல ஃபண்டா?

ஒரு திட்டம் அடிக்கடி பெரிய தொகை டிவிடெண்ட் தருகிறது எனில், அந்தத் திட்டம் நல்ல திட்டம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. பொதுவாக, டிவிடெண்ட் தொகைக்கும், கிடைக்கும் வருமானத்துக்கும் பெரும்பாலும் தொடர்பு இருப்பதில்லை. ஒரு திட்டம் அடிக்கடி டிவிடெண்ட் தருகிறது; அதையும் சேர்த்து அதன் ஆண்டு வருமானம் 8%. இன்னொரு திட்டம் குறைந்த டிவிடெண்ட் தருகிறது. ஆனால், அதன் ஆண்டு வருமானம் 9% என்றால், இரண்டாவதுதான் நல்ல திட்டம். டிவிடெண்ட் குறைவாக இருந்தாலும் அந்தத் திட்டத்தில் வருமானம் சற்று அதிகம். முதல் திட்டம் அவ்வளவு உகந்ததல்ல. மேலும், டிவிடெண்ட் விநியோக வரி, முதலீட்டாளர் கைக்குக் கிடைக்கும் தொகையைக் குறைத்துவிடுகிறது. எனவே, டிவிடெண்ட் கிடைப்பதைவைத்து, `திட்டம் சிறந்ததா?’ என்று முடிவு செய்வது சரியாக இருக்காது.

எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?

ஒரு திட்டத்தின் வருமானம் அந்தத் திட்டம் நடத்தப்படும்விதம், அதிலுள்ள நிறுவனப் பங்குகளின் தரம் இவற்றை வைத்தே பெரும்பாலும் அமையும். மேற்கூறிய லாபத்துக்கான காரணிகள் திட்டத்தின் லாபத்தை மேம்படுத்த பல நேரங்களில் உதவுகின்றன. எனவே, ஃபண்ட் முதலீடு செய்யும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று பார்த்து, அதன்படி செயல்படுவது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism