Published:Updated:

பெண்களுக்கு மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?

மருத்துவக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீடு

ஐந்து காரணங்கள்..!

பெண்களுக்கு மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?

ஐந்து காரணங்கள்..!

Published:Updated:
மருத்துவக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீடு

ந்தியப் பெண்களின் தற்போதைய வாழ்க்கைமுறை வேகமாக மாறிவருகிறது. இந்தச் சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்துவிடுகிறார்கள். மாறிவரும் வாழ்க்கைமுறையால் எண்ணற்ற பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

இந்தியாவில், பிரசவகால இறப்புகளில், ரத்தச்சோகை காரணமாக 20-40% பெண்கள் இறக்கிறார்கள். ‘இந்தியப் பெண்கள், தங்கள் தொழிலிலும் வாழ்க்கையிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று உழைப்பதால், உடல் ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்’ என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

பெண்களுக்கு மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?

அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 16% பேர் தாங்கள் எந்த மருத்துவப் பரிசோதனையையும் செய்வதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாதபோது மட்டும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதாக 63% பேர் கூறியிருக்கிறார்கள். 39% பெண்கள் மட்டும் மருத்துவக் காப்பீடு பாலிசியை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 53% பேர் மருத்துவக் காப்பீடு எடுப்பது குறித்து இதுவரை யோசிக்கவே இல்லை எனக் கூறியிருப்பதாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

பொதுவாக வீடு, அலுவலகம் என்ற பரபரப்பில் பெண்கள் தங்கள் உடல்நலனை மறந்துவிடுகிறார்கள். இல்லத்தரசிகள் தங்கள் கணவர் எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீடு அல்லது அவர் அலுவலகத்தில் வழங்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளின் மூலம்தான் மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர். பணிபுரியும் பெண்கள் தங்கள் நிறுவனம் அளிக்கும் குழு மருத்துவக் காப்பீட்டின் மூலம் மருத்துவச் சிகிச்சைக்கான செலவைச் சமாளிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைத்து மகப்பேற்றுச் செலவுகளையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

பெண்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக இருப்பதால், அவர்கள் தீவிர நோய்களையும், கர்ப்பகாலப் பராமரிப்பு தேவைகளையும் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. கணவர் திடீரென வேலை இழந்தாலோ, அவருக்கு எதிர்பாராத அசம்பாவிதம் ஏதாவது நேர்ந்தாலோ மனைவி தன் மருத்துவக் காப்பீட்டு வசதியை இழக்க நேரிடுகிறது. அதுபோல, ஒருவரின் மருத்துவக் காப்பீட்டைச் சார்ந்திருந்தாலும், பல பயன்களை அந்தப் பெண் முழுமையாகப் பெற முடியாது.

இந்த நிலையில் பெண்கள், தங்களுக்கென தனியாக மருத்துவக் காப்பீடு செய்து கொள்வது அவசியம். அதிலும் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கென தனியாக மருத்துவக் காப்பீடு எடுத்தே ஆக வேண்டும். அதற்கான ஐந்து காரணங்கள்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. மருத்துவச் சிகிச்சைச் செலவைச் சமாளிக்க...

முன்பெல்லாம் பெண்கள் தங்கள் நிதித் தேவைகளுக்குப் பெரிதும் குடும்பத்தினரைச் சார்ந்திருக்கும் நிலை இருந்தது. ஆனால், இன்று அவர்களின் நம்பிக்கையும் தைரியமும் சுயமாக நிதித் தேவைகளைச் சமாளிக்கும் ஆற்றலைத் தந்துள்ளது. யாருக்கு, எந்த நேரத்தில் மருத்துவச் செலவு ஏற்படும் என்று கூற முடியாது. அதிலும், வாழ்க்கைமுறை மாற்றத்தால் பெண்கள் நோய்த்தாக்குதலுக்கு அதிகம் ஆளாகும் வாய்ப்பு இன்றைக்கு நிறையவே இருக்கிறது. எனவே, திட்டமிட்டுச் செயல்படாவிட்டால் எதிர்காலத்தில் நோய் காரணமாக நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அவசியம்.

Medical insurance
Medical insurance

2. மகப்பேற்றுச் செலவுகள்

கடந்த சில ஆண்டுகளாக, மகப்பேற்றுச் செலவுகள் உயர்ந்து வருகின்றன. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட் சோதனை, மருந்துகள், மருத்துவமனைச் சிகிச்சை என மகப்பேறு காலத்திலும், குழந்தை பெற்ற பிறகும் உடல்நலப் பராமரிப்புக்கு ஏராளமாகச் செலவாகிறது. மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லை யென்றால், இந்தச் செலவுகள் சேமிப்பைப் பதம் பார்த்துவிடும்.

எனவே, அனைத்து மகப்பேற்றுச் செலவு களையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில், எதில் அதிக பயன்கள் உள்ளன என்பதைப் பார்த்து அதைத் தேர்வுசெய்ய வேண்டும்.

Medical insurance
Medical insurance

குறிப்பாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் ஆகும் செலவு, சிகிச்சைக்குப் பிறகு ஆகும் செலவு, காப்பீட்டுத் தொகை வரம்பு, காத்திருப்புக் காலம், பிரசவத்துக்கு முன்னரும் பின்னரும் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை உறுதி செய்துகொள்ள வேண்டும். அத்துடன், மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைச் செலவுகள், தடுப்பூசிக் கட்டணம், பிறக்கும் குழந்தைக்கான செலவு ஆகியவற்றுக்கான செலவுத் தொகையை வழங்கக்கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வது சிறந்தது.

3. வரி விலக்குச் சலுகை

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குச் செலுத்தும் பிரீமியத்துக்கு 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 80டி பிரிவின் கீழ் வரி விலக்குச் சலுகை வழங்கப்படுகிறது. 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 30,000 ரூபாய் வரை செலுத்தும் பிரீமியத்துக்கு வரி விலக்குச் சலுகை பெறலாம்.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

4. தீவிர நோய் பாதிப்பு

வேகமாக மாறிவரும் வாழ்க்கைமுறையால் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் பெண்களைத் தாக்குகின்றன. சிலர் பக்கவாதம், தீக் காயங்கள் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். இது போன்ற தீவிர / கடுமையான நோய்களுக்கு பெண்கள் மருத்துவக் காப்பீடு பெறும் வசதி உள்ளது. அத்தகைய காப்பீடுத் திட்டத்தைத் தேர்வு செய்தால், மருத்துவச் சிகிச்சை செலவைப் பெற முடியும். சிகிச்சை பெறும் காலத்தில் பணிக்குச் செல்ல முடியாது என்பதால் ஏற்படும் ஊதிய இழப்பை ஈடுசெய்து கொள்ளவும் மருத்துவக் காப்பீடு உதவும்.

வேகமாக மாறிவரும் வாழ்க்கைமுறையால் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் பெண்களைத் தாக்குகின்றன.

5. பாதுகாப்பு, செல்வம், ஓய்வு

நோய் பாதித்து, சிகிச்சை மேற்கொள்ளும் போது அதற்கான செலவை எந்தப் பிரச்னையும் இன்றி சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவும். அதுமட்டுமல்ல, அதை ஒரு முதலீடு என்றுகூடச் சொல்லலாம். பொதுவாக, கல்வி, குடும்பம், வீடு போன்றவற்றுக்காகத்தான் மக்கள் அதிக அளவில் பணத்தைச் செலவு செய்கிறார்கள்; முதலீடும் செய்கிறார்கள். ஆரோக்கியப் பராமரிப்புக்காக முதலீடு செய்ய முன்னுரிமை அளிப்பதில்லை. விபத்து, உடலின் ஒரு பகுதியோ முழுமையாகவோ நிரந்தரமாகச் செயலிழப்பது அல்லது மரணம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது குடும்பத்துக்குத் தேவையான நிதிப் பாதுகாப்பைப் பெற மருத்துவக் காப்பீடு உதவும். கணவர் திடீரென மரணம் அடைந்தாலோ, செயல்பட முடியாத நிலைக்கு ஆளானாலோ அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவும்.

பெண்களை மையமாகக்கொண்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் நிச்சயம் உங்கள் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும். ஓய்வு பெறப்போகும் காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்தால், நீண்டகாலத்துக்குக் குறைந்த பிரீமியத் தொகை செலுத்தலாம். இதுவும் நீங்கள் கணிசமான அளவுக்குச் செல்வம் சேர்க்க உதவும்.

- தமிழில் ஏ.கே.விஜய்தேவ்