பங்குச் சந்தையில் பல வருடங்கள் வர்த்தகமாகும் பங்குகளுக்குக் கிடைக்கும் மதிப்பைவிட, முதன்மைச் சந்தையில் புது மாப்பிள்ளைபோல வெளிவரும் பங்குகளுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம்தான். இதனால்தான் ஐ.பி.ஓ-வை ஓர் அரிய வாய்ப்பாகப் பலரும் பார்க்கிறார்கள்.

அதிலும் கோவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு, ஐ.பி.ஓ என்றாலே அடித்துப் பிடித்து ஓடிப்போய் முதலீடு செய்யும் ஒரு முதலீடாக மாறியிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹேப்பியஸ்ட் மைண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு ஐ.பி.ஓ-வில் 150 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பம் வந்துசேர்ந்தது. சில நாள்களுக்கு முன் வெளியான கெம்கான் ஐ.பி.ஓ 149 மடங்குக்கும், கேம்ஸ் ஐ.பி.ஓ 47 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பம் வந்துள்ளன.

இப்படி ஐ.பி.ஓ வரும் நிறுவனங்களின் பங்குகளில் பட்டியலிடப் பட்ட சில நாள்களிலேயே 100% லாபம் தந்துவிடுவதால், கடன் வாங்கியாவது இந்த ஐ.பி.ஓ-களில் பணத்தைப் போட்டு வருகிறார்கள் மக்கள். இது சரியான அணுகுமுறையா, ஐ.பி.ஓ-வில் பங்குகளை வேண்டி விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

காத்திருந்து லாபம் பார்ப்பதைக் காட்டிலும், முதன்மை சந்தையில் வாங்கி, இரண்டாம் நிலை சந்தையில் வெளியான முதல் நாளே லாபத்தில் விற்றுவிடலாம் என்ற வாய்ப்பும் கண்ணைக் குளிரூட்டுகிறது. ஐ.பி.ஓ முறையில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்...

1. மூலதன ஆதாய வரி (Capital Gains Tax)

ஐ.பி.ஓ-வில் வாங்கிய பங்குகளை, இரண்டாம் நிலை சந்தையின் (Secondary Market) முதல் நாள் அன்று பெருத்த லாபத்துக்கு விற்றால், வரி விதிப்பு உண்டு என்பதை மறவாதீர்கள். பொதுவாக, ஒரு பங்கை வாங்கிய நாளிலிருந்து ஒரு வருடத்துக்கும் மேலாக வைத்து விற்றால், அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி (Longterm Capital Gains Tax) உண்டு. ஒரு வருடத்துக்குக் குறைவான காலத்தில் விற்கும்போது, குறுகியகால மூலதன ஆதாய வரி (Short term Capital Gains Tax) உண்டு. இது ஐ.பி.ஓ முறையில் பங்குகளை வாங்கினாலும் பொருந்தும். (குறுகியகால மூலதன ஆதாய வரி 15% மற்றும் இதர கட்டணங்கள்). நீண்டகால மூலதன ஆதாய வரி 10% (நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை வரிவிலக்கு). அதற்கு முன்பாக பங்கு பரிவர்த்தனை வரி (STT) செலுத்தியிருப்பது அவசியம்.

உதாரணத்துக்கு, நீங்கள் ஐ.பி.ஓ-வில் வாங்கிய பங்கு ஒன்றின் விலை ரூ.300 எனக் கொள்வோம். வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 40 (1 லாட்). எனவே, உங்களுடைய மொத்த முதலீட்டுத் தொகை ரூ.12,000 (இதர கட்டணங்கள் மற்றும் வரி தனி).

நீங்கள் வாங்கிய பங்கு இரண்டாம் நிலை சந்தையில் வெளியிடப்பட்ட முதல் நாள் அன்று 600 ரூபாய்க்கு (பங்கு ஒன்றுக்கு) வர்த்தகமாகிறது என வைத்துக்கொள்வோம். அதாவது, முதலீடு செய்ததைக் காட்டிலும் 100% லாபம். இப்போது நீங்கள் வைத்திருக்கும் 40 பங்குகளை விற்றால், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபம் ரூ.12,000. இந்தத் தொகைதான் உங்களது குறுகியகால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு, அதற்குரிய வரியை நீங்கள் செலுத்த வேண்டும்.

குறுகியகால மூலதன ஆதாய வரி (STCG Tax) 15% எனும்போது, நீங்கள் லாபம் பார்த்த ரூ.12,000-க்கு 1,800 ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டும். (பரிவர்த்தனை வரி மற்றும் மற்ற தீர்வைகளை நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.) குறுகியகால மூலதன ஆதாயத்தை உங்களது ஆண்டு வருமானத்துடன் சேர்க்கும்போது, நீங்கள் வருமான வரி வரம்பில் இல்லாத நிலையில், வரி செலுத்தத் தேவை இல்லை. இந்த வரியைச் செலுத்துவது சரியா அல்லது நீண்டகாலத்தில் வைத்திருப்பதன் மூலம் இன்னும் அதிகமான லாபமும் வரிச் சலுகையும் கிடைக்குமா என்று பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

2. நிறுவனர்களின் தேவை என்ன?

பொதுவாக, பங்குச் சந்தைக்கு வரும் நிறுவனங்கள் தங்களது தொழிலுக்குத் தேவையான முதலீட்டைத் திரட்டுவதற்கு முனையும். சில நிறுவனங்கள் தங்களது கடன்களை அடைக்க, நிர்வாகச் செலவுகள் எனப் பல்வேறு காரணங்களைக் கொண்டிருக்கும். இன்னும் சில நிறுவனங்களோ தங்களிடம் உள்ள நிறுவனர்களின் பங்களிப்பைக் குறைக்க, அதாவது, பொதுச் சந்தையில் பங்குகளை விற்றுவிட்டுச் செல்லும். நீங்கள் முதலீடு செய்யப்போகும் நிறுவனம் என்ன தேவைக்காக ஐ.பி.ஓ-க்கு வந்துள்ளது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

நிறுவனர்கள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனர்களின் (Founders and Promoters) அனுபவம் என்ன, அவர்களது நிறுவனம் என்ன மாதிரியான தொழிலைச் செய்து கொண்டிருக்கிறது, வெளிநாடுகளில் கிளைகள் உள்ளனவா, இந்த நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் துணை நிறுவனமா என்பதை யெல்லாம் ஆராய வேண்டும்.

3. நிதி அறிக்கைகளைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் புதிய நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் அவ்வளவாக நம்பகமாக இருப்பதில்லை. காரணம், சந்தையில் வெகு காலமாக இருக்கும் நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில் தவறுகள், மோசடிகள் ஏற்படும் நிலையில், சந்தைக்குப் புதிதாக வரும் நிறுவனத்தின் நிதி அறிக்கை சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சந்தையில் பட்டியலிடப்பட்ட சில வருடங்களுக்கு பின்னரே, அதன் நிதி அறிக்கைகளின் உண்மைத்தன்மை வெளிப்படும்.

லாப-நஷ்ட அறிக்கை, இருப்பு நிலை அறிக்கை மற்றும் பணவரத்து அறிக்கை (Cash Flow Statement) ஆகிய தகவல்களை ஓரளவு அலசி பார்ப்பது அவசியம். இதற்காக பிரத்யேக ஐ.பி.ஓ சார்ந்த தகவல் தளங்கள் உள்ளன. இல்லையெனில், பி.எஸ்.இ (BSE India) அல்லது என்.எஸ்.இ (NSE India) இணையதளங்களில் இது போன்ற தகவல்களைப் பெறலாம். உங்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை என்றால், ஐ.பி.ஓ முறையில் பங்கு பெறாமல் இருப்பது நல்லது.

பங்குகளில் விரைவாகப் பணம் பண்ணும் அதிர்ஷ்டம் இருந்தாலும், கிடைத்த லாபத்தை ஒருவர் மறுமுதலீடு செய்தால் மட்டுமே, அவருக்கான செல்வ வளம் நிச்சயம் பெருகும்.

4. சந்தை போக்கை புரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் முதலீடு செய்யப்போகும் ஐ.பி.ஓ நிறுவனம், நல்ல நிறுவனமாக இருந்தாலும் சந்தையின் போக்கை கவனிக்க வேண்டும். சந்தையில் ஐ.பி.ஓ வரும் பங்குகள் எல்லாமே லாபம் தரும் என்று சொல்ல முடியாது. ஐ.பி.ஓ பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் உடனடியாகப் பணம் பண்ண முடியும் என்பதற்கு எந்த உத்தர வாதமும் கிடையாது. நல்ல பங்கு நிறுவனங்கள்கூட சந்தையின் போக்கு சரியில்லாதபோது வந்து, நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, சந்தையின் போக்கையும் அவசியம் கவனிக்க வேண்டும்.

5. நீண்டகால நோக்கம் அவசியம்

பங்குகளில் விரைவாகப் பணம் பண்ணும் அதிர்ஷ்டம் இருந்தாலும், கிடைத்த லாபத்தை ஒருவர் மறுமுதலீடு செய்தால் மட்டுமே, அவருக்கான செல்வ வளம் நிச்சயம் பெருகும். இல்லையெனில் கிடைத்த லாபத்தை மீண்டும் பங்குச் சந்தையில் தொலைக்க நேரிடும்.

கடந்த 2019-ம் வருடம் மட்டும் உலகளவில் 112 ஐ.பி.ஓ-க்கள் வெளிவந்துள்ளன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகான காலத்தில் இந்திய ஐ.பி.ஓ வெளியீட்டில் முதல் நாளன்று (Listing Gains) லாபம் கண்ட பங்குகள் மிகக்குறைவே. அதே வேளையில் டிமார்ட், ஐ.ஆர்.சி.டி.சி, ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட், ரோசாரி பயோடெக், ரூட் மொபைல், ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் முதல் நாளில் நல்ல வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளன. சில ஸ்மால்கேப் நிறுவனங்களும் பட்டியலிடப்பட்ட நாளன்று விலை ஏற்றம் பெற்றிருந்தாலும், அதன் விலை ஒரு வருடத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

ஐ.பி.ஓ-வில் அதிக விலையேறியுள்ள பெரும்பாலான பங்குகள் நீண்டகாலத்தில் முதலீட்டாளர்களுக்கு வருவாயைக் கொடுக்க தவறியுள்ளது. இதற்கு காரணம், நிர்வாகம் திறம்பட இல்லாதது, தொழில் போட்டி, ஆரம்ப நிலையில் அந்தப் பங்குக்கான அதிக விலையைக் கொடுத்தது எனப் பல்வேறு காரணிகள் உள்ளன. நீண்டகால நோக்கத்தைக் கொண்டு முதலீடு செய்யும்போது, பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனமும் நம்மிடம் இருக்கும். எனவே, வெறும் ஐ.பி.ஓ லாபம் மட்டுமே எனப் பார்க்காமல், நீண்டகாலத்தில் வைத்திருக்கும் பங்காகவும் நாம் அதைக் கண்டறிய வேண்டும்.

பங்குகளின் முதல் நாள் விலையேற்றத்தைப் பார்த்து பரவசம் அடையாமல், உங்களது நிதி இலக்குகளின் மீது கவனம் செலுத்துங்கள். அதைச் சார்ந்து உங்களது முதலீட்டு முடிவை எடுங்கள். மதிப்புமிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட் சொல்வதுபோல, கூட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல், சிந்தித்து முதலீடு செய்வது நன்று. உங்களுக்கு ஒரு நிறுவனத்தின் தொழில் புரிந்து, அதன் தொழில் அனுபவத்தையும் உங்களால் அறிந்துகொள்ள முடிந்தால், நீண்டகால நோக்கில் பங்கை வாங்கலாம். இதற்கு ஐ.பி.ஓ. என்று கிடையாது. எல்லா நாள்களிலும் முதலீடு செய்யலாம்!