Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்வதில் சிரமமா? - சிக்கலுக்கான தீர்வுகள்..!

எஸ்.ஐ.பி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஐ.பி

எஸ்.ஐ.பி முதலீட்டை ஒருமுறை நிறுத்திவிட்டால் பலரும் அதைத் திரும்பவும் தொடங்குவது இல்லை!

எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்வதில் சிரமமா? - சிக்கலுக்கான தீர்வுகள்..!

எஸ்.ஐ.பி முதலீட்டை ஒருமுறை நிறுத்திவிட்டால் பலரும் அதைத் திரும்பவும் தொடங்குவது இல்லை!

Published:Updated:
எஸ்.ஐ.பி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஐ.பி
ற்போதைய சூழலில் பலரின் நிதிநிலை சிக்கலில்தான் இருக்கிறது. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்தவர்கள், தற்போது முதலீட்டுத் தொகையைக் குறைத்தோ, நிறுத்தியோ வருகிறார்கள்.

சம்பளக் குறைப்பு, சம்பள உயர்வு இல்லாதது, வருங்கால வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை, வேலையில் நிரந்தரமின்மை போன்ற ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பவர்கள் வேறு வழியில்லாமல் முதலீட்டை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம்தான்.

எஸ்.ஐ.பி முதலீட்டைத்  தொடர்வதில் சிரமமா? - சிக்கலுக்கான தீர்வுகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பங்குச் சந்தை இறங்கியிருக்கும்போது, எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாதீர்கள். எஸ்.ஐ.பி-யை நிறுத்துவது அவ்வளவு உசிதமல்ல. எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து செலுத்தி வாருங்கள்’’ என்று முதலீட்டு ஆலோசகர்கள் இடைவிடாது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி சந்தை பற்றிய பயம், பணப் பற்றாக்குறையால் பலரும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி வருகிறார்கள்.

எஸ்.ஐ.பி ரத்து!

வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத நிலையில் எஸ்.ஐ.பி மூலம் யூனிட்டுகள் வாங்குவது தவிர்க்கப்படுகிறது. தற்போது இதுபோன்று பல முதலீட்டாளர்களுக்கு நடக்கிறது. முறையாக எஸ்.ஐ.பி முதலீட்டை ரத்து செய்யாமல், வங்கிக் கணக்கில் மட்டும் பணத்தை வைக்காமல் இருப்பது நல்லதல்ல. காரணம், நமது கணக்கில் பணம் இல்லையென்றால் பல நூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். இதற்கு மாறாக, பணவரத்து குறையும்போது ஒரு மாதத்துக்கு முன்னரே எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிடுவது நல்லது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்காலிக எஸ்.ஐ.பி நிறுத்தம்!

எஸ்.ஐ.பி-யை ஒருமுறை நிறுத்திவிட்டால் பெரும்பாலானோர் திரும்பவும் அதைத் தொடங்குவதில்லை; விட்டுப்போனது விட்டுப்போனதாகவே ஆகிவிடுகிறது. நிறைய ஃபண்ட் நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்கள் தற்காலிக எஸ்.ஐ.பி நிறுத்து முறையை (Pause) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் தற்காலிக எஸ்.ஐ.பி நிறுத்து முறை என்ற புதிய முறை மூலம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் எஸ்.ஐ.பி கட்டாமல் பின்னர் எஸ்.ஐ.பி-யைத் தொடரலாம். இதை ஆன்லைன் மூலம் செய்ய முடியும். இது எஸ்.ஐ.பி-யை ரத்து செய்வதைவிட சிறந்த தீர்வாக இருக்கும்.

எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி

எஸ்.ஐ.பி நிறுத்தத்தின் தாக்கங்கள்!

எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிடுவதால் ஏற்படும் விளைவுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் ஒரு குறிக்கோளுக்காக எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரும்போது குறிக்கோளை அடையும் காலம் அதிகரிக்கும். அல்லது குறிக்கோளுக்கான காலத்தில் கிடைக்கும் தொகை குறைவாக இருக்கும் என்பத நாம் மனதில் கொள்ள வேண்டும்.

எஸ்.ஐ.பி முதலீட்டைத்  தொடர்வதில் சிரமமா? - சிக்கலுக்கான தீர்வுகள்..!

தற்போதைய சூழலில், அதாவது சந்தை ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்பட்சத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி சரியலாம் என்ற யூகங்கள் ஒருபக்கம்; பணப்புழக்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பண வரவு சற்று குறைவாக இருப்பது இன்னொரு பக்கம். இந்த நிலையில், எஸ்.ஐ.பி முதலீட்டை முழுவதுமாகவோ, தற்காலிகமாகவோ நிறுத்துவது சரியான முடிவாகவே இருக்கும். முதலீட்டாளர்களுக்குப் பணப்பற்றாக்குறை தீரும்போது மீண்டும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism