Published:Updated:

மாத வருமானத்தில் 50% இ.எம்.ஐ சரியா? - வீட்டுக் கடன் கைடன்ஸ்

ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில் பல இலக்குகள் இருக்கலாம். ஆனால், வீடு வாங்க வேண்டும் என்பதற்காக எல்லா இலக்குகளையும் விட்டுவிட்டு அதற்கே மொத்தப் பணத்தையும் முதலீடு செய்துவிடக் கூடாது.

வீட்டுக்கடன்
வீட்டுக்கடன்

"வீடு வாங்கும்போது உங்களிடமிருக்கும் சேமிப்பு அனைத்தையும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், எதிர்பாராத செலவுகள் திடீரென ஏற்படலாம். நம்மிடமிருக்கும் தொகையில் முன்பணம் (Down payment) செலுத்துவதற்கு 70% வரை எடுத்துக்கொள்ளலாம். நம்மில் பலர் முன்பணம் செலுத்தக்கூட கடன் வாங்குகிறார்கள். உதாரணமாக, சந்திரசேகர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவர் வீடு வாங்குவதற்கு சோஷியல் பிரஷர் இருந்தது. ஆகையால், முன்பணத்துக்குக்கூட பர்சனல் லோன் வாங்க வேண்டிய சூழ்நிலை. அவர் வாழ்க்கையில் பிற்காலத்தில் உருவான பிரச்னைகளையும் கஷ்டங்களையும் சொன்னால், வீடு வாங்கும் ஆசையையே நீங்கள் விட்டுவிடுவீர்கள். மார்ஜின் தொகைக்கு பர்சனல் லோன் வாங்குவதைத் தவிர்க்க, அந்தத் தொகையை முன்னரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் அல்லது கடன் தொகையைக் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தால், இப்போதைக்குச் சிறிய வீடாகக் கட்டிக்கொண்டு பிறகு அதை விரிவாக்கம் செய்யலாம்.

ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில் பல இலக்குகள் இருக்கலாம். ஆனால், வீடு வாங்க வேண்டும் என்பதற்காக எல்லா இலக்குகளையும் விட்டுவிட்டு அதற்கே மொத்தப் பணத்தையும் முதலீடு செய்துவிடக் கூடாது. எனவே, உங்கள் மாத வருமானத்தில் இ.எம்.ஐ கட்டுவதற்கு 50 சதவிகிதத்துக்குமேல் ஒதுக்கக் கூடாது. போனஸ் வரும் அல்லது சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைத்து, அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வீடு வாங்கக் கூடாது.

வீட்டுக்கடன்
வீட்டுக்கடன்

ஏனென்றால் வரக்கூடிய அதிகபட்ச வருமானத்தில் வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்துடன் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்போது, உங்கள் அந்தஸ்தை உயர்த்துவதற்கான வாழ்க்கையை வாழ நீங்கள் முயலக்கூடும். அந்த வகையில் உங்களிடமிருக்கும் சேமிப்புப் பணம் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, பின்னாளில் வரும் வருமானத்தை மனதில் வைத்துக்கொண்டு கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

வீட்டின் மதிப்பு அதிகமாக இருந்தால், 25 - 30 ஆண்டுகள் வரை வங்கிகள் கடன் தருகிறார்கள். இந்தக் காரணத்துக்காக மட்டுமே பலரும் வீடு வாங்க முயல்கிறார்கள். வாங்கிய கடனைக் குறைந்த ஆண்டுகளில் (5 - 10 ஆண்டுகள்) செலுத்தினால், மாதத் தவணை அதிகமாக இருக்கும். இதுவே அதிக ஆண்டுகளில் (15-20 ஆண்டுகள்) செலுத்தினால் மாதத் தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் செலுத்தினால் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்குச் செலுத்தும் தொகை அதிகமாக இருக்கும். இவற்றையெல்லாம் ஆராய்ந்துவிட்டு செலுத்தக்கூடிய தொகையை இ.எம்.ஐ-ஆகக் கேட்டுப் பெறுங்கள்" என்ற நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, கடன் வாங்கிய பிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்துச் சொன்னார். "கடன் வாங்கிய பிறகு மாதந்தோறும் தவறாமல் தவணை செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், தவறாமல் இ.எம்.ஐ செலுத்தாவிட்டால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். ஆகையால், வீடு வாங்கும்போது மாதந்தோறும் நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை முதலில் எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தைக் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துங்கள்" என்றார் அவர்.

- வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்குவதற்கு முன்னரும், வாங்கிய பிறகும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக வழிகாட்டும் நாணயம் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > வீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |