Published:Updated:

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்! - ஒரு பக்கா பிளான்

ஓய்வுக்காலத்துக்கு
ஈஸி திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்

நீங்கள் ஓய்வுபெறும்போது ரூ.1 கோடி சேர்த்துவிட்டால், அதிலிருந்து மாதந்தோறும் சுமார் ரூ.50,000 பென்ஷன் வந்துவிடும்.

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்! - ஒரு பக்கா பிளான்

நீங்கள் ஓய்வுபெறும்போது ரூ.1 கோடி சேர்த்துவிட்டால், அதிலிருந்து மாதந்தோறும் சுமார் ரூ.50,000 பென்ஷன் வந்துவிடும்.

Published:Updated:
ஓய்வுக்காலத்துக்கு
ஈஸி திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்
மீபத்தில் சி.எஃப்.ஏ இன்ஸ்டிட்யூட், ஓய்வுக்காலம் பற்றிய ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, `வெறும் 18 சதவிகிதம் பேர்தான் இந்தியாவில் ஓய்வுக் காலத்துக்கான முதலீடு குறித்து கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். மீதியுள்ளவர்கள் குழந்தைகளின் கல்வியையும், திருமணத்தையும்தான் வாழ்க்கையில் முதன்மைப்படுத்துகிறார்கள்’ என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்த சதவிகிதம் மிகவும் குறைவு. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் ஓய்வுக்காலத்தில் அரசாங்கத்தின் ஆதரவு என்பதும் மிக மிகக் குறைவு. குழந்தைகளின் கல்விக்கும், குழந்தைகளின் திருமணத்துக்கும் கடன் வாங்கலாம். ஆனால், ஓய்வுக்காலத்துக்குக் கடன் வாங்க முடியாது. ஆகவே பொதுவாக ஒவ்வொருவரும் சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே, ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும்.

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்! - ஒரு பக்கா பிளான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு வேலையில் இருப்பவர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓய்வுக்காலத் திட்டங்கள் ஓரளவு நன்றாகவே உள்ளன. ஆனால், சிறிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், சிறுதொழில் புரிபவர்கள், அமைப்புசாரா துறைகளில் வேலை செய்பவர்கள், புரொஃபஷனல்கள், கான்ட்ராக்ட் வேலை செய்பவர்கள் போன்ற அனைவருக்கும் போதிய அளவு ஓய்வுக்காலப் பாதுகாப்பு எதுவும் இல்லை. இன்றிலிருந்து அவர்கள் சேமிக்க / முதலீடு செய்ய ஆரம்பித்தால்தான் அவர்களின் ஓய்வுக்காலம் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.

முதலீட்டாளர்களை, பொதுவாக மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். கன்சர்வேட்டிவ், மாடரேட், ஹை குரோத். இந்த மூன்று வகைகளுக்குமான அஸெட் அலொகேஷனையும், அந்தந்த கேட்டகரியில் உள்ள முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தையும் அட்டவணை 1 மற்றும் 2-ல் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு சொத்து வகையிலும் என்னென்ன முதலீடுகள் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கின்றன என்பதை அறிந்துகொள்வோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடன் சார்ந்த முதலீடுகள் (Debt)

பி.பி.எஃப்: இருக்கும் கடன் சார்ந்த முதலீடு களிலேயே பெஸ்ட் பி.பி.எஃப் (பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்). செய்யும் முதலீட்டுக்கு வரிவிலக்கு, முதலீட்டிலிருந்து பெறப்படும் வட்டிக்கு வரிவிலக்கு, மொத்த மெச்சூரிட்டி தொகைக்கும் வரிவிலக்கு என மூன்று ஸ்டேஜ்களில் வரிவிலக்கு கிடைக்கும் அருமையான முதலீடு இது. அரசாங்க உத்தரவாதம் கூடுதல் பலம். ஒருவர் திவாலாகும்போது, நீதிமன்றம் இந்தச் சொத்து வகையை இணைக்க முடியாது என்பது இந்த முதலீட்டுக்கான ஸ்பெஷல்.

ஓய்வுக்காலம்  திட்டம்
ஓய்வுக்காலம் திட்டம்

பிற கடன் சார்ந்த முதலீடுகள்: கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், இ.பி.எஃப்., வி.பி.எஃப்., ஆர்.பி.ஐ பாண்டுகள், வங்கி டெபாசிட்டுகள், டிபெஞ்சர்கள், என்.பி.எஸ்-ல் இருக்கும் பாண்ட் ஃபண்ட் முதலீடுகள், அஞ்சலகச் சேமிப்புகள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் எனப் பல வகைகள் கடன் சார்ந்த முதலீடுகளில் உள்ளன. இவை அனைத்திலுமே முதலீடு செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. ஒருவரின் தேவைக்கேற்ப சில வகை முதலீடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓய்வுக்காலம்  திட்டம்
ஓய்வுக்காலம் திட்டம்

பங்கு சார்ந்த முதலீடுகள் (Equity)

பங்கு சார்ந்த முதலீடுகளில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலானோருக்கு உகந்ததாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகள் பொதுவாகக் கடும் சட்டதிட்டங்களுக்கு மத்தியில் நடத்தப்படுகின்றன. மேலும், பலவித ஆப்ஷன்களைத் தருவதுடன், குறைந்தபட்சமாக சிறு முதலீட்டாளர்கள் ரூ.100-லிருந்து மாதாந்தர முதலீட்டை ஆரம்பிக்கலாம். ரிட்டயர்மென்ட் ஃபண்ட் கேட்டகரியே தனியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்யும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் பெற்றுக்கொள்ளலாம்.

`சிக்கலில்லாமல் ஓரிரு ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்தால் போதும்’ என நினைப்பவர்கள் மல்டிகேப் மற்றும் லார்ஜ் அண்ட் மிட்கேப் கேட்டகரியிலுள்ள ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்தால் போதுமானது. லாக்இன் வசதியை விரும்புபவர்கள் ரிட்டயர்மென்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்! - ஒரு பக்கா பிளான்

பிற ஈக்விட்டி திட்டங்கள்: நேரடிப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, என்.பி.எஸ்-ல் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது போன்றவை பிற ஆப்ஷன்கள். நேரடிப் பங்குச் சந்தை முதலீடு என்பது மிகவும் மெச்சூர்டு முதலீட்டாளர்களுக்குத்தான் சரிப்பட்டு வரும். என்.பி.எஸ்-ல் செய்யும் முதலீட்டுக்கு, 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் ரூ.1.5 லட்சத்துக்குமேல் ரூ.50,000 வரை வரி விலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஈக்விட்டியில் முதலாவதாக மியூச்சுவல் ஃபண்டுகளிலும், அடுத்த லெவலில் என்.பி.எஸ்-லும் முதலீட்டை மேற்கொள்வது சிறந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கம்

எஸ்.ஜி.பி: முதலீட்டுக்காகத் தங்கத்தை வாங்க நினைப்பவர்களுக்கு சாவரின் கோல்டு பாண்டுகள் (SGB – Sovereign Gold Bonds) சிறந்தவை. வருடத்துக்கு 2.5% வட்டி, செலவு ஏதும் இல்லாமல் கிடைப்பதுடன், கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸும் இல்லை.

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்! - ஒரு பக்கா பிளான்

பிற தங்க முதலீடுகள்: சாவரின் கோல்டு பாண்டுகளில் அதிக லாக்இன் இருக்கிறதே என நினைப்பவர்கள், கோல்டு ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யலாம். கோல்டு கடைசி ஆப்ஷனாக கோல்டு காயின்ஸை வைத்துக்கொள்ளலாம்.

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸி திட்டம்! - ஒரு பக்கா பிளான்

நீங்கள் ஓய்வுபெறும்போது ரூ.1 கோடி சேர்த்துவிட்டால், அதிலிருந்து மாதந்தோறும் ரூ.50,000 (வருடத்துக்கு வட்டி 6% எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது) பென்ஷன் வந்துவிடும். அந்த ரூ.1 கோடியை வெவ்வேறு வயதில் உள்ளவர்கள் 60-வது வயதில் அடைய எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அட்டவணை-3-ல் கொடுத்துள்ளோம். அட்டவணை 1 மற்றும் 2-ல் உள்ள விகிதப்படி முதலீடு செய்வீர்கள் எனில், குறிப்பிட்ட வருமானம் கிடைக்கக்கூடும்.

உங்களின் ரிஸ்க் லெவலை அறிந்து அதற்கேற்ற முதலீடுகளைத் தேர்வுசெய்து, ஓய்வுக்காலத்தை இனிமையாக்கிக்கொள்ளலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism